24 July 2014

காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

 --------------------------------------------------------------------------------
இந்த வாதம் சரிதானா ,சொல்லுங்க !               
                ''தலைவரே ,டாக்டர் குடிக்கச் சொன்ன டானிக்கே  வேண்டாம்னு சொல்ற அளவுக்கு ...கோர்ட்டிலே  உங்க வக்கீல் செய்ஞ்ச வாதமே  போதும்னு சொல்றீங்களே ,ஏன் ?''
               ''சம்பாதிப்பதில் தவறேயில்லை,அதைப் பற்றிய கணக்கை கொடுக்காவிட்டால்தான் தவறுன்னு ஒரே போடா போட்டாரே !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

 இதுக்கு போய்  பெண்டாட்டிய உதைக்கலாமா  ?

''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி  உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் !''சிரி'கவிதை!

காதலிக்கு மட்டும் பொருந்தாத தத்துவம் !

CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !


26 comments:

 1. மாமனார் வீட்ல பைக் வாங்க இப்படியும் வழியிருக்கா ?
  அப்படீனாக்கா நிதியமைச்சரா வருவாங்களோ ?

  ReplyDelete
  Replies
  1. நாட்டிலே இப்படித்தான் கொள்ளைபேர் வாங்கி ஒட்டிக்கிட்டிருக்கானுங்க!

   வெங்காய விலையை ஒரு கட்டுக்குள் கண்டு வர முடியாதவர்கள் எல்லாம் நிதி அமைச்சரா இருக்கும் போது,இவர்கள் ஆகக்கூடாதா ?
   நன்றி

   Delete
 2. பொருளாதாரப் புலிகளின் அர்த்தம் அறிந்தேன் நண்பரே
  தம 1

  ReplyDelete
  Replies
  1. விலைவாசியை குறைப்பேன் என்று நம் வோட்டுகளை பெற call செய்கிறார்கள் ,அமைச்சர் ஆனவுடன் நம்மை cut செய்து விடுகிறார்களே ,இந்த அரசியல்வாதிகள் !
   நன்றி

   Delete
 3. முதல் பைக்கையும் மாமனார் தான் வாங்கிக்கொடுத்திருப்பாரோ!!!

  பொருளாதாரப் புலிகளுக்கு இப்படி ஒரு விளக்கம் இருக்கா...

  ReplyDelete
  Replies
  1. அது உதைக்கிறதுக்கு முன்னாலே மாமனார் பாசமா கொடுத்தது இவர் வாங்கிக்கிட்டது !

   இதுதான் அடிப்படை இலக்கணமே !
   நன்றி

   Delete
 4. வக்கீலிடம் "பிடி"வாதமா...?

  புலி(ளி) யை அறிந்தேன்...

  சுதந்திரம் கட்டுப்பாடின்றிக் கண்டபடி இருப்பது தான் என்று கருதி விட்டால், வாழ்க்கையின் நிலைமையை என்னவென்று சொல்லுவது...? மேலும் :-

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/07/Control-Yourself.html

  ReplyDelete
  Replies
  1. வக்கீலின் இந்த 'பிடி 'வாதமே எனக்கு பிடிக்கலே

   புலியைப் பார்த்ததும் வயிற்றில் புளி கரைஞ்சதா ?

   உங்கள் பதிவை படித்தேன் ,ரசித்தேன் !
   நன்றி

   Delete
 5. வணக்கம்
  நகைச்சுவைநன்று இரசித்தேன்...
  த.ம3வது வாக்கு
  -நன்றி-
  அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 6. பொருளாதாரப் புலிகளா
  ஸெல்ப் ஸ்டார்ட் பைக்கா
  சம்பாதிப்புக் கணக்கா
  எல்லாமே நன்று
  தொடர வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தான் சம்பாதித்த பணத்தில் ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கிக்கிட்ட மருமகனை வேண்டுமானால் பொருளாதாரப் புலி என்று சொல்லலாமா ?
   நன்றி

   Delete
 7. கால் கட் அதாவது கால்கட்டு போட்டா தன்னால பொருளாதார புலி ஆகிடுவாங்களோ?
  காதலியான மிஸ்ஸுக்கு மட்டும் விதிவிலக்கா அதானோ என்னவோ மிஸ்டு கால் ?

  ReplyDelete
  Replies
  1. மிஸ் கொடுக்கும் கால் என்பதால் மிஸ் கால் என்பதை கண்டுபிடித்த உங்களுக்கு என்ன பட்டம் கொடுப்பதென்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் !
   நன்றி

   Delete
 8. ஹாஹாஹா....எல்லாமே அருமை!

  ReplyDelete
  Replies
  1. நன்றி !நன்றி !நன்றி !

   Delete
 9. Replies
  1. ஆறுதல் ..தப்பு ,தப்பு ..ஆறாவது வாக்குக்கு நன்றி !

   Delete
 10. அப்போ காதலிக்கு பொருந்துர தத்துவம் என்னாதுங்க........

  ReplyDelete
  Replies
  1. காதலியோட ஜீன்ஸ் பேண்ட்டைப்பார்த்தா அந்த தத்துவம் புரியும் ,பாக்கெட்டே இருக்காது .ஏன்னா ,செலவு செய்யத்தான் எவனாவது ஒரு ஈனா வானா கிடைத்து விடுகிறானே !
   நன்றி

   Delete
 11. முதல் ஜோக் எனக்கு புரியலை ஜி! மத்த ரெண்டும் வழக்கம்போல ஜோர்!

  ReplyDelete
  Replies
  1. ஊரிலிருந்து மஞ்சப் பையுடன் வந்து ,சமூக சேவை செய்கிற அரசியல்வாதி எத்தனைக் கோடி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாமாம் ,கணக்கு சரியாக் கொடுத்து விட்டால் போதுமாம் ,அதை குற்றம் என்று சொல்ல முடியாது என்பது வக்கீலின் வாதம் !இது சரிதானா சுரேஷ் ஜி ?
   நன்றி

   Delete
 12. Aaha!...''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுர்றேன் ......Arumai....
  CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...

  பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !
  Ethuvum Arumai....
  Vetha.Elanagthilakam.

  ReplyDelete
  Replies
  1. நல்ல மனுஷன் உதைக்கவே மாட்டாராமே ?
   நன்றி

   Delete
 13. இந்த......
  கருத்திடுவாங்களே....!!!
  அதுவும் செம காமெடியாக இருக்கும்.
  வாசித்துச் சிரிப்பேன்....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க கமெண்ட் நிமிடத்திலேயே நான் போட்டிருக்கும் கடைசி கருத்தையும் சேர்த்துதானே சொல்றீங்க ?
   நன்றி

   Delete