Saturday, 28 June 2014

இந்த மறதி வரக் காரணம் ,மனைவியிடம் 'கடி 'வாங்கியதாலா ?

''மேலே உட்கார்ந்து ஆயிரம் கொசு கடிச்சாலும் ,கடிக்கிற உணர்வேதெரியமாட்டேங்குதா..எப்போ இருந்து இப்படி ?'' 
''ஒருநாள் தெரியாத்தனமா டூத் பேஸ்ட்டிற்கு பதிலா ,கொசு விரட்டி கிரீமினால் பல்தேய்ச்சதில் இருந்துதான் டாக்டர் !''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

ஜாக்கிரதை ,நாக்கு நம்மை கவிழ்த்து விடும் !

'' அந்த உவமைச் சக்கரவர்த்தி என்ன சொல்றார் ?''
''வெளியே வந்த பேஸ்ட்டும் சரி ,பேச்சும் சரி ,மீண்டும் உள்ளே  போகாதுங்கிறாரே !''



'சிரி'கவிதை!

'இது 'ஒரு' தந்தையின் சுயநலம் மட்டுமில்லை !

என் ஆதர்ச குருவும் எனக்கு பிடிக்காமல் போனார் ...
நானும் விவேகாநந்தராய் ஆகப் போகிறேன் என்று 
என் ஆசைமகன்  சந்நியாசம் வாங்கியதால் !

24 comments:

  1. கொசுக்கடி அருமை பகவான்ஜீ.

    ReplyDelete
    Replies
    1. கொசுக்கடியும் அருமைன்னு சொல்றவரை இப்போதான் பார்க்கிறேன் !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    சம்பவம் மாறிப்போச்சு.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இப்போ நடப்பது கிரீம்களின் காலம்தானே ?
      நன்றி

      Delete
  3. மூன்றுமே மூன்று வகை. மிக்க அருமை ஜி.... த.ம -1

    ReplyDelete
    Replies
    1. மூன்றில் எது சிறந்த வகைன்னு கண்டுபிடிங்க ஜி !
      நன்றி

      Delete
  4. மூன்றுமே அருமை ஜி....

    ReplyDelete
  5. மூன்றுமே சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மூன்றும் சிறப்பு என்று மூவருமே சொல்வதற்கு நன்றி !

      Delete
  6. பார்த்து அந்த இரண்டாவது பஞ்ச் வசனத்தை யாராவது சினிமாக்காரங்க சுட்டுடப்போறாங்க!!!!!

    ReplyDelete
    Replies
    1. சுட்டு பார்க்கட்டும் ,உங்களையே சாட்சியா வைத்து வழக்கு போட்டு விடுகிறேன் !
      நன்றி

      Delete
  7. டாஸ்மாக்கை விட, இது சூப்பரா....இருக்கே.........

    ReplyDelete
    Replies
    1. எனக்கு அனுபவம் இல்லாததால் டாஸ்மாக்கில் எது சூப்பர் என்று தெரியவில்லை !
      நன்றி

      Delete
  8. Replies
    1. காலையிலேயே வரும் உங்களை காணவில்லையே என்று தூக்கமின்றி தவித்துக் கொண்டிருந்தேன் ...கமென்ட் போட்டு தூக்கம் தந்தமைக்கு நன்றி !

      Delete
  9. சூப்பர்! சூப்பர்! சூப்பர்! அதிலும் கொசுக்கடி கொசுக்கள் எல்லாம் வாய்ல மாட்டிகிச்சோ?!!

    ReplyDelete
    Replies
    1. வாயில் இருந்து துப்பிய நுரையில் ஓடியும் போயிருக்கும் ?
      நன்றி

      Delete
  10. கொசு விரட்டி கிரீமினால் பல் தேய்ச்சதில் இருந்து
    கொசு கடிக்கவில்லையா?
    நல்லாயிருக்கு ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் கடிக்கத்தான் செய்கிறது ,உணர்வுதான் தெரியவில்லை ...கடிக்காட்டி எல்லோரும் இந்த முறையை கடை பிடித்து விடலாமே !
      நன்றி

      Delete
  11. மூன்றுமே ரசித்தேன் - முதல், முதல் இடத்தில்!

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. முதல் ஜோக்குக்கு முதல் இடமா ?நல்லது !
      நன்றி

      Delete