Monday, 30 June 2014

இதுக்குத்தான் வயசுப் பயலுங்கள நம்பக்கூடாதுங்கிறது !

''கூப்பிட்ட மறு நிமிஷமே கால் டாக்ஸிக்காரன்  வாசல்லே வந்து நிற்கிறான்னா நல்ல பிக் அப் தானே ?இதுக்கு ஏன் வருத்தப் படுறீங்க ?''
''என் பொண்ணையும்  பிக் அப் பண்ணிக்கிட்டு ஓடிட்டானே  !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

பெண்டாட்டியை தேடிக்கலாம் ,நகையை ?

''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
''சரி நான் என்ன செய்யணும் ?''
''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சுக் கொடுங்க போதும் !''


'சிரி'கவிதை!

பெண்கள் நிறைய அழுதால் தாய்ப்பால் குறையுமோ ?

பெண்களின் கண்ணீருக்கும் ,தாய்ப்பால் சுரப்புக்கும் காரணம் ...
ஒரே ஹார்மோன்தான்  என்பதை நம்ப முடியவில்லை !
கணவன் விசயத்தில் தாராளமாகவும் 
குழந்தை விசயத்தில் குறைவாகவும் உற்பத்தி ஆகிறதே !


30 comments:

  1. முதலிரு நகைச்சுவையும்
    மூளைக்கு
    அதிகம் வேலை கொடுக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. நல்லதுதானே ?
      நன்றி

      Delete
  2. ஆகா
    நகையை கண்டுபிடித்துக் கொடுத்தால் மட்டும் போதுமா

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவருக்கு இன்னும் பொன்னாசை விடவில்லை !
      நன்றி

      Delete
  3. நல்ல கால் டாக்ஸி டிரைவர்...!

    ReplyDelete
    Replies
    1. மகளை கடத்திக்கிட்டு போனவனின் காலை வெட்டணும்னு இங்கே துடிச்சுகிட்டு இருக்கார் அப்பன்காரன் ,நீங்க என்னடான்னா ,நல்ல 'கால் 'டிரைவர்ன்னு சொல்றீங்க !
      நன்றி

      Delete
  4. Replies
    1. நல்ல வேளை,வயசுப் பயலா இருக்கப் போய் மகளை பிக் அப் பண்ணிக்கிட்டு போனான் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. தங்களின் ரசனைக்கு என் மனம் நிறைந்த நன்றி !

      Delete
  6. ஓ!அவ்வளவு பாசம் மனைவி மீது? த.ம 3

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் இது டூ மச் தான் !
      நன்றி

      Delete
  7. பகவான்ஜீ அந்த கால்டாக்ஸிகாரன் எவ்வளவு நாளா பிக்அப் பண்ணிகிட்டு இருக்கான் ?

    ReplyDelete
    Replies
    1. ஓடிப்போன அந்த பெண்ணிடம்தான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  8. அடடா....இதுக்குதான்..வயசு பயலகள நம்பக்கூடாதா.....

    ReplyDelete
    Replies
    1. பொண்ணுங்களை பெத்தவங்க எப்படியெல்லாம் பாடுபட வேண்டிஇருக்கே !
      நன்றி

      Delete
  9. பிக்கப் பண்றதேயில்ல இருக்காங்களே ரெண்டுபேரும்! ஹாஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. நல்லா பண்றாங்கய்யா பிக்கப்பு !
      நன்றி

      Delete
  10. நல்ல பிக் அப் .......ha..ha....
    நகைப்பாசம்..
    பேஷ்!..பேஷ்!...
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. முப்பதிவுக்கு உங்கள் மூவரி கருத்துக்கு நன்றி !

      Delete
  11. இது பயங்கர பிக்கப்-ஆ இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. எங்கே எப்படி எதுவெல்லாம் பிக் அப் ஆகிறது கமிசன் போட்டுதான் ஆராயணும் போலிருக்கே !
      நன்றி

      Delete
  12. Replies
    1. மிக்க நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  13. ஹாஹாஹா...சூப்பர் பிக் அப்! அதான் "கால்" டாக்சியோ?!!!!! மற்றவையும் அருமை!!! ஜி! எப்படியெல்லாம் சிரிக்க வைக்கின்றீர்கள்!!!! இதில் சிரி கவிதை சிந்திக்கவும் வைத்தது!

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. இப்படி அலும்பு பண்ணினா கால்(call) டாக்சியை அழைக்க எப்படி மனசு வரும் ?
      தாய்ப்பால் ஹார்மோன் விசயத்தை படித்ததால் பிறந்தது அது !
      நன்றி

      Delete
  14. மூன்றுமே முத்துக்கள்.
    ரொம்ப சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ,நன்றி நன்றி சொக்கன் ஜி !

      Delete