17 July 2014

எழுதியே லட்ச லட்சமாய் சம்பாதிக்க பெண் பதிவர் தரும் டிப்ஸ் !


பார்ப்பதற்கு  ஒயிலாய் காட்சி தரும் இவரை உங்களுக்கு தெரியுமா ?
நம்மைப் போன்றே ப்ளாக் (ஆனால் ஆங்கிலத்தில் )எழுதிக் கொண்டிருந்த இவர் ,தற்போது முழுநேர எழுத்தாளர் ஆகி விட்டார் ....

இவர் பிளாக்கில்  எழுதியதை புத்தகமாய் வெளியிட சூப்பர் ஹிட் ...
தொடர்ந்து 'டைம்ஸ் ஆப் இந்தியா 'வில் மட்டுமல்ல 'ரீடர்ஸ் டைஜஸ்ட் 'டிலும் எழுதி புகழ்பெற்றார் ...
தற்போது பெங்களூரில் கணவர் ,இரண்டு குழந்தைகளுடன்  வசித்து வரும் ...
இவர்தான் ப்ரீத்தி செனாய் !
 இவர் எழுதிய புத்தகங்கள் நம் நாட்டில் மிக அதிகம் விற்பனையாகின்றன ...
'போர்ப்ஸ் 'பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் ...
'இந்தியாவின் செல்வாக்கான முதல் நூறு பிரபலங்கள் 'பட்டியலில் இவரும் ஒருவர்...
இவர் எழுத்தைப் பற்றி இவரே கூறியது ...
'நான் தீவிர இலக்கியமெல்லாம் எழுதாததால் என் புத்தகங்கள் சாதனை புரிகின்றன '
நாமும் .இவரைப் போன்று புகழ் பெற அவரே தந்த டிப்ஸ் ... 
     ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்க கூடியதாகவும் .அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப் படுத்தக் கூடிய தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் .எழுத சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள் ,தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் .போலித் தனம் கூடாது .உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும் .எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப் 'கொடுத்து எழுதவே கூடாது .பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும் ,எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள் .
உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் ,எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று !வெற்றி பெற்றால் மட்டும் போதாது ,அதை நாளுக்கு நாள் ,வாரத்துக்கு வாரம் ,மாதத்துக்கு மாதம் ,வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும் .மற்ற எல்லாமே உங்களை தேடி வரும் !

ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தீர்களா ? நீங்களும் கடைப் பிடிக்கலாமே !

இவரின் கூற்றுப் படியே ...ஜோக்காளியும் முன்னேறி வருகிறான்  என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?26 comments:

 1. நல்ல வழிகாட்டல்
  சொல்கிறவர் சொன்னால்....

  ReplyDelete
  Replies
  1. கேட்கிற நாம கேட்டுத்தானே ஆகணும் ?
   நன்றி

   Delete
 2. வெற்றி பெற்றால் மட்டும் போதாது
  அதைனைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து உழைக்க வேண்டும்
  அருமையான அறிவுரை நண்பரே
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. எனக்காகவே சொல்லப் பட்டதாக நினைக்கிறேன் !
   நன்றி

   Delete
 3. ப்ரீத்தி செனாய் கொடுத்த டிப்ஸ்கள் உள்ளத்திருந்து வந்தவை. உண்மையானவை! பகிர்வுக்கு நன்றி!

  இனிமேல் இதுபோன்று ஒரு பக்கக் கட்டுரைகளையும் எழுதவும்.

  ReplyDelete
  Replies
  1. பதிவர்களுக்கு மட்டுமல்ல ,எல்லோருக்குமே பொருந்தும் படியான டிப்ஸ்கள் !

   சமுகம் என்ற லேபிளில் கடந்த வருடம் நிறைய எழுத முடிந்தது ,தங்களின் ஆலோசனையே பின்பற்றி எழுத முயற்சிக்கிறேன!
   நன்றி

   Delete
 4. ப்ரீத்தி செனாய் அளித்த டிப்ஸை எங்களுக்கு அளித்த பகவான்ஜீக்கு ஒரு பெரிய ஓஓ‌ஓ‌ஓ‌ஓ‌ஓ‌ஓ.....

  ReplyDelete
  Replies
  1. பெரிய ஓஓஓஓஓஓஓஓஓ போட்ட சொக்கன் ஜி க்கு ஒரு பெரிய கும்பிடு !
   நன்றி

   Delete
 5. #ஜோக்காளியும் முன்னேறி வருகிறான் என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் தானே ?#

  அதிலென்ன சந்தேகம்?

  ஓடுங்கள்...ஓடிக்கொண்டே இருங்கள். உங்கள் பின்னால் நான் வந்துகொண்டே இருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. என்னை நம்பி உலகளந்த நம்பியே பின்னால் வரும்போது ,இந்த உலகம் சுழல்வது நிற்கும் வரை நான் ஓடிக் கொண்டே இருப்பேன் !
   நன்றி

   Delete
 6. வணக்கம்
  ஜி
  நல்ல கருத்தை பரிமாறியுள்ளீர்கள் . அவரைப்போன்று நாமும் பின்பற்றுவோம் பகிர்வுக்கு நன்றி
  த.ம4வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பரிமாறியதைப்படித்து உங்கள் பசி அடங்கி இருக்குமென்று நினைக்கிறேன் !
   நன்றி

   Delete
 7. சரியாக மிகச்சரியாச் சொல்லி உள்ளார்கள் ஜி...

  ReplyDelete
  Replies
  1. அவரால் சரியாக சொல்ல முடிவதால் தான் உச்சத்தை தொட முடிந்திருக்கிறது !
   நன்றி

   Delete
 8. என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு ப்ரீத்தி செனாய் போன்றவர்களின் ஆலோசனை வேதவாக்குபோல இருக்கிறது. இதை தெரியப்படுத்தியதற்காக பகவான்ஜிக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் நன்றியுடன் என் நன்றியையும் சேர்த்து ப்ரீத்தி செனாய்க்கு அனுப்பி விடுகிறேன் !
   நன்றி

   Delete
 9. அருமையான கருத்துரைகள், அதனை எங்களுடன் பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றியை அவருக்கு அனுப்பிவிட்டு ,வாழ்த்தை நான் வைத்துக் கொள்கிறேன் !
   நன்றி

   Delete
 10. டிப்ஸ் படித்துக் கொண்டேன். முயற்சி செய்கிறேன். ஆனால் தமிழில் எழுதினால் அப்படிச் சம்பாதிக்க முடியாதே...!

  ReplyDelete
  Replies
  1. இதுக்கா கவலைப் படுறீங்க ,நீங்க தமிழ்லே எழுதுவதை இங்கிலிஷ் என்ன ஜப்பான் மொழியில்கூட மொழி பெயர்த்து விற்று விடலாம் !அங்கே உங்கள் எழுத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா என் மனசிலே ஒரு பட்சி சொல்லுது !
   நன்றி

   Delete
 11. ப்ரீத்திக்கு உங்களை பத்தி தெரியாதே! இல்லைனா உங்ககிட்டதான் அவங்க டிப்ஸ் கேட்டிருப்பாங்க!!

  ReplyDelete
  Replies
  1. ப்ரீத்தி மாதிரி சம்பாதிக்க துப்பில்லேன்னு நான் இல்லாளிடம் வாங்கிக் கொண்டிருக்கும் அர்ச்சனை ஒன்று போதாதா ,நான் அவங்களுக்கு டிப்ஸ் தர ?
   நன்றி

   Delete
 12. அவர் சொன்னதும் உண்மை! நீர் சொல்வதும் உண்மை!

  ReplyDelete
  Replies
  1. ஆக இருவர் சொன்னதும் உண்மையிலும் உண்மை !
   நன்றி

   Delete