12 August 2014

கணவனின் சந்தோசம் இதற்குத்தானா ?

------------------------------------------------------------------------------------------------------------------------------
கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் !                  

            ''பொன் விழா கண்ட நம்ம பள்ளி இதுவரை மாநில அளவில் முதல் இடம் வராததற்க்கு காரணம் ,பள்ளியோட இலச்சினை தானா?''
     ''ஆமா ,'பிறர்க்கு வாழ் 'என்பதை  மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''

சென்ற வருடம் இதே நாளில் ...ஜோக்காளியில்...
தின 'சிரி ' ஜோக்! 

கணவனின் சந்தோசம் இதற்குத்தானா ?

''என்னங்க , அரசாங்க வேலை  கிடைச்சாச்சு ... நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !
''ரொம்ப சந்தோசம் , நீ  'சனி''ங்கிறதை இப்போவாவது ஒத்துக்கிட்டியே !''
'சிரி'கவிதை!

இந்த இசையை ரசிக்க முடியலே !

 விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
இடை இடையே சங்கொலி சத்தமும் ...
'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !

20 comments:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் நகைச்சுவை அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. டய்ங் டய்ங்' மணிச் சத்தம் உங்களையும் எரிச்சல் பண்ணி இருக்குமே ,ரூபன் ஜி ?
   நன்றி

   Delete
 2. மாணவர்கள் ரொம்பவே நல்ல மாணவர்களாக இருப்பார்கள் போல...

  கணவன் சொன்னதற்கு மனைவியோட பதில் என்னங்க. ஒரு வேளை வாயால பதில் சொல்லாம கையால பதில் சொல்லியிருப்பாங்களோ?

  அந்த இசை ஒரு பாவப்பட்ட இசை தான்.

  ReplyDelete
  Replies
  1. அந்த நல்ல மாணவர்களில் நானும் ஒருவன் ,மாநில அளவில் முதலிடம் பிடிக்க வேண்டுமென்று படித்த என்னை ,பிறர்க்கு வாழ் என்ற உபதேசம்தான் விட்டு கொடுக்க வைத்து விட்டது ,ஹிஹி ))))

   அதையெல்லாம் சென்ஸார் கமிட்டி வன்முறைஎன்று கட் செய்து விட்டார்களே !

   இசைப்பவனும் பாவப்பட்ட மனிதன்தான் ,இப்படியும் ஒரு தொழில் ?

   நன்றி

   Delete
 3. அடடா.... இப்படியும் ஒரு காரணமா!!

  ஹா...ஹா... சின்ன ஆறுதல் போல!'

  அமைதிக்கு இணை எதுவும் இல்லை.

  ReplyDelete
  Replies
  1. கார் ஓட்டத் தெரியாதவன் தெருக் கோணல்ன்னு முட்டி மோதி நிக்கிற மாதிரி இதுவும் ஒரு காரணம் !

   சும்மாவே தாங்கமுடியலே,வேலை வேற கிடைச்சிடிச்சா ?))))))

   அடக்கம் என்பது என்றும் அமைதியாகத்தான் இருப்பது ,இருக்க வேண்டியது ?

   நன்றி

   Delete
 4. அந்த அம்மா சனிங்கிறதை ஒத்க்க்கிட்டாச்சு.... ஞாயிறுன்னு ஒரு அர்த்தமும் இருக்கே...

  ReplyDelete
  Replies
  1. ஞாயிறு ,இன்னிக்கி முழுதும் நான் ரெஸ்ட் எடுக்கணும் சமையலை நீங்களே செய்யணும்னு, வீட்டிலே படுத்துகிட்டு ,சனி 100 சதம் பிடிச்சு ஆட்டப் போவுதுன்னு அர்த்தம் !
   நன்றி

   Delete
 5. //'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !//

  காரணம், ஒவ்வொருவர் அடிமனதிலும் தலை நீட்டும் மரண பயமோ!?

  ReplyDelete
  Replies
  1. காலா என் அருகில் வாடா என்று அறைகூவல் விடுக்கும் பாரதி அபிமானிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள் ? அவர்களிடம் மரண பயம் என்ன செய்யும் ?
   நன்றி

   Delete
  2. நம்பிஜி ,இன்னொரு கமெண்ட்டை நீங்களே டெலிட் செய்து விட்டீர்கள் போலிருக்கே ,அதுவும் சரிதான் !

   Delete
  3. சரிதான்...சரிதான் பகவான்ஜி.

   Delete
 6. சனிக் கிழமை சனி ஓகே....ஞாயிறும் சனியாகிவிட்டதோ>....

  சிரி கவிதை.....சிரிப்பை அடக்கிவிடுகிறது ஜி! அந்த சத்தங்கள் நமக்கு.....உனக்கும் ஒருநாள் இதுதாண்டா...ஆனா என்ன உனக்குத் தெரியாது...இப்பவே தெரிஞ்சுக்க அப்படின்னு சொல்றதால...

  ReplyDelete
  Replies
  1. ஞாயிறு மட்டுமில்லை ,வாழ்க்கை முழுதுமே இனி சனிதான் !

   இன்று எனக்கு ,நாளை உனக்கு என்று சிம்பாலிக்காய் சொல்கிறதோ ?

   நன்றி

   Delete
 7. சுமாரான மாணவர்கள்.
  நல்ல மனைவி.
  கெட்ட சங்கொலி.

  ReplyDelete
  Replies
  1. மூணுமே சூப்பர்ன்னு சொல்ல வந்தீங்க சரி ,ஏன் சொல்லலே ?
   நன்றி

   Delete
 8. கணவனின் சந்தோசம் இதற்குத்தானா ?-- இதற்கு இல்லேன்னா...வேறு எதற்க்கா..இருக்கும்..??

  ReplyDelete
  Replies
  1. ஒப்புதல்வாக்குமூலம் கிடைச்சா அவருக்கு சந்தோசமாத்தானே இருக்கும் ?
   நன்றி

   Delete
 9. 'பிறர்க்கு வாழ் 'என்றால்
  தன் வாழ்வு என்னாவது!

  ReplyDelete
  Replies
  1. தியாக தீபங்கள் தன் வாழ்வைப் பற்றி நினைப்பதில்லையே !
   நன்றி

   Delete