Sunday, 20 July 2014

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் !

இது சந்தேகம் நியாயமானதுதானே ?

''அசைவம் சாப்பிட்டாலும்  ,DVD பார்த்தாலும்  தப்பில்லே ,உனக்கென்ன சந்தேகம் ?''
'' பிறகேன் ,அதை எல்லாம் ரகசியமா  கருப்பு நிற கேரி பையில் மட்டுமே போட்டுத் தர்றாங்க ?''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்!

நடிகையின் புது கணவனுக்கு மூட் அவுட் !

''கல்யாணத்தில் எடுத்த  போட்டோக்களில் எல்லாம்  சிரிச்சுக்கிட்டு இருக்கிற புது மாப்பிள்ளை ,ஒரு போட்டோவில் மட்டும் முறைச்சுக்கிட்டு இருக்காரே ,ஏன் ?''
''சுற்றி நிக்கிறது நடிகையோட டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே !''


'சிரி'கவிதை!

எங்கே வளரணுமோ அங்கே ?

வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தைலத்தை 
வாங்கித் தேய்த்ததில் நல்ல பலன் ...
உள்ளங்கை முழுவதும் முடி !



26 comments:

  1. நகைச்சுவை எனக்கே ''மூட்'' வந்துவிட்டது பகவான்ஜி.
    கவிதையை அருமையாக ''முடி''த்தீர்கள்.
    எனது வ.வ.வ. காண்க...

    ReplyDelete
    Replies
    1. அது சரி மூட் வந்ததால் இந்த நேரத்திலா கமெண்ட் போடுவது ?
      வ வ வ வுக்கு நேற்றே கமெண்ட் போட்டேன் ,எந்த காக்கா தூக்கிட்டுப் போச்சோ தெரியலே ,இன்னிக்கு போட்டதாவது வந்து சேர்ந்திச்சான்னுபார்த்து சொல்லுங்க !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    தலைவா..
    கருப்பு நிறப்பையில் போடுவது பழக்க தோசம் ... எல்லாவற்றையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நெகிழிப் பையில் எல்லா நிறமும் வந்த பிறகும் பழக்க தோஷம் விடலியே !
      நன்றி

      Delete
  3. Replies
    1. ஆகா எது கருப்பு பையா ,வக்கீலின் கருப்பு கோட்டா ?
      நன்றி

      Delete
  4. //'' அதை எல்லாம் கருப்பு நிற கேரி பையிலே மட்டுமே ஏன் போட்டுத் தர்றாங்க ?''//

    அசைவம் சாப்பிடுறது பாவம். DVDயில் தப்புத்தப்பான படமெல்லாம் இருக்கு. அதனாலதான்!

    ReplyDelete
    Replies
    1. அதுக்குத்தான் கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்களே !
      நன்றி

      Delete
  5. உள்ளங்கை முழுவதும் முடி!
    டைவர்ஸ் கேஸ்களை டீல் பண்ற வக்கீலுங்க ஆச்சே!''
    கருப்பு நிற கேரி பையில் மட்டுமே போட்டுத் தர்றாங்க?''
    இந்த ஆய்வுகள்
    கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. முடியும் கறுப்பு,வக்கீல் உடையும் கறுப்பு,கறுப்பு கேரி பை ,இப்படி எல்லாமே சேர்ந்து இன்றைய பதிவை கறுப்பு ஸ்பெசல் ஆக்கிடுச்சே !
      நன்றி

      Delete
  6. உங்களின் கவனிப்பே தனி ஜி...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,அசைவம் வாங்கிற வளைகரத்தையும் பார்க்கவில்லை ,DVD ல் 'அந்த' மாதிரி படத்தையும் பார்க்கவில்லை ...நான் பார்த்ததெல்லாம் கருப்பு நிற கேரி பையைதான் !
      நன்றி

      Delete
  7. நல்ல சந்தேகம்தான்! மூட் அவுட் ஆனதில தப்பில்லே! சிரிகவிதை சிரிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. சந்தேகம் வந்து ,மூட் அவுட்டாகி ,பின்னர் சிரித்தமைக்கு நன்றி !

      Delete
  8. சிரிச்சுட்டோம்ங்க...

    ReplyDelete
    Replies
    1. சிரிச்சாதான், நீங்க சொன்ன மாதிரி மனம் என்னும் மாயப் பிசாசின் பிடியில் இருந்து நாம் விடுபட முடியும் என்பதும் உண்மைதானே மேடம் ?
      நன்றி

      Delete
  9. நடிகையின் கனவனுக்கு மூடே இருக்காதே...பின்ன எப்படி மூடு அவுட்டு.......

    ReplyDelete
    Replies
    1. கனவுக் கன்னி கைக்கு வந்தா மூட் அவுட் ஆயிடுமா ?
      நன்றி

      Delete
  10. தலையிலோ கையிலோ எங்கயாவது முழிச்சா சரி

    ReplyDelete
    Replies
    1. அதானே ,முடி வளர்றதுதானே முக்கியம் ?
      நன்றி

      Delete
  11. கருப்புத்தான் உங்களுக்கு பிடிச்சதோ பகவான்ஜி...
    மூணிலும் கருப்பு...
    எல்லாமே அருமை...

    ReplyDelete
    Replies
    1. இன்னைக்கி 'கறுப்பு'தான் பிடிச்சி ஆட்டுது!
      நன்றி

      Delete
  12. ஹாஹாஹ.......செம ஜோக்ஸ்

    ReplyDelete
  13. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஜோக் அருமை. சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா யோசிச்சு நாளைக்கு முதல் ஜோக் அருமையா போட்டு விடுகிறேன் !
      நன்றி

      Delete