4 May 2014

சினிமாப் பாட்டை இப்படியா கொலைவெறியா ரசிக்கிறது ?

''என்னடா ஆச்சு உனக்கு ?சினிமாப் பாட்டைக் கேட்டுகிட்டே ...பாவம் அந்த குழந்தைங்கிறே?''
''கண்ணன் 'ஒரு கை ' குழந்தையாமே ?''சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!வக்கீல் புருஷனை வாதத்தில் ஜெயிக்க முடியுமா ?


''என்னங்க ,கேஸ்  கட்டை எடுக்க  மறந்து 

கோர்ட்டுக்குப் போறீங்களே , நீங்கெல்லாம் பெரிய 

கிரிமினல் லாயரா ?''  

''அதை குக்கர்லே கேஸ்கட்டை  போட மறக்கிற  நீ 

 சொல்றீயாக்கும் ?''


'சிரி'கவிதை!வாழ வைக்கும் அமெரிக்காவுக்கு ஜே !

USA  பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டாலும் ...

அங்கே பணிபுரியும் நம்மவர்கள் ...

கையிலே டாலர்  ,செண்ட்டும் மட்டுமின்றி 

கழுத்திலே தங்க டாலரும் ,வாசனை செண்ட்டுமாய் 

ஜொலிக்கிறார்கள் !மணக்கிறார்கள் !30 comments:

 1. ஹல்லோ ஹலோ ,மைக் டெஸ்டிங் ,ஒன் ஒன் ஒன்(அடுத்தது மறந்து போச்சே )

  ReplyDelete
 2. ரசிக்க வைத்த நகைச்சுவைப் பகிர்வுகளுக்கு வாழ்த்துக்கள் சகோதரா :)

  ReplyDelete
  Replies
  1. லாயர் கேஸ் கட்டை மறந்தாலும் நீங்கள் மறக்காமல் கமெண்ட் போட்டதற்கு நன்றி !

   Delete
 3. அருமை நண்பரே
  தமிழ் மனம் ஓட்டுப் போடத்தான் இயலவில்லை
  ஏனென்று தெரியவில்லை

  ReplyDelete
  Replies
  1. அய்யகோ ,இதென்ன கொடுமை ?வாக்குரிமை இருந்தும் வோட்டு போடஇயலவில்லையா ?யாரிடம் சென்று முறையிடுவது என்றே தெரிய வில்லையே !
   உங்களின் முன்னோரும் ,பின்னோரும் வோட்டு போட்டுள்ளார்களே,மறுபடியும் முயற்சி செய்து பாருங்கள் ஜி !
   நன்றி

   Delete
 4. உங்கள் பதிவுகளில் உள்ள நகைச்சுவையை ரசித்துப் படிப்பவர்களில் நானும் ஒருவன். இருந்தாலும் எல்லா பதிவுகளுக்கும் தொடர்ச்சியாக கருத்துரை வழங்க நேரம் இருப்பதில்லை.

  உங்கள் திறமைக்கு ஜோக்குகளை மட்டுமே எழுதாமல், ஒரு பக்கக் கட்டுரைகளையும் பதிவினில் எழுதலாம்.
  த.ம.3.

  ReplyDelete
  Replies
  1. #கருத்துரை வழங்க நேரம் இருப்பதில்லை.#
   இதே பிரச்சினை தான் எனக்கும் ,முயற்சிக்கிறேன் !
   நன்றி

   Delete
 5. கொலை வெறி தான்...

  கேஸ் கட் - ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. கண்ணனைப் போய் இப்படி பார்க்க எப்படித்தான் மனசு வந்ததோ தெரியலே !
   நன்றி

   Delete
 6. ஸ்ஸ்.. தாங்கமுடியல..??!..

  ReplyDelete
  Replies
  1. வெயில் உச்சபட்ச நேரத்திலே இப்படித்தான் இருக்கும் ,கொஞ்ச நாளில் வசந்தம் வந்துடும் !
   நன்றி

   Delete
 7. வணக்கம்

  நகைச்சுவை நன்றாக உள்ளது..தலைவா.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கண்ணன் ஒரு கை குழந்தை ரசிக்காமல் இருக்க முடியாதே ,ரூபன் ?
   நன்றி

   Delete
 8. கொலையையே ரசிக்கும்போது சினிமா பாட்டை கொலை வெறியாய் ரசிப்பதில்லா தப்பு..

  ReplyDelete
  Replies
  1. அதுதானே ,சினிமாவில் ரசித்தால்கூட விட்டு விடலாம் ,நேரிலேயே ரசிக்கிறார்களே !
   நன்றி

   Delete
 9. வக்கீல் ஜோக் சூப்பர். சாதாரணமா ஜோக் எழுதறது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். ஏனெனில் நானும் ஒரு காலத்தில் நகைச்சுவை பதிவுகளை இட்டு வந்தவந்தான். அதற்கென்று ஒரு இன்ஸ்ப்பிரேஷன் வரவேண்டும். அப்போது மிக எளிதாக வந்துக்கொண்டிருந்த எனக்கு இப்போது ரூம் போட்டு யோசித்தாலும் வரமாட்டேன் என்கிறது. ஆனால் நீங்க எப்படிங்க வருசக்கணக்கா விடாம எழுதறீங்க? ஆச்சரியமா இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. உங்களின் நீண்ட பதிவுகளைக் காணும்போது ,நான் எழுதுவதெல்லாம் ஜுஜுபி என்றுதான் படுகிறது ,தினசரி ஒரு பதிவாவது போடவேண்டும் என்ற எண்ணமே எதையாவது எழுத வைத்து விடுகிறது !
   நன்றி

   Delete
 10. ஜோக்ஸ் ரெண்டும் கலக்கல்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு வேண்டிய யாரும் அமெரிக்காவில் இல்லை போலும் ?
   நன்றி

   Delete
 11. வெற்றி வெற்றி
  காலையில் வோட்டுப் போட இயலவில்லை
  எனவே மாலை மீண்டும் வந்தேன்
  வோட்டுப் போட்டுவிட்டேன்
  தம 6

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் வெற்றிதான் !வாசகர் பரிந்துரையில் வந்திருக்கும் நேற்றைய என் பதிவுக்கு வோட்டு போட்டவர்கள் மாயாவிகளாக இருந்தவர்களின்அழகான ரூபத்தை இப்போது பார்க்க முடிகிறது!
   அயராது முயற்சித்து வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்!
   நன்றி

   Delete
 12. உங்க நிறைய ஜோக்
  புரியும் அளவுக்கு என் மண்டையில் இல்லை சரக்கு...ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. அதுக்கென்ன ,இனிமேல் அருஞ்சொல் பொருள் விளக்கமும் கொடுத்தாப் போச்சு !
   நன்றி

   Delete
 13. அந்தக் குழந்தை
  ஒரு கைக் குழந்தையாமே?
  பாட்டிலா? வீட்டிலா?

  ReplyDelete
  Replies
  1. வீட்டிலே பாட்டிலில் பால் குடிக்கும் கைக் குழந்தை !
   நன்றி

   Delete
 14. Replies
  1. நானும் அந்த பாடலை விரும்பி ரசிப்பதுண்டு !
   நன்றி

   Delete
 15. நித்தநித்தம் ஜோக் எழுதும் பகவானே
  நிச்சியமாய் நீங்களொரு சுகவானே
  சித்தமது மகிழ்ந்திடவே பகவானே
  செப்புவது அனைத்துமே நகைவானே!

  ReplyDelete
  Replies
  1. எத்தனைப் பேருக்கு கிடைக்கும் இந்த பேறு
   சந்தோசத்தில் இறங்கவில்லையே சோறு
   அய்யாவுக்கு நன்றி கூற வழி ஒன்றை மனமே நீ கூறு
   வாழ்க பல்லாண்டு என்பதன்றி இல்லை ,வார்த்தை வேறு !

   Delete
 16. ரசித்தோம்! கேஸ்கட் நல்ல வார்த்தை விளையாட்டு!!!!! ஜி!

  சிரி கவிதை சூப்பர் ஜி!!!

  ReplyDelete