Saturday, 26 July 2014

அதே வார்த்தை ,பெண்மணி சொன்னால் மட்டும் தப்பாகி விடுமா ?

என் கமெண்ட்டுக்கு உங்க கமெண்ட் என்ன ?என்ற தலைப்பில் பதிவு போட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகி விட்டது...

இதற்கு மேலும் தாமதிப்பது , வலை உலக உறவுகளுக்கு வருத்தத்தை தரக்கூடும் என்பதால் ...அல்ல ,அல்ல ...என் தலை வெடித்துவிடும் என்பதால் ,இதோ ...

இது ,நம் வலைப் பதிவர்களில் மூத்தவரான சென்னைப் பித்தன் அவர்களின் G+ல் வெளியானது ...அவருக்கும் ,அசோக் குமார் ஜி அவர்களுக்கும் நன்றி !
உடல் கோணல் இறைவன் தவறு
உள்ளம் கோணல் நம் தவறன்றோ?
உடல் கோணலை மறைக்க முடிவதில்லை
உள்ளக் கோணலோ ஒளிந்து செயல் படும்
பார்த்தால் சிலர் வெறுப்பர் உடல் கோணலை
பழகினால் அனைவர் வெறுப்பர் உள்ளக் கோணலை
நல்லவனாய் இருப்பின்
கோணல் உடலோனும் கொண்டாடப்படுவான்
அல்லவனாயின்
அழகுடலோனும் தூற்றப்படுவான்
உடல் மட்டும் கோணலெனில்
சொல்வதில் தவறில்லை........
“கோணலாயினும் இது என்னுடையது” என்று!
உள்ளம் கோணலாயின்
உரைக்க முடியுமா அது போல்?!
வெட்கப்பட வேண்டாம் உடல் கோணலுக்கு
கட்டாயம் தலை குனியத்தான் வேண்டும்
உள்ளக் கோணலுக்கு!

(குட்டன் அவர்களின் கவிதை)
Read more (17 lines)
2
Ashok Kumar's profile photoBagawanjee KA's profile photo
Hide comments

Ashok Kumar
Yesterday 9:55 PM
 
Reply
கோணலாயிருந்தாலும் என்னுடையதாக்கும்:-)

Bagawanjee KA
Yesterday 11:14 PM
அசோக் குமார் ஜி ,இதை நீங்கள் சொல்வதால் ரசிக்கத் தோன்றுகிறது ,விளம்பரத்தில் பெண் சொல்கையில் அசிங்கமாய் படுகிறது !

Ashok Kumar
Yesterday 11:23 PM
+Bagawanjee KA. :-) ஓ...அப்படியா...ஹா..ஹா...:-)))

12 comments:

  1. Replies
    1. இந்த சிரிப்புதான் உங்க கமெண்ட்டா ,ஸ்ரீ ராம் ஜி !
      நன்றி

      Delete
    2. தத்துவமாக இருக்கிறது ஜி... சரியாப் புரியலை. அதான் சிரிச்சுட்டு விட்டுட்டேன்!

      Delete
    3. ஒரு க்ளு வேணா கொடுக்கிறேன் ,'என் புருசன்தான் எனக்கு மட்டும்தான் '
      அடிக்க வராதீங்க !

      Delete
  2. அப்பாடியா...... உங்க தல வெடித்து விடும்மா????.....அலோ.... அலோ... போலீஸ் ஸ்டேஷன்... போன எடுக்க மாட்டுறாங்க..ஜீ...

    ReplyDelete
    Replies
    1. எந்த பாம் ஸ்குவாட் வந்தாலும் ,பதிவாக என் எண்ணங்கள் வெடிப்பதை தடுக்க முடியாதே!
      சரி ,உங்களுக்காவது புரிஞ்சுதா ?
      நன்றி

      Delete
  3. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சொல்றீங்களா ,தொடருங்கள் என்று வேறு சொல்லி இருக்கீறீர்களே!
      நன்றி

      Delete
  4. Replies
    1. உங்களின் அழைப்புக்கு நன்றி !

      Delete
  5. Replies
    1. கிக்கி கிக்கியா ,அப்படின்னா ?இதுவும் ஒரு தத்துவமா ?
      நன்றி

      Delete