28 May 2014

புடவை செலக்ட் செய்ய ஒரு இரவு வேணுமாம் !

''கடையை அடைக்கப் போறோம் ,சீக்கிரம் புடவையை செலக்ட் பண்ணுங்க !''
''பரவாயில்லே ,பூட்டிட்டுப் போங்க ...காலையில் நீங்க வந்து திறக்கிறதுக்குள் எல்லாவற்றையும் ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!பிறப்புதான் அப்படீன்னா வாழ்நாளிலுமா ?

''உங்க பையன் ஓசி ஓசின்னு அலைய ,அவனோட பிறப்புதான் காரணமா ,எப்படி ?''
''பிரசவத்துக்கு இலவசமா வந்த ஆட்டோவிலே பிறந்தவனாச்சே !''


'சிரி'கவிதை! காதலன் ,காதலி என்றாலும் தப்புதான்  !

இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது 
கள்ளச்சாவிகள்தான் !

34 comments:


 1. "இல்லறப் பூட்டுக்களை கெடுப்பது
  கள்ளச்சாவிகள்தான்!" என்பது
  உண்மை தான்!
  பெண்கள் கண்கள்
  புடைவைகளில் வீழ்ந்தால்
  ஓரிரவு போதாது தான்!

  ReplyDelete
  Replies
  1. பூட்டு தரமா இருந்தா எந்த கள்ளச் சாவி நுழைந்தாலும் திறந்து கொள்ளாது!
   இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கிற சேலையாவது கணவன் கண்ணுக்கு குளிர்ச்சி தந்தால் சரிதான் !
   நன்றி

   Delete
 2. மூன்றும் அருமை.

  கவிதை மிக சூப்பர். கள்ளச்சாவிகளுக்கு இடம் கொடுக்காமல் இருப்பதில் தான் இல்லறப்பூட்டுக்களின் திடத்தை அறிய முடியும்.

  ReplyDelete
  Replies
  1. திண்டுக்கல் பூட்டில் நுழையும் சாவியில் ஆண் சாவி ,பெண் சாவி என்று இரண்டு வகை இருப்பது தெரியுமா சொக்கன் ஜி ?
   நன்றி

   Delete
  2. அப்படியா என்ன???
   எனக்கு தெரியாது.

   Delete
  3. google ஆண்டவரிடம் கேட்டு தெரிஞ்சுக்குங்க ,அப்படியும் தெரியலைன்னா நம்ம பாஸ் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் கேட்டுக்குங்க !
   நன்றி

   Delete
 3. புடவையைத் தேர்ந்தெடுக்க பெண்களுக்கு ஓர் இரவுதானா....?
  பத்தாதுங்க....

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,ஒரிரவில் புருஷனை வேண்டுமானால் புரிஞ்சிக்கலாம் !
   நன்றி

   Delete
 4. Replies
  1. உங்களிடம் கள்ள உறவு வழக்குகள் நிறைய வருகிறதாமே ,உண்மையா லாயர் ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. எல்லாமுமா ?
   நன்றி

   Delete
 6. அப்புறமும் என்ன சொல்றாங்கனு கவனியுங்க... பாத்து வைக்கிறேன் தான். பாவம் புருஷன் புள்ளைங்க எல்லாம்......

  ReplyDelete
  Replies
  1. மறுநாள் பூட்டுவதற்குள் டிரையல் பார்த்து செலக்ட் செய்து விடுவார் என்று நிச்சயமா நம்பலாம் !
   நன்றி

   Delete
 7. புடவை செலக்ட் செய்யும் ஒருகட்டத்திற்குள்ளாக
  பெண்களை அடைத்துப்பார்க்கிற சோகம்
  ரொம்பக்காலமாய் நடக்கிறதுதான்.

  ReplyDelete
  Replies
  1. அதுவும் நான் செய்து இருப்பது இன்னும் கொடுமை ...கட்டிடத்திற்குள் வேறு பூட்டி விட்டேன் .பெண்ணுரிமைப் போராளிகள் சார்பில் நீங்கள் சொல்லி இருப்பதன் அர்த்தம் புரிகிறது !
   நன்றி

   Delete
 8. Replies
  1. செலக்ட் செய்யப் போவது புருஷனை என்றால் ஒருநாள் என்பது தாராளம் !
   நன்றி

   Delete
 9. அதுவும் சரிதான்

  ReplyDelete
  Replies
  1. இந்தம்மா சேலை பார்டரை பார்க்கணும்னு பிரிச்சி போட்டு இருக்கிற மலைக் குவியலைப் பார்த்து சேல்ஸ்லேடி மயங்கி விழுந்து விட்டதா கேள்வி பட்டேன் !
   நன்றி

   Delete
 10. 1. அநியாயம்.. அக்கிரமம்..
  2. ஆட்டோவுக்கு - ஒரு பத்து ரூபாயாவது கொடுத்திருக்கலாம்..
  3. !?..

  ReplyDelete
  Replies
  1. 1.எது நியாயம் ..எது அக்கிரமம்னு கடை அதிபர் முடிவு பண்ணிக்கட்டுமே !
   2.அந்த புண்ணியவான் வேண்டாம்னு சொன்னதும் இல்லாம ,சிசுவின் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்துட்டு போயிருக்கார் !
   3.முதலில் பார்வைக்கு ஆச்சரியமா தெரிவதுதான் ...ரொம்பவும் நெருங்கினால் இருப்பையே கேள்விக் குறி ஆக்கி விடுகிறது !
   நன்றி

   Delete
 11. ஒரு இரவு போதுமா?......ஆசையை அளவிட முடியாதே!!!

  ReplyDelete
  Replies
  1. ஆசையை அளவிட இதென்ன முதல் இரவா ?
   நன்றி

   Delete
 12. 1) அப்போவாவது செலெக்ஷன் முடிஞ்சிருக்குமா மேடம்?
  2) இலவச ஜோக்!
  3) ஹா...ஹா...ஹா

  ReplyDelete
  Replies
  1. 1.அதான் பார்த்து வைக்கிறேன்னு சொல்றாங்களே புரியலையா ?
   2.இவன் இலவச ஆட்டோவிலே பிறந்த மாதிரி ,இவன் பையன் இலவச கால் டாக்சியில் பிறப்பானோ?
   3.சீரியஸ் மேட்டருக்கு இப்படி சிரிக்கலாமா ?
   நன்றி

   Delete
 13. காலையில் எதுவுமே பிடிக்கில! சொன்னாலும் சரி!

  ReplyDelete
  Replies
  1. வேற கடையிலே ராத்திரி தங்க வேண்டியதுதான் !
   நன்றி

   Delete
 14. புடவை தேர்வு செய்ய ஓர் இரவு போதாதே... :(((

  ReplyDelete
  Replies
  1. Take your own time என்று கடைக்காரர் சொல்லி விட்டதால் ரெண்டு நாளாவது ஆகும்!
   நன்றி

   Delete
 15. 1. //.....ஒரு பார்வை பார்த்து வைக்கிறேன்.// செலெக்ட் பண்ண மாட்டாங்களோ?!

  2. சினிமா கொட்டகையில் பிறந்திருந்தா சினிமா சினிமான்னு அலைவானோ!?

  3. கள்ளக் காதலர்களுக்கு மரண அடி!!!

  ReplyDelete
  Replies
  1. 1.பெண்களின் ரசனை என்னவென்று யாருக்கு தெரியும் ?
   2.எதிர் நீச்சல் படம் பார்க்கும் போது பிறந்து இருந்தால் எதிர்நீச்சல் போட்டு முன்னேறி இருப்பானோ என்னவோ?
   3.அதுசரி ,பூட்டி இருக்கும் வரைதான் உள்ளே இருப்பதை அறிய ஆவலாய் இருக்கும் !
   நன்றி

   Delete