30 May 2014

மனைவிகிட்டே என்ன கேட்டிருப்பார் ,இப்படி கோபம் வர ?

''உங்க மனைவிக்கு மூக்குக்கு மேலே உச்சபட்ச கோபம்  வருதா ,எப்படி ?''
''நெற்றியில்  இருக்கிற மஞ்சள் ஸ்டிக்கர்  பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர்  !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

ஸ்ரீ தேவி ,கமல்,தீபா ரசிகராய் இருப்பாரோ ?

'' கோகிலா இல்லம்னு இருந்த பழைய வீட்டை 

இடிச்சுக் கட்டுறீங்க ,புது வீட்டுக்கு என்ன பெயர் 

வைக்கப் போறீங்க ?''

''மீண்டும் கோகிலா இல்லம்னே வைக்கப் 

போறேன்  !''
'சிரி'கவிதை!

பாட்டுக்கோர் ஒரு தலைவன் TMSக்கு அஞ்சலி !

'பாவத்தோடு 'உச்சரிப்பு சுத்தமான 
 பாடல்களை கேட்டுவிட்டு ...
கொலைவெறி பாடல்களை கேட்காமல் போன 
நம் முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் !

43 comments:

 1. கோபம் என்றால் முகம் சிவக்குமோ

  ReplyDelete
  Replies
  1. அதையும் மீறி பொட்டும் சிவப்பது எதற்கு அறிகுறியோ ?
   நன்றி

   Delete
 2. ரசித்தேன், சிரித்தேன்

  ReplyDelete
  Replies
  1. கோபம் வந்தால் மூக்கும்,கண்ணும் சிவக்கும் .ஆனால் பொட்டும் சிவக்க வாய்ப்பிருக்கான்னு டாக்டர் நீங்கதான் சொல்லணும் !
   நன்றி

   Delete
 3. அவர் மனைவிக்கு நெற்றிக்குள்ள ஒரு கண் இருக்கு, சிவபெருமான் மாதிரி!!!

  ReplyDelete
  Replies
  1. கோபத்தைக் கிளறி விட்டால் எரித்து விடுவாரோ ?
   நன்றி

   Delete
 4. Replies
  1. 'மீண்டும் கோகிலா 'புதுமனை திறப்பு விழா அன்னைக்கு சாப்பிட்ட சாப்பாட்டைத்தானே சொல்றீங்க ?
   நன்றி

   Delete
 5. பொட்டு சிவக்கிற அளவுக்கு கோவம் வருமா???
  எனக்கு சிரிப்பு தான் வருது....ஹீ ஹீ ஹீ ...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு சிரிப்பு வருது ,அங்கே அவரோட வீட்டுக்காரர் என்ன ஆனாரோ ?
   நன்றி

   Delete
 6. மூன்றும் முத்துக்கள் த.ம.3

  ReplyDelete
  Replies
  1. அதனால் முதல் முறையா த ம 3 வாக்கு இட்டதற்கு நன்றி !

   Delete
 7. அப்போ நிச்சயம் கையில் இருக்கிற எதுவும்
  ஆயுதமாவது நிச்சயம்
  புருஷன்பாடு கஷ்டம்தான்

  ReplyDelete
  Replies
  1. ஆயுதம் கிடைக்கா விட்டாலும் நெற்றிக்கண்ணால் எரிப்பது நிச்சயம் !
   நன்றி

   Delete
 8. மூன்றும் மூன்றுமுத்துக்கள்...ஆகவே வேட்டு சாரி வோட்டு த.ம 3

  ReplyDelete
  Replies
  1. உங்க வேட்டுக்கு திரி ரொம்ப நீளம் போலிருக்கு ,வெடிப்பதற்குள் சகோ .ரமணி சாரின் வெடி வெடித்து விட்டது !
   நன்றி

   Delete
 9. Replies
  1. மூன்றாவது வேட்டுக்கு நன்றி !

   Delete
 10. Replies
  1. மாங்கல்யம் அருள்வாள் சிவசக்தி ங்கிற பாடல் இங்கே பொருத்தமா படலே!
   நன்றி

   Delete
 11. நன்று! நெற்றிக் கண்ணோ!!!

  ReplyDelete
  Replies
  1. சினம் கூடினால் இவளும் பெண் சிவனாகி விடக்கூடும் !
   நன்றி

   Delete
 12. வணக்கம் சகோதரர்
  கோபம் என்றால் பொட்டும் சிவக்குமென்று இன்று தான் கேள்விப்படுகிறேன். இனிமே உணருவேன் என்று நினைக்கிறேன். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரர்.

  ReplyDelete
  Replies
  1. ஓ...உங்க கல்யாணம் நெருங்கி விட்டதா ?டோன்ட் ஒர்ரி ...நெற்றிக் கண்ணிலும் ஒரு கூலிங் கிளாஸை திருமணப் பரிசாய் மாட்டி விட்டிடுங்க ,கூலாய் இருக்கலாம் !
   நன்றி

   Delete
 13. ''..மஞ்சள் ஸ்டிக்கர் பொட்டுகூட சிகப்பா மாறிடுதே,டாக்டர் !''
  Ha!...ha!.....
  ''..''மீண்டும் கோகிலா...'' oh!...ho!......
  ''..முன்னோர்கள் 'புண்ணியம் 'செய்தவர்கள் ...'''
  sati thaan...... good..good....sirippu varuthu...uuu....
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. அபாய அறிவிப்பு சிகப்பையும் மீறி ,மீண்டும் கோகிலா வீட்டிற்கு வந்து ,புண்ணியம் கட்டிக் கொண்டதற்கு நன்றி !

   Delete
 14. அப்படீனாக்கா......சிவப்புகலர் பொட்டு வச்சா ?
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. அரக்கு கலர் ஆகலாம் ,மனைவி அரக்கியும் ஆகலாம் !அது உங்க யோகத்தைப் பொருத்தது !
   நன்றி

   Delete
 15. அன்பின் பகவான் ஜீ - பதிவு அருமை - மீ.கோ.இ - மிக மிக இரசித்தேன். த.ம. வாக்கு 6 - நல்வாழ்த்துகள் = நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. புது வீட்டுக்கு வந்து சாப்பிட்டு மொய் வச்சதுக்கு நன்றி ஐயா !

   Delete
 16. அந்த அளவிற்கு கோபம் வருமா!! பாவம் கணவன்.

  உண்மையை புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் கவிதையில்.

  ReplyDelete
  Replies
  1. அவர் கொடுத்து வச்சது அவ்வளவுதான் ,அனுபவிக்கிறார் !

   அய்யா TM சௌந்தர்ராஜன் என்றாலே ,அவரோட சௌந்தர்யமான உச்சரிப்பு ஞாபகம் வருமே !
   நன்றி

   Delete
 17. 1. இவருக்கு மூக்கு அடிபட்டு சிவக்காத வரைக்கும் நல்லது தானே!..
  2. மீண்டும் அதே கோகிலாவா!?...
  3. உண்மைதான்..

  ReplyDelete
  Replies
  1. 1.அதுக்கு வாய்ப்பு மிகவும் குறைவு !
   2.கோகிலா மீதான மோகம் குறையலையே!
   3.ஹும், அய்யா TMS குரல் மீண்டும் வருமா ?
   நன்றி

   Delete
 18. நெற்றிக் கண்ணாக மாறிவிட்டதே பொட்டு! :)

  மீண்டுக் கோகிலா இல்லம் - ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் ஆகும்னு முன்னாடியே தெரியாமப் போச்சே !

   modified வீடு நல்லாத்தானே இருக்கும் ?
   நன்றி

   Delete
 19. வணக்கம்
  தலைவா...

  நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ரூபன் ஜி !

   Delete
 20. Replies
  1. கோகிலா இன்னும் கண்ணிலேயே நிற்கிறாரா ?வாழ்த்துக்கு நன்றி சுரேஷ் ஜி !

   Delete
 21. வேற யாராவது இருந்தா சீக்கிரம் வாங்க ,கடையை அடைக்கப் போறேன் !

  ReplyDelete
 22. கடையை அடைக்க ஏன்? அவ்வளவு அவசரம்........

  ReplyDelete
  Replies
  1. இன்னைக்கு வியாபாரம் பார்த்தீங்கன்னா 40 c (c யின்னாcomments) தொட்டுவிட்டது,அதான் இந்த அவசரம் !
   நன்றி

   Delete