Tuesday, 3 June 2014

ம'னை'வி என்றாலே சந்தேகப் படுவதா ?

" மனைவிக்கு எத்தனை சுழி'ன' போடணும்னு அவர் கிட்டே  கேட்டது தப்பா போச்சா ,ஏன் ! "
" முதல் மனைவியா,  இரண்டாவது மனைவியான்னு  கேட்கிறாரே  !

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின'சிரி ' ஜோக்!!

''புத்தகத்திலே  செல்லுபடி தேதின்னு புதுசா போட்டு இருக்காங்களே ,ஏன் ?''
''மேஜிக் மாஸ்டர் எழுதிய அந்த புக்கை பத்து நாள்லே படிக்கலேன்னா , எழுத்துக்கள் மாயமா மறைங்சுடுமாம் !''

'சிரி'கவிதை!

ஆணின் ஆசைக்கும் எல்லை உண்டா?

தான் விரும்பும் ...
பெண்ணின் மனதில் உள்ளதை படமாய் பார்க்க நினைக்கிறது ...
அவள் கனவினையும் 'வீடியோ 'வாய்  பார்க்க நினைக்கிறது !

28 comments:

  1. முதல் மனைவிக்கு ஒரு சுழி
    இரண்டாம் மனைவிக்கு இரண்ட சுழியா
    பலே
    தம 1

    ReplyDelete
    Replies
    1. இப்படி கேட்ட மனுஷனுக்கு தலையில் ரெட்டைச் சுழி இருக்குமோ ?
      நன்றி

      Delete
  2. முதல் இரண்டும் ஜோரோ ஜோர்! மூன்றாவது ஜோர்!

    ReplyDelete
    Replies
    1. புத்தகம் வாங்குபவர் எண்ணிக்கை குறைவு ,வாங்கிய பின் படிப்பவர்கள் எண்ணிக்கையும் குறைவு .இப்படி எழுத்து மறைந்து விடும் என்று ஒரு நெருக்கடி இருந்தாலாவது படிப்பார்களா ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. அதுக்கு மேலும் மணமுடித்து மாட்டிக் கொள்ளும் கல்யாண மன்னர்களைப் பற்றித்தான் அடிக்கடி பேப்பரில் பார்க்கிறோமே !
      நன்றி

      Delete
  4. அப்படி ஆகிப்போச்சு. நிலம... என்னங்க...ஜீ

    ReplyDelete
    Replies
    1. காலையில் பேப்பரைப் பார்த்தால் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை இந்த செய்திகளாத்தானே இருக்கு ?
      நன்றி

      Delete
  5. எந்த மனைவியின்
    எந்தச் சுழியென
    இடறி விழுகிறாரே!

    ReplyDelete
    Replies
    1. இடறி விழலேன்னா அவர் கணவனே கிடையாதே !
      நன்றி

      Delete
  6. அட அதுவும் சரிதான்
    சுழியை வைத்து கண்டுபிடித்துவிடலாமே
    கேட்டு வருகிற பொல்லாப்பு வேண்டாமே இல்லையா

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் இந்த சுழி ராசி பொருந்தாதே !
      நன்றி

      Delete
  7. அப்ப தலையில ஒருத்தருக்கு இரண்டு சுழி, மூன்று சுழி எல்லாம் இருக்கிறதே, அதற்கு என்ன அர்த்தம்?

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே வாழை மரத்திற்கோ,கழுதைக்கோ தாலி கட்டியிருக்கார்னு எடுத்துக்கலாமே ?
      நன்றி

      Delete
  8. பொண்டாட்டி னு எழுதினா சுழி பிரட்சினை வராதே பகவான்ஜி.
    www.killergee.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. அதிலே வர்ற ண் னுக்கு எத்தனை சுழி என்ற கேள்வி வருமே ?
      நன்றி

      Delete
  9. அந்த கேள்வியை மனைவிக்கிட்டயே கேட்காம போனாரே......

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உனக்கேன்யா இந்த வேண்டாத ஆசை எல்லாம்னு மானத்தை வாங்கி இருப்பாங்களா ?
      நன்றி

      Delete
  10. சிரி ஜோக் அருமை ஜி! சிரி கவிதை மிகவும் அருமை! ஜி!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,கொஞ்ச நாளா நம்ம ஜோக்காளிப்பேட்டை பக்கம் வரலியே ,அடுத்த படம் தயார் ஆகிக்கிட்டிருக்கா ?
      நன்றி

      Delete
  11. சுழி(ளி) இவருக்கு அதிகமாவே வேலை செய்திருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. தலையிலும் ரெண்டு சுழி இருக்குமோ ?
      நன்றி

      Delete
  12. .." முதல் மனைவியா, இரண்டாவது மனைவியான்னு கேட்கிறாரே !...'''

    ஓகோ!....கோ!....

    அடக் கடவுளே!.....எழுத்துக்கள் மாயமா மறைஞ்சுடுமா !''
    கனவினையும் 'வீடியோ 'வாய் பார்க்க நினைக்கிறது !
    நன்று நன்று..ரசித்தேன்..
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி !

      Delete
  13. சோ மனைவியை வைச்சு காமெடி பண்றீங்க :) வீட்ல அண்ணிகிட்ட போட்டுக்கொடுக்கவா பாஸ்:)

    ReplyDelete
    Replies
    1. சோ ?அவர் மனைவியை வைச்சு நான் எப்போ காமெடி பண்ணினேன் ?
      நன்றி

      Delete