10 August 2014

ந'டிகையின் பிறப்புரிமையா அது ?

---------------------------------------------------------------------------------

இலவச சினிமா இந்த தியேட்டரில் ?

           '' அடப் பாவி ,மயக்க மருந்து கொடுத்து  ஒரு மணி நேரமாச்சே, உனக்கு மயக்கம் வரலியா ?''
                  ''நர்ஸோட நீங்க இப்படி சில்மிஷம் பண்ணிக்கிட்டு இருந்தா எப்படி வரும் ,டாக்டர் ?''
சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக், !
ந'டிகையின் பிறப்புரிமையா அது ?
''அட பரவாயில்லையே,புருஷன் டைவர்ஸ் கேட்டாலும் அந்த நடிகை கொடுக்க முடியாது  சொல்றாங்களாமே ?''
''டைவர்ஸ் நீங்க என்ன கேட்கிறது ,நான்தான் பண்ணுவேன்னு சொல்றாங்களாம் !''

'சிரி'கவிதை!

கரெண்ட் பில் எப்படி குறையும் !

உடனே குப்பையில் எறியவேண்டியதை
நான்கு நாட்கள் கழித்து  தூக்கி  எறியவும் 
நமக்குத் தேவையாய் இருக்கிறது 'பிரிட்ஜ் '!

24 comments:

 1. வணக்கம்
  தலைவா.
  ஆகா...ஆகா.. அருமையான நகைச்சுவை... முதலில் படித்த பதிவு தங்களின் பதிவுதான்...மனதில் மகிழ்ச்சியாக உள்ளது
  பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அதிகாலையில் எழுந்து படித்து ,அருமை என்று கருத்துரை தந்தமைக்கு நன்றி !

   Delete
 2. பிரிட்ஜ் ற்கு இப்படியும் ஒரு பயன் இருக்கிறதா
  தம 1

  ReplyDelete
  Replies
  1. உடனே வீச மனமுமின்றி,அடுத்த நாளே அதைப் புசிக்க மனமுமின்றி..பெரும்பாலான வீடுகளில் இப்படித்தான் பயன்படுத்துகிறார்கள் !
   நன்றி

   Delete
 3. ஆஹா... இன்னும் இந்த டாக்டர் நர்ஸ் ஜோக்ஸ் முடியலியா? :))))

  இதே போல மாமியார்-மருமகள் பிச்சைக்காரர்ஜோக் கூட உண்டே... :)))))

  உண்மை...உண்மை..உண்மை!

  ReplyDelete
  Replies
  1. முதல்லே அவங்களே நிறுத்திக்கச் சொல்லுங்க ,நான் நிறுத்திக்கிறேன் !))))

   இருக்குமிருக்கும் ,இல்லாமலா போகும் ?

   முப்பொழுதும் நீங்க சொல்ற உண்மை போலிருக்கே !
   நன்றி

   Delete
 4. சிரிப்பு 1, டாக்டரா பிறக்கலையேன்னு வருத்தப்பட வைத்தது.

  சிரிப்பு 2, ‘கொல்’ என்று சிரிக்க வைத்தது.

  சிரி கவிதை, நம் மக்களின் போலி நாகரிகத்தைத் தோலுரித்துக் காட்டியது.

  ஆக, மூன்றுமே முத்து முத்து முத்தான பதிவுகள்.

  ReplyDelete
  Replies
  1. 1 டாக்டரால் பிறக்கலாம் ,பிறக்கும் போதே எப்படி டாக்டரா பிறக்கமுடியும் ?
   2.நான் தினசரி மொக்கை போடுவதால் எதுவும் கோபம் இருந்தால் சொல்லிடுங்க ,'கொல்'ல நினைக்காதீங்க!
   3.போலி கௌரவம்னு கூடச் சொல்லலாம் !
   நன்றி

   Delete
 5. அதானே...அதை பார்த்துகிட்டு இருக்கிறவர்க்கு எப்படி தூக்கம் வரும்...

  ReplyDelete
  Replies
  1. இப்போ மயக்கம் வரலைன்னா எப்பவும் தூக்கம் வராதுதான் !
   நன்றி

   Delete
 6. அட ஆமாங்க பாஸ்!!
  பிரிட்ஜ் ஒரு மின்சாரக்குப்பை த்தொட்டி தான்:)
  இன்றும் தம ஆறு!!!!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்ச நேரம் மின்சாரக் குப்பைத் தொட்டியில் இருந்தது போல் குளிர்ச்சியைத் தருதே ,உங்க ஆறு !
   நன்றி

   Delete
  2. எப்டி இப்படி? கலக்குறீங்க பாஸ்!

   Delete
  3. ஆறிலே நீராடிய சுகத்தைத் தந்தது என்றுகூடச் சொல்லலாம் !
   தொடர் கண்காணிப்புக்கு நன்றி

   Delete
 7. மயக்கமருந்து கொடுத்ததே சில்மிசம் செய்யத்தானா ? இனிமேல் டாக்டர்கிட்டே போனால் மயக்கமருந்து வேண்டாம் வேணும்னா கண்ணை மூடிக்கிறேனு சொல்லப்போறேன்.

  புருசன் டைவர்ஸ்சுக்கே ? நான்தான் பண்ணுவேன்னு சொன்னா...............................

  இது கவிதை மட்டுமல்ல... இதற்க்குள் கதையே இருக்கிறது உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு நேரம் மயக்கம் வந்த மாதிரி நடித்ததும் சில்மிசத்தை ரசிக்கத்தானா ?

   அடுத்த புருஷனை நானே தேடிககுவேன்னு அர்த்தம் !

   அதில் உள்ளதை எல்லாம் சாப்பிட்டால் உண்டாகும் சோகக் கதைதானே ?
   நன்றி

   Delete
 8. மூன்றுமே அதிரடியா இருக்கு! கலக்கல் ஜோக்ஸ்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,அடிதடியா இல்லையே !
   நன்றி

   Delete
 9. மருத்துவரின் சில்மிஷத்துக்கு முன் மயக்க மருந்து வேலை செய்யாது போல..

  அவுங்க நடிகையாச்சே, அதனால அவுங்க தான் முதல்ல கொடுப்பாங்க

  ஃபிரிஜ்க்கு அருமையான விளக்கம்.

  ReplyDelete
  Replies
  1. மருத்துவரே ஒரு வித மயக்கத்தில் இருக்கும் போதுமயக்க மருந்து மட்டும் வேலைச் செய்யுமா ?

   இதிலும் First choice அவங்களுக்குத் தானா ?

   எந்த கம்பெனியும் தராத விளக்கம் !
   நன்றி

   Delete
 10. ஹாஹாஹாஹாஅ.......ரொம்பவே நல்ல மருத்துவருங்க ஜி!

  பெண்கள் உரிமை மீறினால் கொடிபிடிக்கப்படும்.....ஜி!

  பேசாம இதையே ஃபிரிட்ஜ் கம்பெனிக்காரங்க விளம்பரத்துக்கு யூஸ் பண்ணலாம்ஜி....எதுக்கும் காப்பிர் ரைட் வாங்கி வைச்சுக்கங்க ஜி!

  ReplyDelete
  Replies
  1. இதுக்குதான் ஆப்பரேசன் தியேட்டர் பக்கம் அடிக்கடி ஒதுங்குவார் போலிருக்கே !

   சமாதானக் கொடியையா ?

   இதுக்கு சிக்ஸ் ஸ்டார் தரமும் கொடுக்கலாமே !
   நன்றி

   Delete
 11. மூன்று படைப்பும்
  மூளைக்கு வேலை தரும்
  வலுவான நகைச்சுவை

  ReplyDelete
  Replies
  1. குறுக்கெழுத்துப் போட்டியில் கலந்து கிட்ட மாதிரி வேலை தருதா ?
   நன்றி

   Delete