8 July 2014

மருமகள் மாமியாருக்கு செய்யும் நல்ல 'காரியம் ' ?+ஜோக்காளியின் நன்றி நவிலல் !

ஜோக்காளியின் நன்றி நவிலல் !
அன்புமிக்க வலையுலக உறவுகளே ...
கடந்த 5.10.12ல் பிறந்த உங்களின் ஜோக்காளி,தமிழ் மணத்தில் இணைந்த  607வது நாளான நேற்று ,தமிழ் மணத்தில் சிகரத்தைத் தொட்டுள்ளான்... 
அவன் 1105பதிவுக்குப்பின் இந்த உயரத்தை தொடமுடிந்துள்ளது  ...
மகிழ்ச்சியான இந்த நேரத்தில் ,ஜோக்காளியின் இந்த ஜாலி பயணத்தில் இணைந்தவர்களுக்கு தன் நன்றியினை தெரிவித்துக் கொள்ளுகிறான் ...
வலைப் பூவை வடிவமைத்து தந்த அருமை மகன் அஜய் சந்தனுக்கு நன்றி ...
வலைப்பூவில் நான் விரும்பிய  மேம்பாடுகளை செய்த நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு நன்றி ...
தினசரி கருத்துக்கள் மட்டுமல்ல... பிளாக் இன்னை பிளாக் காம்மாகி ...
வோட் பட்டனும் அமைத்து தந்து உச்சம் தொட உதவிய ...
வலை உலக விரல் வித்தகர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நன்றி ...
வலைச்சர அறிமுகம் செய்து  என்னை ஆதரித்த  வே.நடன சபாபதி ,குடந்தையூர் ஆர் .வி.சரவணன் ,திருமதி .அருணா செல்வம் ,தளிர் சுரேஷ் ,சுரேஷ் குமார் ஜி ஆகியோருக்கும் நன்றி ...
சமீபத்தில் என்னுடன் கற்பனைப் பேட்டிகண்டு பதிவிட்ட திரு.ரமணி அவர்களுக்கும் ...
ஜோக்காளியை அலசி ஆராய்ந்து பதிவிட்ட திரு .ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் (யாழ் பாவாணன் )அவர்களுக்கும் ...
சென்ற ஆண்டின் சிறந்த நகைச்சுவைப் பதிவர் என்று அவார்ட் தந்த திரு.கோவை ஆவி அவர்களுக்கும் ...
அதிகபட்ச  கருத்துரைக்களைக் கூறி ஊக்குவித்த  ...
திருவாளர்கள் ரமணி அய்யா ,புலவர் இராமனுசம் அய்யா ,வெங்கட் நாகராஜ் ஜி ,சைதை அஜீஸ் ஜி ,திருமதி ராஜி ,அ .பாண்டியன் ஜி ,சே. குமார் ஜி,நம்பள்கி ஜி ,ஜீவலிங்கம் காசி ராஜலிங்கம் ஜி ,மணிமாறன் ஜி  ,கவியாழிகண்ணதாசன் ஜி ,கரந்தை ஜெயகுமார் ஜி ,,T.Nமுரளிதரன் ஜி ,2 ௦ ௦ 8ரூபன் ஜி ,கவிதை வீதி சௌந்தர் ஜி ,துளசிதரன் ஜி ,துரை செல்வராஜுஜி,கில்லர் ஜி ,வலிப்போக்கன்,ஸ்ரீராம் ஜி ,தமிழ் இளங்கோ ,திருமதி .அம்பாள் அடியாள் ,சொக்கன் சுப்ரமணியன்ஜி ,பரிதி முத்துராசன்ஜி ,கிங் ராஜ் ஜி ,சீனி ஜி ,திருமதி .மைதிலி ,நண்டு நொரண்டு ராஜசேகரன் ஜி ,காமக் கிழத்தன், தி பி ஆர் ஜோசப் ஜி   ஆகியோருக்கும் ...
மேலும் ,பல்லாயிரக்கணக்கில்  கருத்துரை இட்ட நண்பர்களுக்கும் நன்றி ...
உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் நெஞ்சங்களுக்கு பதிவுகளை கொண்டு சென்ற தமிழ் மணம் ,இன்ட்லி ,தமிழ் வெளி ,ஹாரம் திரட்டிக்கும் நன்றி ...
Face book ,Google+,Twitter வழியாக follow செய்பவர்களுக்கும் நன்றி ...
'நயா பைசாவுக்கு பிரயோசனம் இல்லா வேலை 'என்று பதிவு எழுதுவதைத் திட்டினாலும் ,தமிழ்மணத்தில் முதல் இடத்தில் ஏற்றிய  உங்களின் ஆதரவைக் கண்டு அசந்து நிற்கும் என் மணவாட்டிக்கும்  நன்றி !(இதை சொல்லவில்லை என்றால் நான்''புவ்வா'வுக்கு எங்கே போவது ?)

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு !

'' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி விழுந்துட்டாங்களே , டாக்டருக்கு  போன் பண்ணிச்  சொல்லிட்டியா  ?''
''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லி இருக்கேங்க !''


'சிரி'கவிதை!


அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் !கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய்  நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !59 comments:

 1. உங்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 2. உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..
  வாழ்க வளமுடன்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி !

   Delete
 3. வாழ்த்துக்கள் பகவான் ஜி.

  முதல் இடத்தை என்றும் உங்களுக்கே என்று தக்கவைத்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் எண்ணமே என் எண்ணமும் ..தீவிர உழைப்பு தொடரும் !
   வாழ்த்திற்கு நன்றி !

   Delete
 4. சாதனைக்கும் அது தொடர்ந்து தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. முதலிடத்தில் வருவீர்கள் என்று நீங்கள் அன்று சொன்னது ,இன்று சாத்தியமாகியுள்ளது !
   வாழ்த்திற்கு நன்றி !

   Delete
 5. உயரத்தைத் தொட இத்தனை உள்ளங்கள் - அந்த
  உயரத்தைத் தக்கவைக்க அத்தனை உள்ளங்கள்
  தங்களுக்குத் தோள்கொடுக்கும் ஐயா!

  ReplyDelete
  Replies
  1. கைமாறு கருதாத அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி !

   தாங்கள் என்னை நம் தமிழ் வழக்கப்படி அய்யா என்று அழைப்பது ,நம் புலவர் இராமானுஜம் அவர்களின் ஒத்த வயதுக்காரர் போல் என்னை உருவகப் படுத்துகிறதே ...உங்களுக்கு பிடித்தால்என்னை ஜி என்றோ ,அல்லது நண்பரே என்றோ அழைக்கலாமே !
   நன்றி

   Delete
 6. வணக்கம்
  பார்த்தவுடன் எனக்கும் மகிழ்ச்சியாகஇருந்தது. இன்னும்தொடர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி ரூபன் ஜி !

   Delete
 7. நாங்களும். தங்களின் இச் சாதனையை பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டே பயணிக்கிறோம்
  தொடர்ந்து .
  தங்களின் பாணியில் பயணிக்க என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. பூரிக்கட்டை அடியை மறக்க ,ரசித்து சிரித்துக் கொண்டே பயணிப்பதை தவிர வேற வழியில்லையே !
   பல நபர்கள் சேர்ந்து நடத்தும் செய்தி தளங்களைப் பின்னுக்கு தள்ளியதை வேண்டுமானால் சாதனை என்று சொல்லலாம் !
   வாழ்த்திற்கு நன்றி!

   Delete
 8. தொடர்ந்து அசத்துங்க ஜி...

  குறிப்பிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கு உங்கள் உதவி இருக்கும்போது என்ன பயம் ?அசத்தல் தொடரத்தான் போகிறது !
   நன்றி !

   Delete
 9. வாழ்த்துகள்......

  பக்கத்து நாட்டில் இருக்கும் டாக்டருக்கு சொல்லாம போனாங்களே! :)

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கமெண்ட்டை சரியா புரிந்து கொள்ளாமல் பதில் அளித்து இருந்ததை நீக்கி விட்டேன் ..இதோ ,புதிய பதில் ...
   வாழ்த்திற்கு நன்றி வெங்கட் ஜி !

   இதே நிலைமை பெற்ற தாய்க்கு என்றால் ,இந்நேரம் டாக்டரை இழுத்து கொண்டு வந்திருப்பார் அந்த 'மருமக'க்காரி !
   நன்றி

   Delete
 10. முதலிடம் பெற்றமைக்கு, வாழ்த்துக்கள். நன்றி கூறிய கூட்டதுல என்னையும் மதித்து எனது பெயரையும் சேர்த்ததற்க்கும் நன்றி.

  பகவான்ஜி நான் இதை தயார்செய்து இரண்டுமாதமாகி விட்டது உடனே செய்திருந்தால் இந்த தருணத்தில் மேலும் தங்களுக்கு மகுடம் சூட்டியது போல் இருந்திருக்கும் தயக்கமே காரணம் தங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் மின்அஞ்சலில் என்னை தொடர்பு கொள்ள முடியுமா ? sivappukanneer@gmail.com
  மேலும் டாக்டர்களை தொடர்பு கொள்ள இந்த நம்பரை கொடுக்கவும் 000 998877665544332211

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளியின் அரட்டையில் பங்கு கொண்டு வரும் உங்களை விட முடியுமா ?

   என்ன தயக்கம் ?என் மின்னஞ்சல் முகவரி இதோ ...k.a.bagawanjee@gmailcom மின்னஞ்சலை அனுப்பி யுள்ளேன் !
   எந்த டாக்டர் நம்பர் இது ?லாங் நம்பரைப் பார்த்தால் ராங் நம்பர் போலிருக்கே ,டுபாக்கூரா?
   வாழ்த்திற்கு நன்றி!

   Delete
 11. சிகரத்தை தொட்டமைக்கு வாழ்த்துக்கள்.

  ஒருவரையும் விட்டு விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு மிக்க நன்றி !
   ஜோக்காளியின் இரண்டாவது பிறந்த நாள் வர இன்னும் 9௦ நாட்கள் உள்ள நிலையில் ,குறுகிய காலத்தில் சிகரத்திற்கு கொண்டு சென்ற உறவுகளை நான் எப்படி மறக்க முடியும் ?
   நன்றி

   Delete
 12. மனம் மகிழ வழிவகுத்து
  மாந் தோப்பை நீ படைத்தாய்
  தினம் சுவைக்கும் எமக்காக
  தித் திக்கும்பகிர்வு தந்தாய் -எம்
  இனம் போற்ற எந்நாளும்
  இது போன்ற வெற்றி குவிக!
  கனம் சிதைந்த மனத்தழகால்
  கை கூப்பி வணங்குகின்றேன்

  வாழ்த்துக்கள் அன்புச் சகோதரனே !

  ReplyDelete
  Replies
  1. அடடா ,கவிதையிலேயே பாராட்டா ?உங்களின் அன்பான ஆதரவுக்கு தாழ் பணிந்து வணங்குகின்றேன் ,வாழ்த்துக்கு மிக்க நன்றி !

   Delete
 13. சிகரத்தைத் தொட்ட ஜோக்காளிக்கு, மேலும் மேலும் தொடர்ந்து சாதனை புரிய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

  சிரி கவிதை அருமை! சரி புவ்வா கிடைச்சுச்சில்ல!!!!!!??

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !
   அன்னபூரணியின் தயவால் புவ்வா வுக்கு ஆபத்தில்லே!

   Delete
 14. வாழ்த்துக்கள் நண்பரே! ஜோக் அருமை! கவிதை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 15. சாதனைகளுக்கு வாழ்த்துகள்.
  நன்றிக்கு நன்றி!

  மருமகள்!
  அப்போ மிதிச்சது பேய்க் கோழியா இருக்குமோ!

  ReplyDelete
  Replies
  1. சாதனைகளா? எத்தனை சாதனைகள் என்று எனக்கே குழப்பமா இருக்கே!

   சும்மா வார்த்தைக்கு மட்டும்தான் மரு'மகள் '!

   எனக்கொரு சந்தேகம் ...பேய்க் கோழி குஞ்சு பொரிக்காதா?
   நன்றி

   Delete
 16. நிறைய நண்பர்களை இந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளின் மூலம் நீங்கள் பெற்றிருப்பதே உண்மையில் சாதனை. இந்த முதலிடம் அல்ல.. இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்கவும். இந்த முதல் இடம் பெற்றதால் உங்களுக்கு எதும் ப்ளாட் அலாட் ஆகிருக்கா... இல்ல பாங்க பாலன்ஸ்ல பல லட்சம் ஏறிருக்கா...? ஆகவே.... பைசாக்கு பிரயோஜனம் இல்லாத இந்த முதல் இடப் பெருமையை விட்டுவிட்டு இன்னும் நிறைய நிறைய நல்ல நகைச்சுவைகளை வழங்கி, நிறைய நிறைய நண்பர்களைப் பெற மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்பது போல் உள்ளது உங்களின் கருத்து ...நாம் எழுதுவதே,அது பல்லாயிரம் பேரை போய் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் தானே ?ப்ளாட்டோ,லட்சமோ கிடைக்கவில்லை என்றாலும் ,என் பதிவுகள் இன்னும் பலபேரை சென்று அடைய இந்த முதலிடம் உதவி செய்யும்!
   பதிவர்கள் அத்தனைப் பேருக்கும் தமிழ் மண ரேங்க் மீது ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது .அதற்கு சாட்சி.. பலரும் சொல்லி இருக்கும் வாழ்த்துக்கள்தான் .
   முதல் இடம் என்பதற்காக நான் பெருமைப் படவில்லை ,இந்த முதல் இடத்தின் அளவீடு என்பது ,ஜோக்காளிக்கு வந்து சேரும் 'ஹிட்' டின் அடிப்படையில்தானே ..அதற்கு நான் சந்தோசப் படாமல் இருக்க முடியுமா ?
   பெரியவர் திரு .G.M.B அவர்கள் கூட தமிழ் மணத்தில் முதலிடம் பெறுவது எப்படி என்று ஒரு பதிவு போடலாமே என்று கருத்து கூறியுள்ளார் .அவர் கண்ணோட்டம் தவறா ,பாலகணேஷ் ஜி ?
   இந்த சந்தோசம் போலியானது என்று தாங்கள் நினைத்தால் ...தமிழ் மண வாக்குப் பெட்டி எதற்கு ?வாசகர் தரும் பரிந்துரை எதற்கு ?அது சூட்டும் மகுடம் எதற்கு ?எடுத்து விடலாமே ?
   #இன்னும் நிறைய நிறைய நல்ல நகைச்சுவைகளை வழங்கி, நிறைய நிறைய நண்பர்களைப் பெற மகிழ்வோடு வாழ்த்துகிறேன்.#
   அவ்வ்வ்,இதுவரை எழுதி இருப்பதெல்லாம் அரைவேக்காடுதானா ?
   கடமையைத் தொடர்கிறேன் ,பலன் இல்லாமலா போய்விடும் என்ற நம்பிக்கையில் !
   தங்களின் வாழ்த்துக்கு நன்றி !

   Delete
  2. இன்னும் நிறையன்னு சொன்னா இதுவரை எழுதினது மோசமானதுன்னு அர்த்தப்படுத்திக்கிட்டா எப்படி,,,? இப்ப மாதிரி இன்னும் நிறையன்னு அர்த்தம்ங்க.

   சீச்சி இந்தப் பழம் புளிக்கும்னு சொல்றதுக்கு நான் சீரியஸா ட்ரை பண்ணி முடியாமப் போனதால இப்டி சொல்றேன்னு அழகா சொல்றீங்க. இதை எந்த ட்ரையும் பண்ணாமயே நான் மேல வந்துட்டு இப்ப நெட்ல வெறியா எழுதாம எப்பாவவது எழுதறதால கீழ இருக்கேன். டவுட்டா இருந்தா உங்க ஊர் ரமணி ஸாரை கேட்டுப் பாருங்க.

   தமிழ் மண வாக்குப் பெட்டி எதற்கு ?வாசகர் தரும் பரிந்துரை எதற்கு ?அது சூட்டும் மகுடம் எதற்கு ?எடுத்து விடலாமே ? ////நல்லாச் சொன்னீங்கய்யா... சினிமா தியேட்டர் இருக்குன்னா எப்பவும் படமே பாத்துட்டிருந்தா... டாஸ்மாக் இருக்குன்னு எப்பவும் குடிச்சுட்டிருந்தா வௌங்கிரும் லைஃப்.

   நல்ல எண்ணத்தோட நான் சொன்னதை நீங்க இப்படித்தான் அர்த்தப்படுத்திப்பீங்கன்னா... வெல்... இதப்பத்தி இனி யார் என்ன கிண்டல் பண்ணாலும் ஒரு வரி பேச மாட்டேன். விடுங்க...

   Delete
  3. கோபித்துக் கொள்ளாதீர்கள் Take it easy !
   மோசமில்லேன்னு நீங்கள் சொன்னதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,,உங்கள் எண்ணப்படி இன்னும் நிறைய எழுதுகிறேன் !

   பதிவர்கள் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம் தமிழ்மணம் திரட்டி !
   அது தரும் ரேங்க்கை மட்டும் மட்டமாய் சொல்வதை ,என்னால் ஜீரணிக்க முடியவில்லை !
   உங்களைப்பற்றி இன்னொருவரிடமா கேட்டு தெரிஞ்சுக்கணும்?பூக்கடைக்கு எதுக்கு விளம்பரம் ?

   #டாஸ்மாக் இருக்குன்னு எப்பவும் குடிச்சுட்டிருந்தா வௌங்கிரும் லைஃப்.#
   டாஸ்மாக் பக்கம் போனாலே வெளங்காது லைப் என்பது என் எண்ணம் !

   தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சுங்க தலைவரே ,வழக்கம் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன் !
   நன்றி !

   Delete
  4. என்னைச் சேர்ந்தவங்ககிட்ட மட்டும்தான் என் கருத்துக்களை பகிர்ந்துப்பேன். அட்வைஸ் பண்ணா யாருக்கும் பிடிக்காதுங்கறதால சொல்லுவேன். அவ்ளவ்தான். அதவிடுங்க... ஆதரவு நிச்சயம் எப்பவும் உண்டுய்யா...நீரும் நம்ம ஆளுல்லா...?

   Delete
  5. அந்த உரிமை உங்களுக்கு உண்டு பாஸ் !
   நன்றி

   Delete
 17. தமிழ்மணத்தில் முதலிடம்...
  சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் நீங்கள் செய்த உதவியால்தான் !
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 18. ரொம்ப மகிழ்ச்சி பகவான் ஜீ!
  உங்களுக்கு கிடைத்த இந்த அங்கிகாரத்தை எனக்கும் பங்களித்ததில் நன்றிகள்!
  அப்புறம் பாலகணேஷ் கூறியதுபோல லட்சமும் ப்ளாட்டும் கிடைத்தால், மறக்காமல் என்னுடைய அக்கவுண்ட்டில் போட்டுவிடவும்.

  ReplyDelete
  Replies
  1. என்னா அகுடியா பிரதர் அஜிசு...? அவ்வ்வ்வ்வ்.

   Delete
  2. லட்சமென்ன ,கோடி வந்தாலும் கொடுத்துவிடுகிறேன் ,பிளாட் கிடைத்தால் சமையல் அறைதான் உங்களுக்கு ,சம்மதமா ?எனக்கு பெட் ரூம் வேண்டி இருக்கே !
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
  3. பால கணேஷ் ஜி ,நான் நம்ம அஜிசுக்கு தருவதாய் நான் சொல்லி இருப்பதில் எதுவும் தப்பில்லையே?
   நன்றி

   Delete
 19. 640வது பிறந்த நாளா...? செம காமெடியா இருக்கு ஜி...ஆறு தலைமுறை பதிவரே வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ஓ..அப்படி ஒரு அர்த்தம் வருகிறதா ?ஜோக்காளி பிறந்த நாளை நாட்கணக்கில் சொன்னது தப்பா ?
   சரி ,அதை ஜோக்காளி ,தமிழ் மணத்தை கட்டிக்கிட்ட நாட்கணக்கில் மாற்றிவிட்டேன் !சரிதானே ?
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 20. அலுவல் காரணமா இணைய ப்பக்கம் வரவே முடியல.. வாழ்த்துகள் நண்பரே..

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு ஆணி பிடுங்கிற வேலைன்னாலும் அதுதான் முக்கியம் ஆவி ஜி !
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete

 21. தமிழ்மணத்தில் இணைந்த 607 நாளில் முதலிடம் பெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு பகவான்ஜி அவர்களே! எல்லோரையும் மறவாமல் நன்றி தெரிவித்திருக்கும் உங்களுக்கு என் வணக்கம். அனைவரையும் சிரிக்க வைக்கும் உங்கள் பதிவில் அடிக்கடி பின்னூட்டம் இடாவிடினும் தொடர்ந்து இரசித்துக்கொண்டிருக்கிறேன். இனியும் தொடர்வேன்.

  ReplyDelete
  Replies
  1. நானும் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன் உங்கள் அனுபவத்தில் இவ்வளவு சம்பவங்களை நினைவில் வைத்துக் கொண்டு எழுதி வரும்போது ,என்னை ஆரம்ப காலத்திலேயே ஊக்குவித்த உங்களை எப்படி மறக்க முடியும் அய்யா ?
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 22. சந்தோசம் நண்பரே, நீங்கள் இந்த இடத்தை தக்க வைக்க வாழ்த்துக்கள், அது உங்களால் முடியும் !

  ReplyDelete
  Replies
  1. முதலிடம் பிடிக்கும் போராட்டம் முடிந்தது ,இனி தக்க வைக்கும் போராட்டத்தை தொடங்கியாச்சு !
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 23. ஒ! என் பேரும் இருக்கு பாஸ்!!!!!
  இவ்ளோ கொஞ்ச நாளில் என்னை friend ஆ ஏற்றுக்கொண்டதற்கு நன்றி! சாதனைகள் தொடரட்டும்:))

  ReplyDelete
  Replies
  1. ஜோக்காளி கமெண்ட் அரட்டையில் குறுகிய காலத்தில் நிறைய கலந்து கொண்டவர் என்ற தகுதி உங்களுக்கு உண்டே!
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 24. எல்லாருக்கும் ஒரு வழி, ஜோக்காளிக்குத் தனி வழி! ('அவர்' ஆயிரம் தான்; நீங்கள் ஆயிரத்து நூறுக்கும் மேலா? உங்களையெல்லாம் எப்படி அய்யா மற்றவர்கள் கடந்துபோவது? 'திருமங்கலம் பார்முலா' ஏதாவது கிடைக்குமா?)

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது போல் என் வழி தனி வழி தான் ,உங்களின் நீண்ட ஒரு பதிவுக்கு ,என் பத்து பதிவு சமமாகுமா ?
   என்னை கடந்து போகணும்ன்னா ,பிள்ளையார் சுழி மட்டும் போட்டு தினசரி நாலு பதிவை தட்டி விடவேண்டியது தான் )))))
   ஜோக்காளியின் பார்முலாவை ஒரு பதிவாய் போட இருக்கிறேனே !அதுவரை பொறுத்திருங்கள் !
   நன்றி!

   Delete
 25. மென் மேலும் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன் சார் நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய உங்கள் இதயம் சினிமா சினிமா என்றே துடிப்பதைக் கேட்டேன் ,சாதிக்க உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
   உங்களின் அன்பான ஆதரவிற்கும்,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 26. தொடர்ந்து அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வையுங்கள். மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. உங்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேறுவதே என் லட்சியம் பக்கிரிசாமி,தொடருங்கள் !
   உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி !

   Delete