13 July 2014

நடிகைன்னா எந்த கூச்சமும் இருக்காதா ?


''எனக்கு கூச்சம் அதிகம்னு...அந்த கவர்ச்சி நடிகை பேட்டியில் சொல்லியிருப்பது , உண்மைதானா ?''
''பல் கூச்சத்தைப் பற்றி சொல்லி இருப்பாங்க !''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

நண்டுக்கறி ,நண்டுவருவல் ,நண்டுக் கொழம்பு பிடிக்கும் ஆனா ...

''முதலாளிக்கு நண்டுலே ஆக்கின 

எல்லாமும் பிடிக்கும் !''

''பிறகேன் ,தொழிலாளிங்க பெர்ம'நண்டு 'ஆக்கச்  

சொன்னா பிடிக்க மாட்டேங்குது ?''

'சிரி'கவிதை!

ஜாக்கெட்டா .சேப்டி மினி லாக்கரா ?

மனைவிமார்கள் கணவனை நெஞ்சிலும் ...
அவன் தந்த  பணத்தை   நெஞ்சுக்கு அருகிலும் வைத்து 
போற்றிப் பாதுகாக்கிறார்கள் !

35 comments:

 1. ஹாஹாஹா...."கவர்ச்சி நடிகைக்குக் கூச்சமா" நல்ல ஜோக்குங்க...அப்போ பணம் வரும்போது கூச்சம் எங்க போச்சாம்??!!!

  சிரி கவிதை அருமை! கணவனை நெஞ்சுல வைச்சுக்கிட்டு பணத்தை நெஞ்சுல வைச்சுக்கறாங்களா இல்லை..... பணம் மட்டுமா!!!????

  ஜி! தமிழ்மணத்துல இணைக்கல போல....நாங்க இணைக்க முயன்றோம் எங்கள் ஐடி ல்ல போகுது....அப்படியும் இணைக்க முடியுமா?

  அதனால ஓட்டு போட முடியலயே!...

  ReplyDelete
  Replies
  1. அந்த நடிகை தான் வாங்கின காசுக்கு ,நாம எல்லோரும் கூசும்படியா நடிச்சு கொடுத்திருக்காரே !

   என்னென்ன இருக்கும்னு நினைச்சுப் பார்க்கக் கூட முடியலையே !

   நானும் பிறரின் பதிவுகளை இணைக்க முயன்றாலும் ,சிலரின் பதிவுகளை இணைக்க முடிய வில்லை ,என்ன காரணம் என்று தெரியவில்லை !
   இந்த பதிவையே இளங்கோ அய்யா இணைக்க முடிந்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது !

   வாக்குரிமை இருந்தும் பயன்படுத்தவில்லை என்றால் தப்பாச்சே ,இப்போ போட்டு விடுங்க !
   நன்றி

   Delete
 2. முன்பெல்லாம் தமிழ்மணத்தில் கணக்கு உள்ளவர்களின் பதிவுகளை தமிழ்மணம் தானாகவே திரட்டி வந்தது. சமீபத்தில் ப்ளாக்கரில் DASH BOARD பிரச்சினையால் இதிலும் பிரச்சினை. எனவே உங்கள் பதிவை நானே தமிழ் மணத்தில் இணைத்து விட்டேன். நட்புடன்.
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. சூழ்நிலையின் காரணமாக சில நேரங்களில் இணைக்க முடியாமல் போகிறது ,நீங்கள் சொல்வது போல் தமிழ் மணம் தானாகவே திரட்டிக் கொண்டால் நம்மைப் போன்றோருக்கு வசதியாய் இருக்கும் !ஒருவரால் இணைக்க முடிகிறது ,இன்னொருவரால் முடிய வில்லை ,இது எப்படி என்றும் புரியவில்லை !
   தமிழ் மணத்தில் இணைத்தமைக்கு நன்றி !

   Delete
  2. திரட்டிகள் தானாக இணைத்துக் கொள்வது போல் அமைத்தால் அதனால் பயன் ஏதுமில்லை. நீங்கள் இணைக்கும்போது அந்த தளத்திற்கு செல்லும் படி அமைந்து பின்னரே கடவு சொல்லை இட வேண்டி இருக்கும்.அதனால் திரட்டியின் பார்வைகள் எண்ணிக்கை கூடும். விளம்பரம் கிடைப்பதற்கு பார்வைகள் எண்ணிக்கை அவசியம் அல்லவா?

   Delete
  3. நீங்கள் சொல்வது சரிதான் என்று படுகிறது !
   நன்றி

   Delete
 3. ஓஹோ நாமதான் தப்பா புரிஞ்சிக்கினு
  அவஸ்தைப்படறோமா ?

  ReplyDelete
  Replies
  1. அவஸ்தை தான் ,நடிகை இவ்வளவு மோசமாக உடம்பைக் காட்டுவாரா என்று !
   நன்றி

   Delete
 4. Replies
  1. நீங்களும் பெர்மனண்டா அருமைன்னு சொல்றீங்க ,நன்றி !

   Delete
 5. Replies
  1. மினி சேப்டி லாக்கரில் 3G செல் போனும் அடக்கம் தான் ஜி !
   நன்றி

   Delete
 6. பணம் வந்தால் "எல்லாமே" பறந்துதான் போகும், கூச்சம் உட்பட!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு பல் கூச்சம் வந்தாலும் பல் டாக்டருக்கே பீஸாக ஏகப்பட்ட காசு நம்மிடமிருந்து பறந்து விடுகிறது ,பணம் என்றால் நடிகைக்கு எல்லாமே பறக்கத்தானே செய்யும் ?
   நன்றி

   Delete
 7. பல் கூச்சமும் வருமா? என்று சந்தேகமாக இருக்கு ஜீ

  ReplyDelete
  Replies
  1. உங்க சந்தேகம் நியாயமா படுது,அதனாலே நடிகைக்கு பல் வைத்தியம் பார்த்த டாக்டர் தான் பதில் சொல்லணும் !
   நன்றி

   Delete
 8. ஹா... ஹா... ஒன்று இரண்டு மூன்று என்று அதே வரிசையில் நன்றாக இருக்கிறது! :)))

  ReplyDelete
  Replies
  1. முதலாம் ,இரண்டாம் ,மூன்றாம் பரிசுகளை வழங்கிய உங்களுக்கு நன்றி !

   Delete
 9. அட வெறும் பல் கூச்சம் தானா..... :)

  நண்டு! - ரசித்தேன்.

  த.ம. - 7

  ReplyDelete
  Replies
  1. அதை டாக்டர் பார்த்துக்குவார் ,நாம அவங்க குத்துப் பாட்டைப் பார்ப்போம் வாங்க !
   நன்றி

   Delete
 10. பல்லாவது கூச்சப்படுதே சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதான்! பெர்மணண்டு வார்த்தை ஜாலம் கலக்கல்! சிரிகவிதை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் ஒரு சந்தோசமா ?
   வார்த்தை ஜாலம் பெர்மனண்டாய் தொடர்கிறதே !
   சோளிக்குள் என்ன இருக்குன்ற ஹிந்தி பாடல் நினைவுக்கு வருதா ?
   நன்றி

   Delete
 11. முதல் வரியை படிக்கும்போது நானே கூச்சப்பட்டேன் நடிகைக்கு கூச்சமா ?
  கவிதை கலா கலா கலக்கலா....

  ReplyDelete
  Replies
  1. இப்படியெல்லாம் சொல்லி கொல்லாதீங்க கில்லர் ஜி !
   நன்றி

   Delete
 12. வணக்கம்
  ஜி.

  நகைச்சுவையை இரசித்தேன் பல தடவை. பகிர்வுக்கு நன்றி
  த.ம8வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஒரு தடவையில் புரியலையா ,ரூபன் ஜி ?
   நன்றி

   Delete
 13. எல்லோரும் பார்க்கக் கூசும்படியா நடிச்சவங்க
  பல்லுக் கூசினால் பரவாயில்லை
  முதலாளிக்குத் தொழிலாளியின் பெர்ம'நண்டு
  பிடிக்காதது பிழை தான்
  நெஞ்சிலும்
  நெஞ்சுக்கு அருகிலும் இருப்பதை
  என் மனைவி சொல்லித் தான் அறிந்தேன்!
  மூன்றும் மூளைக்கு வேலை தருகிறது.

  ReplyDelete
  Replies
  1. என்னது ,பல்லு கூசினால் பரவாயில்லையா ?வேதனை அவங்களுக்குத்தானே தெரியும் ?
   அந்த பிழையை முதலாளி தொடர்ந்து செய்றாரே !
   அப்ப இது வரைக்கும் நீங்க நம்பலையா ?
   நன்றி

   Delete
 14. பல் கூச்சம் !அட! அட!
  தம பத்து!

  ReplyDelete
  Replies
  1. பார்க்கவே அருவருப்பாய் இருப்பதால் நண்டுக்கு ஒரு 'அட' கூட மனசு வராது,அப்படித்தானே ?
   நன்றி

   Delete
 15. கவர்ச்சி நடிகைக்கு பல் கூச்சம் கூட இருக்காதே!

  கணவனை நெஞ்சில் வைத்து போற்றுவதெல்லாம் அந்த காலம் ஜீ

  ReplyDelete
  Replies
  1. அடிக்கடி நீங்களும் நடிகைகளுடன் படப் பிடிப்பில் கலந்து கொள்வதால்,உங்கள் அனுபவ மொழி உண்மைன்னு தான் சொல்லணும் !

   நல்ல வேளை,போற்றும் மனைவிகளா என்று கேட்காமல் போனீர்களே !
   நன்றி

   Delete
 16. sensodyne பல் கூச்சத்திற்கு வாங்குவீர்

  ReplyDelete