22 July 2014

T V காமக் கதை தொடர்களில் இப்படியும் கார்டு போடலாமே !

      '' டி வி தொடர் டைட்டில் கார்டில் ,ஒரு எழுத்தைத் தப்பா எழுதியதால் ,வேலையில் இருந்து உன்னை தூக்கிட்டாங்களா ?என்ன எழுதினே ?''
       ''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''


சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...

தின 'சிரி ' ஜோக்!

ஓடிப் போய் கல்யாணம்?நல்லா யோசிக்கணும் !

''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்குத்தான் போவாங்க ,நீங்க எதுக்கு வங்கிக்கு ஜோடியா வந்து இருக்கீங்க ?''
''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு நீங்கதானே விளம்பரம் போட்டு இருந்தீங்க !''

'சிரி'கவிதை?

செம்மொழி தமிழுக்கே இந்த சோதனையா ?

பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து நீதி சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !

20 comments:

 1. நல்லவேளை ரெஜிஸ்டர் ஆபீஸுக்கு போனாங்க,,, ஐயா அப்துல் கலாம் அவர்களிடம் போகாமல் போனார்களே....
  செம்மொழி அருமை பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. அவங்க வங்கிக்கு போனாங்க கில்லர் ஜி ....அய்யாகிட்டே போயிருந்தால் ,நாடு வல்லரசு ஆக ஆறேவருஷம் இருக்கிற இந்த நல்ல நேரத்தில்...உங்களைப் போன்ற புத்திசாலி தம்பதிகளை ஊக்குவிக்கிறேன்னு சொல்லி இருப்பாரோ ?
   நன்றி

   Delete
 2. Replies
  1. அருமை காதல் ஜோடி வங்கிக்கு போனது தானே ?
   நன்றி

   Delete
 3. 'பண்'படுத்தும் ஹிஹி ஜி...!

  ReplyDelete
  Replies
  1. இப்போ வர்ற டெலி சீரியல்கள் எல்லாம் அப்படித்தானே இருக்கு ஜி ?
   நன்றி

   Delete
 4. முதலில்
  கவிதைக்குப் பாராட்டு
  அடுத்து
  எழுத்துப் பிழையும் விளம்பரமும்
  சிந்தனைக்கு விருந்து!

  ReplyDelete
  Replies
  1. பேருக்குத்தான் செம்மொழி ,வேறெந்த மதிப்பும் தருவதாக தெரியவில்லையே!
   தொடர்களைப் பார்க்கையில் இந்த எழுத்துப் பிழையும் உண்மையாகவே படுகிறது !
   நன்றி

   Delete
 5. Replies
  1. தன்னை அறியாமல் உண்மையை எழுதியதால் வேலைப் போனது தான் மிச்சம் !
   நன்றி

   Delete
 6. ஹா...ஹா...ஹா ஆங்கிலத்தில் wife - life change செய்ய என்று ஒரு ஜோக் உண்டே அது நினைவுக்கு வருகிறது.

  போலீஸ் ஸ்டேஷன்தானே செல்வாங்க/சொல்வாங்க என்னடா என்று பார்த்தேன்! கனவை நனவாக்கும் சமாச்சாரமா! ஹா..ஹா..ஹா..

  பசுவுக்கும் தமிழுக்கும் என்னங்க சம்பந்தம்?


  ReplyDelete
  Replies
  1. இரு கோடுகள் படத்தில் life/file என்று வரும் டயலாக்கும் இதைப் போன்றதுதான் !

   வங்கிகள் தாலி கட்ட வச்சு லோனும் கொடுத்தா நல்லாத்தான் இருக்கும் !

   பசுமாடு மாதிரி ,நாமளும் தமிழுக்கு உரிய மரியாதைக் கொடுன்னு கத்தத்தான் செய்கிறோம் .ஆனால் மத்திய அரசு ,செத்த மொழிக்கு தர்ற மரியாதையைக்கூட தமிழுக்கு தர மாட்டேன் என்கிறதே !
   நன்றி

   Delete
 7. அய்யோ பாவம் உண்மையைச் சொன்னாக்கூட இந்தக்கதியா.......

  ReplyDelete
  Replies
  1. உண்மைக்கு இருக்கிற மதிப்பு இவ்வளவுதான் போலிருக்கு !
   நன்றி

   Delete
 8. //''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''//

  இப்படி எழுதுவதே சரி.

  ReplyDelete
  Replies
  1. எந்த தொடரைப் பார்த்தாலும் நல்ல விசயத்தை எதுவும் சொல்ற மாதிரி தெரியலேயே!
   நன்றி

   Delete
 9. ஹாஹாஹா! நல்லா போட்டாரு டைட்டில் கார்டு! இப்ப வர்ற மெகாதொடர்களுக்கு பொருத்தமா!

  ReplyDelete
  Replies
  1. பண் படுத்தலேங்கிறது நிச்சயம் ,புண் படுத்துது என்பது சந்தேகமே !
   நன்றி

   Delete
 10. ஹாஹாஹா டைட்டில் சூப்பர் ஜி! இப்ப வர்ற சீரியல் எல்லாம் அப்படித்தானே இருக்குங்க?!!!!!!!

  கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமானு பாடலியாங்க அவங்க?!!!!

  சிரி கவிதை உண்மை!

  ReplyDelete
  Replies
  1. இதைச் சொன்னால் ,இன்னுமஎட்டனை நாளைக்குதான் ராமாயணம் ,மகா பாரதத்தை கட்டிட்டு அழுவுறது என்று சொல்வார்களோ ?

   அடுத்த வரியான 'ஓடிப் போய்த்தான் கல்யாணம் தான் கட்டிக்கலாமே 'என்றும் பாடினார்களே !

   ஆமாம் உண்மையன்றி வேறில்லை !
   நன்றி

   Delete