Sunday, 17 August 2014

நியூஸ் ரீடர்ன்னா பார்க்கிற மாதிரி அழகாய் இருக்கணுமாம் !

------------------------------------------------------------------------------------------------------------
                ''நம்ம டிவி நேயர் ஒருவர் ,நியூஸ் ரீடரை உடனே  மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா ,ஏன் ?''
                 ''செய்தியின் விஷுவல் எதுவும் இல்லைன்னாலும் நியூஸ் ரீடராவது பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமான்னு கேட்டு இருக்கார் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு !

''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி !

அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
எழுதியிருப்பதைப் போல ...
டாஸ்மாக் கடைகளில் ஊக்க'மது 'கைவிடேல் என எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

24 comments:

  1. 01. ரொம்ப வெவரம் தெரிஞ்சவரா இருப்பாரோ ?

    02. M.B.B.S படிச்சவரு, அதான் கரெக்டா சொல்லிட்டாரு...

    03.ஆத்திசூடியா அடியாத்து...

    ஆத்தி குடி....
    ஆம்லெட்டகடி...
    இப்படியா ?

    ReplyDelete
    Replies
    1. 1.டிவி செய்தின்னா ஏதாவது பார்க்கிற மாதிரி இருக்கணும்னு நினைக்கிற விவரமான ஆள் !
      2.அதுக்குத் தான் அந்த படிப்பெல்லாம் படிக்க வைக்கிறாங்களா?
      3.உங்க டாஸ்மாக் சூடி அருமை !
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    இரசிக்கவைக்கும் நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரூபன் ஜி ,சுறுசுறுப்பானவர் நீங்க ,தினசரி காலையிலேயே கருத்தை சொல்லி விடுகிறீர்கள் !
      நன்றி

      Delete
  3. ஹாஹாஹாஹா......ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. ரேடியோ காதுக்கு விருந்துன்னா ,டிவி கண்ணுக்கு விருந்தா இருக்கணுமா,வேணாமா ?
      நன்றி

      Delete
  4. டாக்மாக்கிலும் குறளா
    தம3

    ReplyDelete
    Replies
    1. ஊக்கப் பானம் அருந்துபவர்களை ஊக்கப்படுத்த வேண்டாமா ?
      நன்றி

      Delete
  5. 1. அது ச...ரி!

    2. ஹா...ஹா..ஹா...

    3. அது ச.....ரி!

    ReplyDelete
    Replies
    1. முதலும் ,முடிவும் யோசிக்க வைத்ததா,நடுவுக்கு மட்டும் சிரித்துள்ளீர்களே?
      நன்றி

      Delete
  6. ஆமாமா...செய்தியா..கேட்கிறோம்..செய்தி ரீடரைத்தானே கவனிக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நாம பரவாயில்லை ,உடையையும் ,நகையையும் மட்டுமே பார்ப்பவர்களை விட !
      நன்றி

      Delete
  7. ஒளவைக்கே வந்த சோதனையா இது !...:))

    ReplyDelete
    Replies
    1. ஔவைக்கு இது தெரிந்து இருந்தால் திருத்தி எழுதி இருப்பாரோ ?)))
      நன்றி

      Delete
  8. நியாயமான கோரிக்கைதான்! டாக்டர் சரியாத்தான் சொல்றாரு! செய்தாலும் செய்வார்கள்! மூன்றுமே கலக்கல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கலக்கல் கருத்துக்கு நன்றி

      Delete
  9. அவரென்ன டி.வி.’நேயரா’, ஜொள்ளு ‘வாயரா?!

    ReplyDelete
    Replies
    1. காணச் சகிக்காம உருப்படியா ஒண்ணைச் சொல்லி இருக்கிற அவரா ஜொள்ளு வாயர் ?
      நன்றி

      Delete
  10. இரண்டாவது நகைச்சுவை சிரிக்க சிந்திக்க...
    ஆத்திசூடி... ஆஹா... சூடி.

    ReplyDelete
    Replies
    1. இன்று கில்லர்ஜி தொடங்கிய கருத்துரையை தொடர்ந்து , முடிவில் வந்து கருத்துரைத்தமைக்கு நன்றி !

      Delete
  11. அதுக்குதான் ந்யூஸ் பார்கிறாரோ ?
    இந்த முறை கவிதையும் சென்ற ஆண்டு போலவே?

    ReplyDelete
    Replies
    1. செய்திக்காகவே செய்தியைப் பார்க்கிறவர்கள் ..இல்லை இல்லை ...கேட்கிறவர்களும் உண்டே !
      சென்ற ஆண்டு எழுதியது தான் !
      நன்றி

      Delete
  12. கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா?
    சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. யாராவது சந்தோசப் படுவாங்களா?
      நன்றி !

      Delete