16 July 2014

இருந்தாலும் புருசன் மேல் இவ்வளவு நம்பிக்கைக் கூடாது !என் இனிய நண்பர் கில்லர்ஜி அவர்கள் 

என்னைக் கலாய்த்து போட்டிருக்கும்'கடவுளும் 

கொலையாளியும் ' பதிவைப் படித்து 

விட்டீர்களா...இதோ லிங்க் >>>

http://killergee.blogspot.in/2014/07/blog-post_14.html  


''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர் நாய் 

மாதிரி கத்திகிட்டே இருக்காரே ,எப்படி அவர்கூட 

வாழ்ந்து கிட்டிருக்கே ?''

''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற   

நம்பிக்கையிலேதான் !


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

புருசன் வேணாம் ,வேலைக்காரி வேணும் !

''உங்க வீட்டுக்காரர்  எப்போ காணாமப் போனார் ?''

''வேலைக்காரி வேலைக்கு வராத நாள்லே ருந்துதான் !''

''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''
''வேற வேலைக்காரியை வச்சுக்க வேண்டியதுதான் !''

'சிரி'கவிதை!

உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை !

இதயத்தில் CAT WALK நடந்துக் கொண்டிருந்த 
உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ தெரியவில்லை ...
 என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !

27 comments:

 1. மன்னிக்க வேண்டுகிறேன் ,இன்றைய பதிவு வெளியாவதில் தாமதம் ஆனதற்காக !

  ReplyDelete
 2. என்னவொரு நம்பிக்கை... ஹா... ஹா...

  தாமதம் - காரணம் என்ன ஜி....?

  இன்று அஅ... இஇ... [2]
  http://dindiguldhanabalan.blogspot.com//2014/07/Characteristic-Part-2.html

  ReplyDelete
  Replies
  1. நம்பிக்கைதானே வாழ்க்கை ?

   பதிவு வெளியாக வேண்டிய நேரத்தை தவறாக செய்து விட்டேன் ,ஏன் தாமதமோ என்று ஏழு மணிக்கு பார்த்தால் ,கூகுள் ஆண்டவர் கண் திறக்க மாட்டேனென்று சோதித்து விட்டார் !

   தங்கள் பதிவை ரசித்தேன் !
   நன்றி

   Delete
 3. குறைக்கிற நாய் கடிக்காது தான். ஆனா குறைத்துக்கொண்டே இருக்கும் நாய் மீது வெறுப்பு ஏற்பட்டு, கல்லால் அடித்தால் (பூரிக்கட்டையால் அடித்தால்)!!!!!

  எழ முடியவில்லையா - பார்த்து காலு ஓடைஞ்சிருக்கப்போகுது...

  ReplyDelete
  Replies
  1. அப்போதும் ஓடிப் போகுமே தவிர கடிக்காது !

   சிறகே முளைச்ச பிறகு கால் இருந்தாலென்ன ,உடைஞ்சாலென்ன?
   நன்றி

   Delete
 4. புருசனுக்கு ஒரு மரியாதை
  வேலைக்காரி வராதநாளிலிருந்து... இதக்கூட புரிஞ்சுக்க முடியாத அப்பாவிப்பெண்ணோ ?
  கவிதை அருமை

  பகவான்ஜி நமது சந்திப்பை படித்தீர்களா ?

  ReplyDelete
  Replies
  1. ஓடிப் போனவர்கள் ,எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தி ..அடுத்த வேலைக்காரியை தேட ஆரம்பித்து விட்ட அவரா அப்பாவி ?

   படித்து ரசித்து கமெண்டும் போட்டுள்ளேன் ,வந்து சேர்ந்ததா ?
   நன்றி

   Delete
 5. ஹாஹாஹாஅ.....நாய் ரொம்ப நன்றியுள்ள ஜீவன் ங்க......அப்ப புருஷன கட்டிப் போடலையே?!!!!!!

  வேற வேலைக்காரி வைச்சுக்கலாம்....புருஷன்?!?!

  கில்லர் ஜி கில்லியடித்ததை பிடித்து ...சாரி படித்துவிட்டோம்..ஜி!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு அன்பாலே கட்டிப் போட்டு இருக்காங்க !

   வைச்சுக்கலாம் ..இல்லையில்லை ..இன்னொரு தாலியே கட்டிக்கலாம் !

   முதலில் ரமணி சார்,அடுத்து யாழ் பாவாணன் ,இப்போ கில்லர்ஜி ,இன்னும் யார் யார் பந்தாட காத்துக்கிட்டு இருக்காங்களோ ?
   நன்றி

   Delete
  2. காய்க்கிற மாவிற்குத் தானே கல்லெறி!

   Delete
  3. காய்க்கிறதும் இல்லாம கல்லடி வேறு படணுமா.இது அநியாயமா இருக்கே )))))))))
   நன்றி

   Delete
 6. 1. ஹா...ஹா...ஹா...

  2. ஹா...ஹா...ஹா....இந்த டைப்பில் நிறைய ஜோக்ஸ் உள்ளன. கடைக்குப் பச்சை மிளகாய் வாங்கப் போன மாமியாருக்கு ஆக்சிடன்ட். என்ன செய்ய? பச்சை மிளகாய் போடாமலேயே சாம்பார் வைத்து விட்டேன். இப்படி!

  3) என்ன ஒரு காதல்!

  ReplyDelete
  Replies
  1. இப்படின்னு நீங்க சொன்னது சூப்பர் ,உங்க தளத்திலும் இப்படி கொஞ்சம் அள்ளி விடுங்களேன் !
   நன்றி

   Delete
 7. ஜோக்ஸ் இரண்டுமே சூப்பர்! நன்றி!

  ReplyDelete
 8. பின்ன ஓடிப்போனவன் எப்ப வருவான்னு பார்த்தா எப்படி சாப்பிடுவது?
  அதுக்காக பழக்கமே இல்லாத இடத்துக்கு( அதான் கிச்சென்) போகமுடியுமா?
  ஹா...ஹா..

  ReplyDelete
  Replies
  1. சேச்சே ,நடந்து விட்ட இந்த சின்ன விஷயத்திற்காக அவ்வளோ பெரிய ரிஸ்க் எல்லாம் எடுக்கலாமா ?
   நன்றி

   Delete
 9. கில்லர்ஜி அவர்களின் பதிவு சிறப்பாயிருந்தது.
  சிறந்த நகைச்சுவையாக
  புருசன் வேணாம் ,வேலைக்காரி வேணும்!
  உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை!
  காலம் கரைந்தாலும்
  காரமான நகைச்சுவை இருந்தால் போதும்!

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜியின் நகைச்சுவையை என் வீட்டிலும் அனைவரும் ரசித்தார்கள் !
   இந்த காரம் போதுமா ,இன்னும் கொஞ்சம் வேண்டுமா ?
   நன்றி

   Delete
 10. வணக்கம்
  தலைவா.

  அசத்தி விட்டீங்கள்.. வாழ்த்துக்கள் ஜி
  த.ம 6வதுவாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அசத்தியது நான் மட்டுமா ,கில்லர்ஜியும்தான் !
   நன்றி

   Delete
 11. கில்லர் ஜி அவர்களின்
  பதிவினை ஏற்கனவே பார்த்து ரசித்தேன்
  தம 7

  ReplyDelete
  Replies
  1. அவர் தளத்தில் உங்கள் கருத்தை நானும் படித்து ரசித்தேன் !
   நன்றி

   Delete
 12. வேலைக்காரியை மாத்திட வேண்டியதுதான்னு சொன்னாலும் போன புருஷனைத் திட்டாமயா இருக்கப் போறாங்க...

  ReplyDelete
  Replies
  1. போயும் போயும் வேலைக்காரிக்கே வேலைக்காரனா போயிட்டாரே என்று திட்டாத நாளில்லை !
   நன்றி

   Delete