22 July 2014

காதலியின் கெடுவுக்கு காரணம் ,எதுவா இருக்கும் ?

''என்னடா  சோகமா இருக்கே ,உன் காதலி  என்ன சொல்லிட்டுப் போறா ?''
''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என்  கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து  தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

மாமனார் கொடாக்கண்டன் ,மாப்பிள்ளை விடாக்கண்டன் ?

''மாசக்கணக்கா டேரா போட்டிருக்கிற மாப்பிள்ளைக்கு நாசூக்கா புரியவைக்க SMSஅனுப்பினது வம்பாப் போச்சா ,ஏன் ?''
''விருந்தும் மருந்தும் மூன்று நாள்ன்னு SMS அனுப்பினது யார்ன்னு தெரிஞ்சுக்காமே வீட்டை விட்டு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிறாரே !''

'சிரி'கவிதை!

பேதை தந்த போதையினால் மிதப்பா ?

விமானம் தரை இறங்கிய பின்பும் மிதந்துக் கொண்டுதான் இருக்கிறேன் ...
விமானப் பணிப்பெண்ணாய் என்னவள் !

30 comments:

 1. Replies
  1. தமிழ்மணத்தில் இணைத்து வாக்கு அளித்தமைக்கு கரந்தையாருக்கு மிக்க நன்றி !

   Delete
 2. இப்படியல்லவா ஒரு மாப்பிள்ளை இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. SMS..மூன்ரெழுத்தில் என் மூச்சிருக்கும்னு பாடிக்கிட்டே இருப்பதாக தகவல் !
   நன்றி

   Delete
 3. #''நாளைக்கே ஓடிப் போறோம் ...தாலிக் கயிறு என் கழுத்துலே தொங்கணும்...இல்லேன்னா ..கயிறிலே என் கழுத்து தொங்கும்னு மிரட்டிட்டு போறாடா!''#

  நல்ல வேளை, “கயிறு உன் கழுத்தை இறுக்கும்”னு சொல்லலை!

  ReplyDelete
  Replies
  1. புதுமைப் பெண் என்றால் அப்படி சொல்லி இருப்பாள் ,இந்த பதுமைப் பெண்ணுக்கு அப்படி சொல்லத் தோன்றவில்லையே !
   நன்றி

   Delete
 4. தாலிக்கயிறுல எத்தனை பவுன் செயின் போடுவாங்க பகவான்ஜி ?
  சோத்தை உப்பு போடாமல் வடிச்சா சரியாப்போச்சு எதுக்கு எஸ்.எம்.எஸ் தெண்டச்செலவு ?
  நிறையப்பேரு தரையில இறங்கிய பிறகும் மிதக்கிறான் (போதையில)

  ReplyDelete
  Replies
  1. பவுனா , 50கிராம் மஞ்சள்தான் தேறும் !
   அப்படியும் ரோசப்பட்டு போற ஆளில்லை அவர் !
   அதுக்குதானே ஊத்துறது ?எப்படியோ வீடு போய் சேர்ந்தா சரி !
   நன்றி

   Delete
 5. கில்லர்ஜி கேட்ட கேள்வி சூப்பர்......நல்ல காலம் தூக்கு கயிறும் தங்கத்துல கேக்கலையே!

  ஹாஹ்aஆஹா சிரி ஜோக்...செம...

  ஃப்ளைட்டுல இருந்து இறங்கறவங்க நிறைய பேரு அதுவும் இன்டெர்னாஷனல் ஃப்ளைட்டுலருந்து......இறங்கறவங்க மிதக்கத்தான் செய்வாங்க....ஜி!

  ReplyDelete
  Replies
  1. தாலியும் மெல்ல கொல்லும் தூக்கு கயிறுன்னு போக போக புரிஞ்சிக்குவாங்க !

   கெட்டிக்கார மாப்பிள்ளையோ?

   மிதப்பிலேயே ரொம்ப நாளை ஓட்ட முடியாதே !
   நன்றி

   Delete
 6. Replies
  1. மிரட்டலுக்கு என்ன பலன்னு தெரியலையே !
   நன்றி

   Delete
 7. இரண்டாவது அருமை..

  ReplyDelete
  Replies
  1. மாமனாருக்கு ஏற்ற மாப்பிள்ளைதானே ?
   நன்றி

   Delete
 8. இப்பவே இந்த மிரட்டு மிரட்டினா...கல்யாணத்திற்கு அப்புறம் ?.

  மாமனாருக்கு தன்வினை தன்னை சுட்ட கதையாகிவிட்டதே ?

  ReplyDelete
  Replies
  1. கல்யாணத்திற்கு அப்புறம் நடக்க வேண்டியது இப்பவே நடக்க ஆரம்பித்து விட்டதால் மிரட்டித்தானே ஆகனும் ?
   அந்தகாலத்து பெருசே இப்படின்னா இந்த காலத்து மாப்பிள்ளை எவ்வளவு விவரமா இருப்பார் ?
   நன்றி

   Delete
 9. விமானப் பணிப்பெண்ணாய்
  விருந்தும் மருந்துமாய்
  மிரட்டிட்டு போறதாய்
  படித்த நகைச்சுவைகள்
  சிறப்பாயிருக்கு...
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. அதையும் இதையும் முடிச்சுப் போட்டு நீங்க சொன்ன கருத்தும் சிறப்பாய் இருக்கே ,நன்றி !

   Delete
 10. காதலன் ஏமாத்திடுவான் என்ற பயமாக இருக்கலாம். அல்லது வயிற்றிலோ ஒரு சிசு உருவாயி இருப்பது காரணமாக இருக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொன்னதுதான் உண்மையாக இருக்கும் !
   நன்றி

   Delete
 11. ப்ளாக்(மெயில்) காதல்!

  எஸ் எம் எஸ்ல அனுப்பினது யார்னு வந்துடுமே...

  இது காதல்!

  ReplyDelete
  Replies
  1. பிளாக் மெயில் பண்றதுக்கு ஏதாவது காரணம் இருக்கும் இல்லையா ?
   முன் பின் தெரியாத நம்பரில் இருந்து வந்ததால் தானே பிரச்சினை ?
   இப்படியே மிதந்துக் கொண்டே இருந்தால் எங்கேயாவது மோதி விடப் போகிறார் !
   நன்றி

   Delete
 12. பாவம் அந்த காதலன்! சிரி கவிதையும், அன்றைய ஜோக்கும் சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. காதலன் பாவமா ,எல்லா சேட்டையும் பண்ணி முடிச்சவனே அவன்தானே ?
   நன்றி

   Delete
 13. வணக்கம்
  தலைவா.
  ஆகா..ஆகா... நன்றாக உள்ளது... தலைவா..

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன் ஜி !

   Delete
 14. பொண்ணுன இது பொண்ணு! சூப்பர் பாஸ்!
  தம எட்டு!

  ReplyDelete
  Replies
  1. டீச்சர் நீங்க சர்டிபிகேட் கொடுத்தா சரியாத்தான் இருக்கும் !
   நன்றி

   Delete
 15. Replies
  1. மசக்கைக்கு மாங்காய் தேடிக்கிட்டு இருக்காமே ,மாங்கல்யத்தை தேடுறாளே...பொண்ணு பொழச்சிக்குவா!
   நன்றி

   Delete