26 May 2014

பார்ப்பதற்கு மட்டும் அழகாய் இருந்தால் போதுமா ?

''என்னங்க ,TVல் 'செய்து பார்ப்போம் 'னு காட்டிய சமையலை பண்ணியிருக்கேன் ,எப்படிங்க இருக்கு ?''
''விளங்கலே ,இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா பாரு !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!டெலிவரியில் மட்டும் பிரச்சினை வரவேகூடாது !
''மகளிர் பேங்க் ,மகளிர் காவல் நிலையம் மாதிரி அனைத்து மகளிர் போஸ்ட் ஆபீஸ் திறந்தா என்னாகும் ?''
''எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே !''
'சிரி'கவிதை!உதடுகள் செய்யும் நல்ல காரியம் ?


ஜோக்காளிப் பய பாடினான் ...
'ஆரிய உதடுகள் உன்னது '
சேட்டுப் பொண்ணுவின்  எதிர்ப்பாட்டு ...
'திராவிட உதடுகள் உன்னதா ?'
'இல்லை ..நல்ல காரிய உதடுகள் என்னது !'

32 comments:

 1. Replies
  1. டிவி சமையல் சாப்பிடுற மாதிரி இருக்கா ,சீனி ஜி ?
   நன்றி

   Delete
 2. சமையலை அவர் செய்தால் விளங்கிடும்...! ஹா... ஹா...

  ReplyDelete
  Replies
  1. TV ல் செய்து காட்டியவரும் ஆண்தான் ,உங்கள் ஐடியா ஒர்க் அவுட் ஆகும் போலிருக்கே !
   நன்றி

   Delete
 3. அப்ப சீக்கிரம் நீங்க தொலைக்காட்சியில தலையை காட்டப்போறீங்கன்னு சொல்லுங்க..
  (செய்து சாப்பிடுவோம் நிகழ்ச்சியைத்தான் சொல்றேன்)

  ReplyDelete
  Replies
  1. தலைப்பை பார்த்தீங்களா பன்மையில் உள்ளது ,அதனாலே உதவிக்கு நீங்களும் வரீங்க ,சரியா ?
   நன்றி

   Delete
 4. ஆரிய உதடு - ஆறிய உதடு ஆகாம பாத்துக்கங்க..!?..
  இருந்தாலும் சூரிய உதடுகளாக மாறி சுட்டுடும்..!?..

  ReplyDelete
  Replies
  1. இது இன்னொரு ஆர்ய பவன் ,எப்பவும் சுடச் சுட கிடைக்கும் ருசிப்போரைக் 'கண்டவுடன் சுட' உத்தரவு பறக்கும் !
   நன்றி

   Delete
 5. நகைச்சுவை ரசித்தேன். சிரித்தேன்

  ReplyDelete
  Replies
  1. மூங்கில்வழியே புகுந்த காற்று குழலின் நாதமாய் வெளிப்பட்டு தந்த சுகம் போலிருக்கிறது உங்களின் கருத்து !
   நன்றி

   Delete
 6. டி.வி. நிகழ்ச்சி பார்த்து சமையல்... - ரொம்பவே கஷ்டம் தான்! :)))

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. TVல் சமையல் ராணிகள் சொல்வதையும் ,செய்வதையும் பார்த்தால் ...ஏதோ விஞ்ஞானி ஐன்ஸ்டீன் போல புதிய கண்டுபிடிப்பை விளக்குவது போல் பில்ட் அப் கொடுப்பார்கள் ,எனக்கு சிரிப்பா சிரிப்பாத்தான் வரும் !
   நன்றி

   Delete
 7. ''..இனிமே 'செய்து சாப்பிடுவோம் 'னு நிகழ்ச்சி வந்தா பாரு !''
  What a reply!!!!
  .''...எல்லோரும் டெலிவரி லீவிலே போயிட்டா ,தபால் டெலிவரி ஆகாதே..'' ha!...ha!-...haaaaa..!!!!!!
  ''..காரிய உதடுகள் என்னது !'........good ...
  நல்ல சிரிப்பு....
  நன்றி...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. அவங்க சொல்ற ஐட்டங்களைப் பார்த்தால் புதிதா ஏதும் இருக்காது !
   அவங்க அவங்களுக்கு அனங்க டெலிவரி முக்கியமாச்சே !
   கீழே ,நம்ம ஸ்ரீ ராம் சார் 'சரியாப் புரியலே 'ங்கிறாரே !
   நன்றி

   Delete
 8. 1) என்ன வித்தியாசம்? அதான் வித்தியாசம்!!!! ஹா.ஹா..ஹா..

  2) டெலிவரி ப்ராப்ளமா!

  3) ஆரிய - காரிய...? சரியாப் புரியலை!

  ReplyDelete
  Replies
  1. 1.அழகு சுவைக்க தூண்டும் ருசியாய் இருந்தால் தானே நிறைவு கிடைக்கும் ?
   2.சிசேரியன் பண்ணி விடலாமா ?
   3.சில நாட்களுக்கு முன் 'முத்த ஆராய்ச்சி'செய்த உங்களுக்கா புரியலே ?
   நன்றி

   Delete

 9. 'செய்து பார்ப்போம்'னு
  'செய்து சாப்பிடுவோம்'னு
  அப்புறம்...?

  ReplyDelete
  Replies
  1. அப்புறமென்ன ,சாப்பிட செரிக்காமே சோர்ந்து படுக்க வேண்டியதுதான் !
   நன்றி

   Delete
 10. அவுங்க பக்கத்ல இருக்கற ஆளு எப்பவும் ஒரே மாதிரி வார்த்தயத்தான் சொல்றாரு. அங்க ஒரு நாய நிறுத்தி வச்சு ஒரே மாதிரி பேசவச்சா வூட்டுக் கொளந்தங்களும் பாக்கும்.

  கோபாலன்

  ReplyDelete
  Replies
  1. அது எப்படி இருக்கும்னு தெரியாது ஆனால் ...சாப்பிட்டு பார்த்து ...வாவ் என்கிறதும் செம டேஸ்ட் என்று புரூடா விடுறவங்களை பார்த்து ,நீங்க சொல்றமாதிரி ஒரு நாயைக் குறைக்க வைத்தால் நல்லாத்தான் இருக்கும் !
   நன்றி

   Delete
 11. அதானே...பார்ப்பதற்கு மட்டும் அழகா இருந்தா...போதுமா???

  ReplyDelete
  Replies
  1. வேறென்ன வேணும் ,சொன்னாத்தானே தெரியும் ?
   நன்றி

   Delete
 12. Replies
  1. ரசிக்க முடியலேன்னு நாலு பேர் சொன்னா நான் எழுதுவதையே நிறுத்திவிடுவேன் !
   நன்றி

   Delete
 13. உங்கள் ஜோக்குகளையே தூக்கிச் சாப்பிடுகின்றன பின்னூட்டங்களுக்கான உங்களின் சில பதில்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. ஜோக் நாலு வரி ,கமெண்ட் நாற்பது வரியில் ரசிக்கும் படியா இருக்கணும்,அதுதான் ஜோக்காளியின் பாணி!
   நன்றி

   Delete
 14. அதுவும் சரிதான்
  அப்படி ஒரு நிகழ்ச்சியை
  ஆவலுடன் எதிர்பார்த்து....

  ReplyDelete
  Replies
  1. காத்திருந்து காத்திருந்து காலங்கள் போயிடுத்தா ?வயிறும் காய்ஞ்சுப் போச்சா ?
   நன்றி

   Delete
 15. ரசிக்க வைத்த சிரிப்புக்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஒரே டெலிவரியில் பிறந்த மூன்றுமே ரசிக்க வைக்கிறதா ?
   நன்றி

   Delete