4 July 2014

தொப்பை அழகு பெண்களுக்கு மட்டும்தான் சொந்தமா ?

''நான் மப்டி போலீஸ்னு காட்டத்தான்     தலைக்கு போலீஸ் கட்டிங் போட்டிருக்கேன் ..யாரும் என்னைப் பார்த்து பயப்படுற மாதிரி தெரியலையே !''
''இப்படி டிரிம்மா வயிறை வைச்சுகிட்டு இருந்தா எவன் உங்களை போலீஸ்னு நம்புவான் ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

முகூர்த்த நேரம் முடியுதுன்னு சொல்வதுதான் சரி !

''தாலி கட்டுற நேரத்திலே மாப்பிள்ளைப் பையனுக்கும் ,ஐயருக்கும் என்ன வாக்குவாதம் ?''
''நல்ல நேரம் முடியறது ,சீக்கிரம் தாலி கட்டுங்கோன்னு சொன்னது  அபசகுனமாபடுதாம் பையனுக்கு !'''சிரி'[?]கவிதை!

இந்தியா பணக்கார நாடுதான் ,இந்தியர்கள் ஏழைகள் !

தவிச்ச வாய்க்கு தண்ணி தர வக்கில்லை ...
செவ்வாயில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்ததாம் இந்தியா !

34 comments:

 1. மூன்றுமே முத்துக்கள் பகவான்ஜீ

  இன்று காண்க ''விஸ்வகர்மா''

  ReplyDelete
  Replies
  1. மூன்று முத்துக்களை என் மோதிரத்தில் fix பண்ணச் சொல்லலாம்னு இருக்கேன் !

   விஸ்வகர்மாவை காண கில்லர்ஜி தியேட்டருக்கு முதல் ஷோ ,முதல் பெஞ்சுக்கே வந்து விடுகிறேன் !
   நன்றி

   Delete
 2. கடைசி ஒன்று நச்சுன்னு இருக்கு...சூப்பர்...

  தவிச்ச வாய்க்கு டாஸ்மாக்குல தண்ணி கிடைக்கிறதே ஆனா அங்க போய் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் என்ன செய்வது

  ReplyDelete
  Replies
  1. நீங்கதான் பூரிக்கட்டை அடி வாங்கிறீங்கன்னா,நானும் வாங்கணும்னு சதி பண்றீங்களே ,நியாயமா ?
   நன்றி

   Delete
 3. Replies
  1. அருமை ...இந்தியா செவ்வாயில் தண்ணி கண்டு பிடிச்சது தானே ?
   நன்றி

   Delete
 4. Replies
  1. கெட்டநேரம் ஆரம்பம்னு இப்படி சிம்பாலிக்கா அய்யர் சொல்றாரோ ?
   நன்றி

   Delete
 5. மிகச் சரி
  வரலாறு முக்கியம்னு வடிவேலு சொல்றமாதிரி
  வயிறு போலீசுக்கு ரொம்ப முக்கியம்தான்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வயிறு இல்லா போலீசைப் பார்த்தாலே ஜீரணிக்கவே முடியலே !
   நன்றி

   Delete
 6. Replies
  1. கூறியது கூறல் தவறென்பதால் நீக்கி விட்டீர்கள் போலிருக்கே !
   நன்றி

   Delete
 7. அவங்க வர்றதே நல்ல நேரம்தானே.. அப்புறம் எப்படி நல்ல நேரம் முடியப்போகுதுன்னு சொல்லலாம்...

  மூன்றாவது முத்து ஜி.

  ReplyDelete
  Replies
  1. அவங்களுக்கு நல்ல நேரம்தான் ,பையனுக்கு உலக அறிவு ஜாஸ்தி ...அதுதான் உண்மையை புரிஞ்சுகிட்டு இப்பை பீல் பண்றான் !

   குடிக்கிற தண்ணியைக் கூட காசு போட்டு வாங்க வேண்டியதா போயிடுச்சே !
   நன்றி

   Delete
 8. எல்லாமே நல்ல ஜோக்குகள்!
  த.ம.5

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கும் ,வாக்குக்கும் நன்றி !

   Delete
 9. 2. உங்களுடைய கல்யாண நாள் அன்றைக்கு, நீங்க ஐயரிடம் எதுக்காக வாக்குவாதம் பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னு இவ்வளவு வருஷம் தெரியாம இருந்த உங்கள் மனைவியாருக்கு இப்போது தான் தெரிஞ்சுதாம். அப்படியா....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,ஒரு திருத்தம் ...கெட்ட நேரம் உங்களுக்கு ஆரம்பிக்கலே ,எனக்குத்தான் என்று இன்று வரையிலும் புலம்பிக் கொண்டிருக்கிறார் !
   நன்றி

   Delete
 10. போலீசுன்னாலே தொப்பைதான்னு ஐடென்டிட்டி ஆகிப் போச்சு!!!!

  முகூர்த்த நேரம்-நல்ல நேரம் வித்தியாசம்... அட ரைட்டு.....!!!!!! அருமை!

  ReplyDelete
  Replies
  1. அதற்காக அவர்களும் வருத்தப் பட்டதா தெரியலையே !

   ஒருவேளை பெற்றோரின் வற்புறுத்தலால் தாலி கட்ட சம்மதித்து இருப்பாரோ ?
   நன்றி

   Delete
 11. தொப்பையையும் பொதவாக்கிட வேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. மாசமா இருக்கிற பெண் போலீசுக்கும் ,ஆண் போலீசுக்கும் அது பொதுவாதானே இருக்கு ?
   நன்றி

   Delete
 12. மூளைக்கு வேலையாக
  தொப்பை அழகு
  நல்ல நேரம்
  செவ்வாயில் தண்ணீர் என
  மூன்று கருகொண்டு
  உருவான மூன்று
  நகைச்சுவையும் நன்று!

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து நான் மூளைக்கு வேலை கொடுக்கிறது நல்லது தானான்னு நீங்கதான் சொல்லணும் !
   நன்றி

   Delete
 13. சொல்லாமல் சொல்லிவிட்டீர்!

  ReplyDelete
  Replies
  1. இப்படி நீங்க சொல்றதுதான் என்னை யோ 'சிக்க' வைக்குது அய்யா !
   நன்றி

   Delete
 14. ஜோக்கைவிட கடைசி சிரி கவிதை செம பஞ்ச்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. என்னை மாதிரிதான் நீங்களும் தண்ணிக்கு தவிக்கிறீங்க போலிருக்கே !
   நன்றி

   Delete
 15. உள்ளே வந்தவுடன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லாம புன்னகை அல்லது சிரிப்பு வரச் செய்வது உங்கள் பாணி.

  ReplyDelete
  Replies
  1. நம்ம வலையுலக உறவுகள் போடுற சிரிக்கும்படியான கருத்துக்களையும் சேர்த்து படிங்க ,,அல்லது நிறைய படிக்கணும்னு நினைச்சா வீக்லி ஒன்ஸ் வாங்க பாஸ் !
   நன்றி

   Delete
 16. மூன்றுமே ரசித்தேன் பகவான் ஜி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி நன்றி நன்றி !

   Delete