19 May 2014

வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் ?

''அந்த பட விளம்பரம் பண்றவர் மொடாக் குடிகாரராய் இருப்பார் போலிருக்குன்னு ஏன் சொல்றே ?''
''வல்லவனுக்கு FULLலும் ஆயுதம் என்றே சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்! A .R .ரகுமானுக்கு பிடிக்காத வார்த்தை !

''இவ்வளவு வருசமாகியும் நாடு முன்னேறலேங்கிற வருத்தம் உங்களுக்கு நிறைய இருக்கும் போலிருக்கே !''
''ஆமா ,எப்படி கண்டுபிடிச்சீங்க ?''
''தாய் மண்ணே 'சுணக்கம் 'ன்னு அடிக்கடி பாடுறீங்களே !''


'சிரி'கவிதை!எங்குமுள்ள ஓட்டைகள் !

ஒட்டடை சொல்லும் உண்மை ...
ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும் என்று !
ஓட்டை மனம்தான் கேட்க மறுக்கிறது !


30 comments:

 1. ஓ ...அப்போ இது அந்தப் FULL லா ?...:))

  ReplyDelete
  Replies
  1. உங்களின் போன கமெண்டுக்கு பதில் போட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நீங்கள் இங்கே கமென்ட் போட்டு உள்ளீர்கள் ..நம் மன அலை நீளம் ஒன்றுபோல இருக்கிறதே !

   அதே fullதான் ,வல்லவனுக்கு புல்லுன்னா கோழைக்கு குவாட்டரும் ஆயுதமான்னு நீங்கதான் சொல்லணும் !
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  தலைவா..

  நகைச்சுவை சொல்லி சொல்லி எங்களை சிரிக்கவைக்கின்றீர்கள்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. 'மலர்'ந்துள்ள புதிய ஆட்சியிலாவது நாடு முன்னேறுகிறதா என்று பொறுத்துஇருந்து பார்ப்போம் !
   நன்றி

   Delete
 3. தேர்தல் முடிவுகளைப்பார்த்தால் 'கட்டிங்' கூட ஆயுதம்தான் என்பது "தெளிவாகிறதுஜி!

  ReplyDelete
  Replies
  1. 'கட்டிங் 'க்கே ஆயுதம் என்றால் half எல்லாம் பேரழிவு ஆயுதம் போலிருக்கே !
   நன்றி

   Delete
 4. இப்படி விளம்பரம் பண்ணினா, படம் ஓடாது; படுத்துரும்!!!

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னு நமக்கு தோணுது ,டாஸ்மாக் ஆதரவாளர்கள் புண்ணியத்தால் படம் ஒடக்கூடுமே ?அவர்கள் எண்ணிக்கை மெஜாரிட்டி ஆச்சே !
   நன்றி

   Delete
 5. Replies
  1. என்ன ஜி ,நீங்க சொன்னமாதிரி மோடி ஜெயிச்சாச்சு ,தாய் மண்ணின் சுணக்கம் மாறும்னு எதிர்ப் பார்க்கலாமா ?
   நன்றி

   Delete
 6. கடைசிக் கவிதை மிக அருமை.
  அந்த ஓட்டை மனத்தையும் அடைத்து விட்டால் நன்றாக தான் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. மனதை சுத்தம் செய்யும் நல்ல ஒட்டடைக் குச்சியைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன் !
   நன்றி

   Delete
 7. Full Form-ல் இருக்குறீங்க போல... ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி...,நான் என்னைக்கும் அந்த full Formமிலோ .half formமிலோ இருந்ததில்லை !
   நன்றி

   Delete
 8. வணக்கம், சுணக்கம் நல்ல காமடி!

  ReplyDelete
  Replies
  1. நான் போன வருஷம் சொன்ன சுணக்கம் தான் இந்த தேர்தலில் எதிரொலித்து விட்டதோ ?
   நன்றி

   Delete
 9. கிழி
  கிழி கிழி
  கிழிகிழிகிழி......!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த டயலாக் மானாட மயிலாட நிகழ்ச்சியில் வர்றதாச்சே?
   நன்றி

   Delete
 10. அவரு சரியாத்தான் சொல்றார் ஜீ அந்த வல்லவனுக்கு FULL தானே ஆயுதம்..

  ReplyDelete
  Replies
  1. யார் வல்லவன் ,என்னா புல்லு ?ஒண்ணுமே புரியலையே ...தெளிஞ்சாதான் புரியும் ?நன்றி

   Delete
 11. ஒட்டடை சொல்லும் உண்மை ...

  ஓட்டைகள் அடைக்கப்படவேண்டும்
  நல்லா ஓட்றீங்க பகவான்ஜீ ஸார்....
  Killergee
  www.Killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. சின்ன வயசுலே ...குறுக்கெழுத்து விளையாட்டில் அடைக்க பட வேண்டிய சதுரங்கள் என்பதை விரும்பி அடைத்ததுண்டு ,அதுதான் இப்பவும் அடைச்சுகிட்டு இருக்கேன் !
   நன்றி

   Delete
 12. நீங்க சொன்னதோட ஃபுல் அர்த்தம் புரிஞ்சது! :)

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை ,உங்க ஒருத்தருக்காவது புரிந்ததே ,சந்தோசம் !
   நன்றி

   Delete
 13. ஹாஹாஹா !!!வல்லவனுக்கு Full ம் ஆயுதம் சரிதான்! அதான் தியேட்டரும் Full ஆகுதா?!!!!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. அதனால் தானா என்று எனக்கு டௌட்புல்லா இருக்கு !
   நன்றி

   Delete
 14. வல்லவனுக்கு FULLலும் ஆயுதமா?
  அப்ப
  நம்ம தெருவால
  பெண் பிள்ளைகள் போக இயலாதே!

  ReplyDelete
  Replies
  1. கவலைப் படாதீர்கள் ,குடிகாரனுக்கு அது ஆயுதமல்ல ,மெல்லக் கொல்லும் விஷமாச்சே!
   நன்றி

   Delete
 15. ஹாஹாஹா! “கலக்கல்” ஜோக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. எதையும் கலக்காமல் ராவாய் அடிக்கிறவன் பற்றிய ஜோக் கலக்கலாய் இருக்கிறதா ?
   நன்றி

   Delete