7 July 2014

கவர்ச்சி அழகியை தெரியாதென்றால் ஆணுக்கு இழுக்காச்சே ?

அன்பார்ந்த வலையுலக நண்பர்களே ..
ஜோக்காளி வலைத்தளம் பற்றிய நண்பர் .யாழ் பாவாணனின் சிறப்பு அலசலைப் படித்து நீங்களும் கருத்து கூறலாமே ...இதோ லிங்க் >>>http://yppubs.blogspot.in/
*******************
''ஷரபோவாவா அது யாருன்னு சச்சின் ஏன் கேட்க மாட்டேங்கிறார் ?''
''உலகப்  புகழ்  மாடலை தெரியாதுன்னு  சொன்னா, ஆம்பளைக்கு அழகில்லையே ,அதான் !''சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...


தின 'சிரி ' ஜோக்!

அழகான பெண் பெயரை சுருக்கலாமா ?

''கரடிக்குளம் ஜெயாபாரதிப்பிரியன் 

எழுதிய  ஜோக்கே 

வர மாட்டேங்குதே ,ஏன் ?''

''அவரோட ஜோக்கை எடிட் பண்ணா பரவாயில்லை ...அவர் 

பேரை கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே 

கோபம் வந்து எழுதுறதை விட்டுட்டார் போலே !''
'சிரி'கவிதை!


லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் ?


எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பது முற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு 
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !
34 comments:

 1. வணக்கம்
  தலைவா..

  காலையில் இப்படியான படமா.நான் நினைத்தேன் ஏதோ சாமி படம் என்று...நகைச்சுவை நன்று...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்தில் ஜோக்காளி முதலிடம் பெற்ற இந்த நன்னாள் ,உங்களுக்கும் நன்னாளாகவே இருக்கும் !
   நன்றி

   Delete
 2. முதலிடம் பெற்றமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. பல மாதங்களுக்கு முன்பே நீங்கள் கூறிய ஆருடம் ,இன்று பலித்து விட்டதே !
   நன்றி

   Delete
 3. நல்லாத்தான் யோசிக்கிறீங்க! தாங்கள் அடைய நினைத்த தமிழ்மணம் டிராபிக் ரேங்க் – 1 குறிக்கோளுக்கு வாழ்த்துக்கள்! அப்படியே நீடிக்கட்டும்!
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளி தமிழ் மணத்தில் இணைந்த 607 நாட்களில் இந்த சிகரத்தை தொட்டுஇருக்கிறான் ...இந்த துல்லியமான நாட்கணக்கை போட எனக்கு உதவியது ,உங்களின் 'பயன்படும் இணையதளங்கள் 'பதிவுதான் ..அதற்காகவே உங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றி !

   Delete
 4. யாழ் பாவணனின் பதிவினைப் பார்த்தேன் நண்பரே
  வாழ்த்துக்கள்
  தம 4

  ReplyDelete
  Replies
  1. யாழ் பாவாணன் ஜோக்காளியை அலசிய நேரத்தில் தமிழ் மணத்தில் முதல் இடம் பெற்றது மகிழ்ச்சியைத் தருகிறது !
   நன்றி

   Delete
 5. மூன்றுமே அருமை.

  ReplyDelete
  Replies
  1. முதல் இரண்டும் டாபிகல் ஜோக்காகவும் ,மூன்றாவது தன்னிலை விளக்க காமெடியாகவும் ஆகி விட்டதே !
   நன்றி

   Delete
 6. Replies
  1. படத்தையும் சேர்த்துதானே சொல்றீங்க ?
   நன்றி

   Delete
 7. இன்று மிகவும் மகிழ்ச்சி [எனக்கும்...] தங்களின் எண்ணம் நிறைவேறியதில் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சரியாக ஜோக்காளியின் இரண்டாவது பிறந்த நாளுக்கு 90 நாட்கள் உள்ள நிலையில் ..சிகரத்தை தொட உதவிய உங்களைப் போன்ற அன்பான உறவுகளுக்கு நன்றி சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் !
   எனக்கு வந்த முதல் கமெண்ட் உங்களிடம் இருந்துதான் ,தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கும் ,தொழில்நுட்ப ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி !

   Delete
 8. முதலில் தமிழ்மணம் நிலை (Rank) இன்
  முதலாம் இடத்தை எட்டிப் பிடித்தமைக்கு
  வாழ்த்துகள் ஐயா!
  இரண்டாவது
  தமிழ் இலக்கணம்
  கவிதை நன்று.
  முன்றாவது
  ஷரபோவாவா ஓட்டம் பிடிக்க
  கரடிப்பிரியன்னு எடிட் பண்ணுனதாலே
  இன்றைய பதிவு முதலிடம்!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் ஜோக்காளியை அலசிய நேரத்தில் முதலிடம் பிடித்ததால் உங்களுக்கு என் இரட்டிப்பு நன்றி !

   Delete
 9. கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு # எனக்கு தெரிய கவிதை ஏகுதி யாரும் லகரம் தேர்த்தது இல்லை சினிமாவுக்கு பாடல்கள் எழுதி சேர்த்தவர்கள் மட்டுமே உண்டு

  ReplyDelete
  Replies
  1. சினிமாவில் பாட்டு எழுதி லகரங்களைத் தாண்டி கோடிகளையும் சேர்த்தவர்களை நம் தலைமுறையிலேயே பார்க்கிறோமே ,பரிதி ஜி !
   நன்றி

   Delete
 10. ஹாஹாஹா...மூன்றுமே அருமை!

  ஆஹா! ஜோக்காளி கையை கொடுங்கள்! வாழ்த்துக்கள்! தமிழ்மணத்தில் முதலிடம் பெற்றதற்கு! எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! தொடரட்டும் ஜோக்களியின் ஜோக்குகள்! ஜி!

  த.ம.

  ReplyDelete
  Replies
  1. முதல் இடம் பெறும்வரை இப்படி ஒரு கவர்ச்சி படத்தை ஜோக்காளிதளத்தில் வந்ததில்லை என்பது சிறப்பு அம்சம்தானே ஜி ?
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 11. இதெல்லாம் ஒரு கவர்ச்சியா ன்னு சச்சின் அழகன் சொல்லவாரு!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. சச்சினையா நீங்க சந்தேகப் படுறீங்க ?இதுவரையிலும் எந்த கிசு கிசு கூட வந்ததில்லையே !
   நன்றி

   Delete
 12. வாழ்த்துக்கள்! இலக்கண கவிதை சிறப்பு!

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரியாது என்பதிலும் சிறப்பு இருக்கத்தான் செய்கிறதோ?
   வாழ்த்துக்கு நன்றி

   Delete
 13. தமிழ் மணம் முதலிடம் கொடுத்தவர்களுக்காக ஸ்பெஷல் ஃபோட்டோவா ? பலே, பலே,

  ReplyDelete
  Replies
  1. முதலிடம் கொடுத்தது உங்களைப் போன்ற வலை உறவுகள் தானே ,உங்களுக்காகத்தான் அது !
   நன்றி

   Delete
 14. முதலில் முதலாவது ஆளாய் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
  எல்லாம் அருமை...
  கரடிப்பிரியன் சூப்பருங்கண்ணா...

  ReplyDelete
  Replies
  1. முதலில் முதலாவது ஆளா ?இதற்குமுன் யாரும் வரவில்லையா ?நான் பதிவுலகத்தில் வந்து இன்னும் இரண்டு வயது கூட நிரம்பாத கத்துக்குட்டி ,எனக்கு விவரம் தெரியவில்லை .நமது பதிவுலக மூத்தோர்கள் ,முதல் இடம் பிடித்தவர்களைப் பற்றி சொன்னால் தெரிந்து கொள்ளலாம் !
   வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 15. முதலிடம் பெற்றமைக்கு வாழத்துக்கள்.

  சத்தியமா எனக்கு நீங்கள் சொன்ன தமிழ் இலக்கணம் தெரியாது. அதுக்காக நான் கவிதை எழுதி லகரங்களை சேர்த்தவர் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள்.

  நான் கவிதை எழுதியிருந்தால்,லகரங்களை சேர்ப்பதற்கு பதில் செலவளித்திருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி!

   கவிதை எழுத 'உள்ளே ' இருக்கிறதை நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும் ,அது நம்மாலே முடியாது (இருந்தால்தானே செலவு செய்ய என்பது வேறு விஷயம் )

   நீங்கள் கவிதை எழுதாமல் இருக்க பலரும் லட்சக்கணக்கில் தருவதாக கேள்விபட்டேனே ,உண்மையா சொக்கன் ஜி ?
   நன்றி

   Delete
 16. தமிழ்மணம் ரேங்கில் முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள். எப்படி முதலிடம் பெறுவது என்று ஒரு பதிவு எழுதலாமே.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி அய்யா !
   தங்கள் விருப்பப்படி, ஒரு பதிவை எழுதும் எண்ணம் எனக்கும் உண்டு!
   நன்றி !

   Delete