3 July 2014

இளம் மனைவியின் கைமணம் ?

''இவ்வளவு நேரமா காலிங்  பெல்லை அடிச்சேனே ,உன் காதுக்கு கேட்கலையா ?''
''காலிங் பெல் வேலை செய்யாதுன்னு அது மேலே எழுதிப் போட்டிருக்கேனே ,உன் கண்ணுக்கு தெரியலையா ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

சோறுன்னா மனுசன் சோழவந்தானுக்கே போறமாதிரி !

''காக்கைங்க கண்ணுலேயே படமாட்டேங்குதே 

,எங்கே போயிருக்கும் ?''


''வட இந்தியாவுக்குத்தான் !''

'சிரி'கவிதை!

இளம் மனைவியின் கைமணம் !

அடை போட்டதில் தேர் நின்றதோ இல்லையோ ...

என்னவள் வைத்த அடையினில் நின்றது ...

என் தோசை தின்னும் ஆசை !34 comments:

 1. என்னமா யோசிக்கிறாங்கப்பா :))))) வாழ்த்துக்கள் சகோ .
  என் தளத்தில் பாட்டு ஒன்று உள்ளது இதையும் கொஞ்சம் பாருங்கள்

  ReplyDelete
  Replies
  1. யோசிக்கிறதா நீங்க என்னையேவா சொன்னீங்க ?அப்படிப் பழக்கமே எனக்கில்லையே }}}}
   பாட்டொன்று கேட்டேன் ,இன்னும் இவ்வளவு இளமை ...எப்படி ?
   நன்றி

   Delete
 2. வட இந்தியா போனாலும் தன்னுடைய பதிவை விட்டுப் போகாத ஜோக்காளிக்கு வாழ்த்துக்கள்!
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. அப்ப நான்தான் அந்த காணாம போன காக்காவா ?அவ்வ்வ்!)))))
   நன்றி

   Delete
 3. கேள்விக்கு பதில் கேள்வி
  மிகச் சரி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் நம்மாளுங்க வக்கனையா கேட்பாங்களே,சொல்லிய தரனும் ?
   நன்றி

   Delete
 4. காலிங் பெல் வேலை செய்ய கண்ணும் காதும் வேண்டுமா?

  ReplyDelete
  Replies
  1. உள்ளே காதும் ,வெளியே கண்ணும் வேணும் !
   நன்றி

   Delete
 5. Replies
  1. எதிர்ப்பாட்டுங்கிறது இதுதானா வாத்தியாரே ?
   நன்றி

   Delete
 6. அடை சாப்பிடும் ஆசையே நின்றதெனில் அந்த அடை எத்தனை எடை இருக்கும்? ஹா... ஹா.. ஹா..

  ReplyDelete
  Replies
  1. 1.35 கி..இது ஆணின் மூளையின் எடை ,அதைக்கொண்டு நீங்களே 'அதை 'எடைப் போட்டுக்குங்க தலைவா !
   நன்றி

   Delete
 7. கேள்விற்கு எதிர்க் கேள்வியா...? அதனால் தின்னும் ஆசை(கள்) போய் விட்டதோ...! ஹிஹி...

  ReplyDelete
  Replies
  1. அதிகம் தின்றால் திகட்டத்தானே செய்யும் ?
   நன்றி

   Delete
 8. திறமை மிக்கவராக, சிறப்பானவராக, நேர்மையான ஆளுமைத் திறன் மிக்கவராக, இன்னும் பலவாறு எதிலும் பலே கில்லாடியாக அசத்தி வியக்க வைக்கிறார்களே, அவர்கள் இளமைக் காலத்தில் எப்படி இருந்திருப்பார்கள்...?

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/07/Characteristic.html

  ReplyDelete
  Replies
  1. படித்தேன் ,ரசித்தேன் ,குறளுக்கு சினிமா பாடல்களினால் உரைஎழுதி விட்டீர்களே !
   நன்றி

   Delete
 9. கண்ணு தெரியாதவங்க காது கேளாதவங்க வீட்டுக்கு என்ன செய்ய ?
  கவிதை அருமை.

  பகவான்ஜீ, நமது ''ஸுவாமிஜீ, குத்தியானந்தா'' வைபாருங்க....

  ReplyDelete
  Replies
  1. மன்மத லீலைக்கு கண்ணும் காதும் வேண்டுமா கில்லர் ஜி ?

   ஸ்வாமிஜி குத்தியானந்தாவை பார்த்தேன் ,அவரின் ஜல்சாவை ரசித்தேன் !
   நன்றி

   Delete
 10. காக்கா-வட ஜோக் அருமை

  ReplyDelete
  Replies
  1. வடக்கே போய் மத்திய மந்திரி ஆயிடலாம்னு அலைஞ்சு திரிஞ்ச சில காக்கைங்க 'வடபோச்சே 'னு திரும்பி வந்த கதையும் உங்களுக்கும் தெரிந்து இருக்குமே ?
   நன்றி

   Delete
 11. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.....காது கேட்கலைன்னு கேட்டா.கண்ணு தெரியலன்னு கேட்டுட வேண்டிதுதான்

  ReplyDelete
  Replies
  1. செவிடான்னு கேட்டா கோபம் வரத்தானே செய்யும் ?
   நன்றி

   Delete
 12. கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி !

   Delete
 13. 1. ரசித்து சிரித்தேன். சாதாரணமாக எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தான்.

  2. இப்பவெல்லாம் காக்கா வடையா சாப்பிடுது?

  ReplyDelete
  Replies
  1. 3 ன்னு போட்டு கமெண்ட் போடாத காரணம் என்னான்னு சொன்னா , உங்களை புரிஞ்சிக்கலாம்னு நினைக்கிறேன் ! வாயிலே என்ன அடையா ...இல்லை இல்லை ..கொழுக்கட்டையா என்று பலரும் சொல்லாகக் கேட்டு இருக்கிறேன் !
   நன்றி

   Delete
 14. தோசை சாப்பிடும் ஆசை போனது.. ஹா ஹா ஹா, இப்போதைய பெண்கள் சமைப்பதே பெரிய விசயம் ! அதும் ருசியாக ன்னா ம்ஹூம்...

  ரசித்துச் சிரித்தேன் ஜி, வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளைப் பார்க்கும் போதே சமைக்கத் தெரிந்த வரனைப் பாருங்கன்னு பெண்கள் சொல்வதாக கேள்வி !
   நன்றி

   Delete
 15. Replies
  1. ரசனைக்கும் ,த ம வுக்கும் நன்றி !

   Delete
 16. ரசித்தோம்! சொல்லிச் சிரித்தோம்! என்னன்றீங்க......காக்காவுக்கு வடை எல்லாம் ஓல்ட்...... ஃப்ரெட், பிட்சா, சப்பாத்தி, தோசைதான் வேணுமாம் ஜி......

  ReplyDelete