20 May 2014

கணவன் மாத்திரை மூலமா மனைவிக்கு சொல்லவருவது .....!

''நான் மாத்திரையைச் சாப்பிடலாமான்னு  
என்கிட்டே ஏன் கேக்கிறீங்க ?''
''அரை மணி நேரத்திலே டிபன் ரெடி ஆயிடுமான்னு கேட்டா கோவிச்சுக்கிறீயே!''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! மனுஷன் சாப்பிடலாமா நாய் பிஸ்கட்டை ?

''பிஸ்கட் சாப்பிட்டுக் கிட்டிருந்த உங்களை ,உங்க நாயே  ஏன் கடிச்சது ?''
''அதோட பிஸ்கட்டை நான் டேஸ்ட் பண்ணிப் பார்த்தது ...அதுக்கு பிடிக்கலைப் போலிருக்கே !'''சிரி'கவிதை!புத்தராலும் இவர்கள் திருந்தவில்லை !

ஆசையே அழிவுக்குக் காரணம் என்ற 
புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்ட 
சீனர்களும் சிங்களர்களும் 
மண் ஆசையை இன்னும் விட்ட பாடில்லை !

36 comments:

 1. Replies
  1. தன் பங்கு குறையும் என்றால் நாய் கூட நன்றி மறந்து விடும் போலிருக்கே ,சீனி ஜி !
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  கோபம் மட்டுமா.... ??
  நன்றாக உள்ளது தலைவா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கொட்டிக்கிறதிலேயே குறியா இருங்க,ஒரு நாளாவதுஎனக்கு இப்படி சமைச்சு போடுறீங்களா என்று சண்டை வேறு !வீட்டுக்கு வீடு வாசப்படி ?
   நன்றி

   Delete
 3. ஓஹோ நாசூக்காக இப்படியும்
  சொல்லலாமா ?
  அனைவருக்கும் பயன்படும் சூட்சுமம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. சூட்சுமத்தின் மறைவாய் இருக்கும் சுயநலத்தை தெரிந்து கொண்டு மனைவி சண்டை பிடித்தால் ஜோக்காளி பொறுப்பல்ல !
   நன்றி

   Delete
 4. Replies
  1. இது நல்ல ஐடியாவா இருக்கா ?
   நன்றி

   Delete
 5. 1. மருந்து தின்னும் வேளையில் குரங்கை நினைக்கலாமா?..
  2. நல்ல நாய்!..
  3. இனிமேல் - புத்தர் நேரில் வந்து சொன்னாலும் திருந்த மாட்டானுங்க!..

  ReplyDelete
  Replies
  1. 1.நினைக்க கூடாது தான் ,புவ்வாவுக்கு குரங்கைத் தானே நம்ப வேண்டி இருக்கு !
   2.அப்படின்னா இவரோட பிஸ்கட்டை அது தின்னு பார்த்திருக்கலாமே ?
   3.அப்படின்னா திருந்த வாய்ப்பே இல்லேயே!
   நன்றி

   Delete
  2. 1. அப்படின்னு -- முடிவே செய்தாயிற்றா!?..
   2. அவன் தின்னும் பிஸ்கெட் நல்லா இல்லாதது தானே - பிரச்னை!..

   Delete
  3. 1.மனம் ஒரு குரங்குன்னு சொன்னா ,நீங்க என்னை புவ்வாவுக்குலாட்டரி அடிக்க விட்டு விடுவீங்க போலிருக்கே !
   2.நாய்க்கும் ,மனுசனுக்கும் ஒரே பிஸ்கட் தயார் பண்ணச் சொல்ல வேண்டியதுதான் !
   நன்றி

   Delete
 6. அட மூன்றாவது சொல்ல வரும் விஷயம் - எத்தனை பேர் சொன்னாலும் கேட்காத ஒரு விஷயம்....

  முதலாவது - இது தான் ”மாத்தி யோசி”

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது ...அவர் மாத்தி யோசித்ததால் நாய்க்கடிப் பட்டு கிடக்கிறார் !
   நன்றி

   Delete
 7. நானும் ஷுகர் மாத்திரையை சாப்பிடுவதற்கு முன்பு மனைவியிடம் கேட்டுவிட்டுத்தான் சாப்பிடுவேன். நல்ல மூடில் இருந்தால் சரி என்பார். இல்லையென்றால் இப்ப என்ன அவசரம் என்பார் :(

  ReplyDelete
  Replies
  1. சில நேரங்களில் மாத்திரையை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் ,வயிற்றுக்குள் தள்ள எதுவும் கிடைக்கவில்லை என்றால் படும் அவதி இருக்கே ...அது தனி கதை !
   நன்றி

   Delete
  2. இந்த ஜோக்கை, சீரிஸான ஒரு விசயமாக்கிவிட்டார் ( :( ) , திரு ஜோஸப்!

   அவர், :( க்கு பதிலா :) போட்டு இருக்கலாம்! :-)

   Delete
  3. சீரியஸ் ஜோக் ஆவதும்,ஜோக் சீரியஸ் ஆவதும் சகஜம்தானே ?
   நன்றி

   Delete
 8. மூன்றாவது செய்தி - ஊருக்கு தான் உபதேசம், தங்களுக்கு கிடையாது என்று சொல்லுபவர்கள் தான் அவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படிப்பட்டவர்களை அம்பலப் படுத்தும் வேலையை காங்கிரஸ் அரசு செய்யாததும் கூட அது படு தோல்வி அடைத்ததற்கு காரணம் போல் தெரிகிறது !பலவீனமான அரசு போய்விட்டது ,இனி எப்படியோ ?
   நன்றி

   Delete
 9. மாத்திரை சாப்பிட
  டிபன் ரெடி ஆயிடுமா?
  நல்ல கேள்வி

  ReplyDelete
  Replies
  1. நான் மாத்திரை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் டிபன் ரெடி ஆகணுங்கிற மறைமுக மிரட்டல் தான் அது ?
   நன்றி

   Delete
 10. உணவே மருந்தான காலம் மாறி
  மருந்தே உணவாக பலருக்கு உள்ளது!
  இதில் குரங்கின் குறுக்கீடு வேறயா?

  மதத்தை பிடித்தவர்களுக்கு மதம் பிடித்தால் இப்படித்தான் போலஜி

  ReplyDelete
  Replies
  1. மருந்துக்காக உணவை சாப்பிட்டே ஆக வேண்டிய நிலைமை உருவாகி விட்டது !

   இன்னிக்கு பிஸ்கட்டை சாம்பிள் பார்த்து ,நல்லா இருக்கேன்னு மொத்தத்தையும் சாப்பிட்டு விடுவாரோ என்ற பயம் நாய்க்கு !

   யானையை பிடித்த மதத்தை அங்குசத்தால் அடக்கி விடலாம் ,மனிதனை ....?
   நன்றி

   Delete
 11. Replies
  1. நாய் பிஸ்கட்டைக் கூட மனுஷன் மறைந்திருந்து தான் சாம்பிள் பார்க்கணும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 12. சூப்பர் ஜோக்ஸ் ரெண்டுமே! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நாய் பிஸ்கட்டும் சூப்பர்ன்னு அவர் சொன்னதா கேள்விபட்டேன் !
   நன்றி

   Delete
 13. ஓ... இதுதான் சர்க்கரை தடவிய கேள்வியா!

  பாவம் நாய்!

  திருந்தாத ஜென்மங்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஒரு வேளை சுகர் கோட்டட் பில்ஸ் சாப்பிடுவாரோ ?

   நாலு ரொட்டியை அதுக்கும் போட்டுட்டு சாப்பிட்டு இருந்தா ,கோவப்பட்டிருக்காது!

   இருந்தென்ன லாபம் ?
   நன்றி

   Delete
 14. 1.செய்யலாம்

  2.செய்யக்கூடாது.

  3.செய்யக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. 1.எதை டிபனையா?
   2.பிஸ்கட் பாக்கெட் வாங்குறவருக்கு தின்று பார்க்க உரிமை இல்லையா ?
   3.என்பதை புதிய அரசு உணர்த்தினால் நல்லது !
   நன்றி

   Delete
 15. //அரை மணி நேரத்திலே டிபன் ரெடி ஆயிடுமான்னு கேட்டா கோவிச்சுக்கிறீயே!''
  //

  ஹஹஹா செம்ம டெக்னிக்..

  ReplyDelete
  Replies
  1. டெக்னிக்கை புரிந்து கொண்ட இல்லாள் 'டிபன் ரெடியான பின்னாடி மருந்தைச் சாப்பிடுங்க 'என்று சொல்லி விட்டதாக அறிந்தேன் !
   நன்றி

   Delete