2 June 2014

பணம் இருந்தால்தான் மனதில் பலம் இருக்குமோ ?

''ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் போயிடுச்சேன்னு உங்க வீட்டுக்காரர் மனநிலை ரொம்பவும் பாதிக்கப் பட்டிருக்காரா ,எப்படி ?''
''ஷேர்  ஆட்டோவில்கூட ஏறமாட்டேன்னு  பயப்படுறாரே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

வாத்தியார் ரொம்ப விவரம்தான் !

''நீங்க வாத்தியாரா வேலைப் பார்க்கிற

பள்ளியில்தான் ,  +2வில் மாநிலத்திலே முதல் இடம் 

வந்த  உங்க பொண்ணும் படிக்குதா ?''


''இல்லே ,வேற ஸ்கூல் ...எதுக்குக் கேக்குறீங்க ?''

''அதானே பார்த்தேன் ,நல்லா  சொல்லி தர்றதுக்கு 


உங்க  ஸ்கூல்லே யாரும் இல்லையே !''


'சிரி'கவிதை!

தூளி அசைந்தால் தாயின் தூக்கம் ?

தூளியில் தூங்கும் குழந்தை 
தாய்க்கு தந்தது ...
ஒரு துளி தூக்கம் !
36 comments:

 1. Replies
  1. ஹர்சத் மேஹ்தாவை பற்றி கேள்விபட்டபவர்களுக்கு ஷேர் மார்க்கெட் சேச் சே மார்க்கெட்தான் !
   நன்றி

   Delete
 2. ஷேர் மார்க்கெட் சுப்பர்.
  சிரி கவிதை அல்ல அது சரி(யான) கவிதை. அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஷேர் மார்க்கெட் இப்போ ஏறுமுகத்தில் சூப்பராய்தான் இருக்கு !இதுக்கும் ஒரு வில்லன் முளைக்காமல் இருக்கணும் !

   பிள்ளை வளர்க்க தாய் படும் வேதனை ஈடு இணை இல்லாததுதான் !
   நன்றி

   Delete
 3. 1. அந்த அளவுக்கு அடி பலமா விழுந்திருக்கு.. பாவம் !?..
  2. +2 ஜோக் போன வருஷம் போட்டதா !..
  3. கவிதை.. கவிதை !..

  ReplyDelete
  Replies
  1. 1.ஷேர் மார்க்கெட்டில் சம்பாத்திக்க தனி திறமை வேண்டி இருக்கே !
   2.நம்பர் ஒன்று மட்டும்தான் நடப்பு பதிவு !
   3.குட்டிக் குழந்தையைப் பற்றிய குட்டிக் கவிதை !
   நன்றி

   Delete
 4. ஷேர் மார்க்கெட்
  ஷேர் ஆட்டோ
  இரண்டுக்கும் போட்ட முடிச்சு
  நல்லாச் சிந்திக்க வைக்கிறதே!

  ReplyDelete
  Replies
  1. அதனாலே தான் நானும் உங்ககிட்டே அதை ஷேர் பண்ணிகிட்டேன் !
   நன்றி

   Delete
 5. பயம எப்படியெல்லாம் பயம் காட்டகிறது..

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்ப்பு அதிகமா இருந்தா பயமும் அதிகரிக்கத்தானே செய்யும் ?
   நன்றி

   Delete
 6. 1) ஹா..ஹா..ஹா..

  2) அடப்பாவமே...

  3) உண்மை.

  ReplyDelete
  Replies
  1. 1.பணத்தை நீங்க போட்டு இழக்கலே,அதான் சிரிக்கிறீங்க !
   2.தொழிலில் மக்கு ,ஆனால் விவரமான அப்பன் ?
   3.தூளி தந்த சுகம் ?
   நன்றி

   Delete
 7. இரண்டு ஜோக்கும் அருமை! சிரி கவிதை அல்ல சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கமெண்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 8. நகைச்சுவையும் கவிதையும் நன்றாகவுள்ளன.

  ReplyDelete
  Replies
  1. மூன்றாவது மனிதன் யாரும் சொல்லவேண்டாம் ,முனைவர் நீங்க சொன்னதே எனக்கு போதும் !
   நன்றி

   Delete
 9. 1. ஷேர்ன்ற வார்த்தைக்கே பயப்படுவார் போல இருக்கு!!!

  2. இது வந்து ஹோட்டல்ல வேலைப் பார்க்கிறவங்க கிட்ட, நீ இந்த ஹோட்டல்ல தான் சாப்பிடுவியான்னு கேக்குற மாதிரி இருக்கு.

  3. உண்மை. நல்ல கவிதை.

  ReplyDelete
  Replies
  1. 1.share க்கு பயப்படுவதால் முகநூல் பக்கம் கூட வர மாட்டார் போலிருக்கே !
   2.இங்கே மனுஷன் சாப்பிடுவானான்னு கேட்ட நமக்கு எப்படி இருக்கும் ?
   3.தூக்கம் மட்டுமா துளி ,கவிதையுமதானே?
   நன்றி

   Delete
 10. Replies
  1. 1.ஷேரில் பணம் போடாததால் இந்த சிரிப்பா ?
   2.டீச்சர் என்பதால் இந்த முகச்சுளிப்பா ?
   3.இது எனக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமா இருக்கா ?
   நன்றி

   Delete
 11. பகவான்ஜி, மொட்டைத்தலையையும் முழங்காலையும் முடிச்சுப்போட்டீங்க போல.....
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. அதுவும் யாராலும் அவிழ்க்க முடியாத முடிச்சு !
   நன்றி

   Delete
 12. பணத்தோட பாதிப்பு எப்படியெல்லாம் வேலை செய்யுது பார்த்தீங்க பார்த்தீர்களா!
  ஸ்ரீ ஸ்ரீ பகவான் ஜி கலக்கிட்டீங்க போங்க. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீ ஸ்ரீ களுக்குத்தான் பணத்தின் மதிப்பு நல்லாத் தெரியுமே ,அதனால் எனக்குமா ஸ்ரீ ஸ்ரீ ?
   நன்றி

   Delete
 13. இரு ஜோக்குகளும் ஜோராயிருக்கின்றன.
  கவிதையும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. நிஜமாத்தான் சொல்லுறீங்களா ,நிஜாமுதீன் ?
   நன்றி

   Delete
 14. பயம் அது எப்பவும் இருக்கும்..இன்னும் எது எதுக்கெல்லாம் பயப்படுவாருன்னு தெரியலியே...

  ReplyDelete
  Replies
  1. சொத்து இருந்தா பிள்ளைங்களுக்கு ஷேர் பண்ணி தராமலே போய் சேர்ந்திடுவார் !
   நன்றி

   Delete
 15. அடி பலமாய் இருந்தால்
  பாதிப்பெயர் கேட்டாலும் பாதிக்கத்தானே செய்யும் ?

  ReplyDelete
  Replies
  1. திசை மாறி வந்த கமெண்ட் மாதிரி தெரியுதே !
   நன்றி

   Delete
 16. Replies
  1. இது திசை மாறாமல் வந்திருக்கே ,நன்றி

   Delete
 17. ஷேர் மார்க்கெட் - சோக மார்க்கெட் ஆகிப்போனதே.....

  மற்றவற்றையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. காய்கறி மார்க்கெட்டில் நல்ல காயை எடுக்கிற மாதிரி ஷேர் மார்க்கெட்டில் நல்ல கம்பெனிபங்குகளை வாங்கத் தெரிந்தால் பொழச்சுக்கலாம்!
   நன்றி

   Delete