18 August 2014

காதலியின் அந்த காலணிக்கு,இந்த காலணி சரியா போச்சு !

''காதலிக்கு முதலில் கொலுசுதான் வாங்கித் தரப்போறீயா ,ஏன் ?''

       ''தயங்கித் தயங்கி நான் காதலை அவளிடம் சொன்னப்போ ,

காலணியைக் கழட்டாம இருந்தாளே,அந்த நன்றிக்காகத்தான் !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..
குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை!
                 ''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  தூண்டுகோலா இருந்தது லேன்ட் லைன் போன்தான்னு எப்படி சொல்றீங்க ?''
                 ''ஓயாமே டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சு ஞாபகப்படுத்திக்கிட்டு இருந்ததே !''

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !

சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
தரித்திர நாராயணன்களும் உண்டு !

27 comments:

 1. வணக்கம்
  இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அதிகாலை முதல் வரவுக்கு நன்றி !

   Delete
 2. வணக்கம்
  த.ம1வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அதிகாலையிலேயே என் கணக்கிலும் வரவு வைத்ததற்கு நன்றி !

   Delete
 3. இந்த முறை காமெடி யா இல்லை பாஸ்! கவித ...கவித!!!
  thama 2

  ReplyDelete
  Replies
  1. காதல் என்றாலே கவிதையும் வந்து விடுகிறதே !
   நன்றி

   Delete
 4. Replies
  1. மிக்க நன்றி அய்யா !

   Delete
 5. மூன்றுமே சூப்பர் ஜி!

  ReplyDelete
  Replies
  1. டாடா ,பிர்லாக்களை இப்போது தோற்கடித்து விட்டாராமே அம்பானி ?
   நன்றி

   Delete
 6. என்ன ஒரு நன்றியுணர்வு!

  லேன்ட்லைனில் இப்படி ஒரு ஆபத்தா...

  அது என்னவோ உண்மைதான்!

  மொத்தத்தில் ஹா...ஹா...ஹா..

  ReplyDelete
  Replies
  1. காலைப் பிடித்து விட்டார் நல்லா வருவார் !

   குடிகாரனுக்கு இது ஒரு சாக்கு !

   திருப்பதிக்கு வரும் வருவாயில் கோடியில் ஒரு பங்காவது நம் மதுரையில் அப்பன் திருப்பதிக்கு வருமா ஸ்ரீ ராம் ஜி ?
   நன்றி

   Delete
 7. நன்றிக்கு நன்றியை இப்படியும் தெரிவிக்கலாம் போலிருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,இடையணி மேகலை வாங்கித் தந்து நன்றி தெரிவிக்காமல் போனாரே !
   நன்றி

   Delete
 8. 01. இந்த மாதிரி காதலிக்கு ரெயின்போ காலனியில ஒரு ப்ளாட்டே வாங்கி கொடுக்கலாமே...

  02. நல்லவேளை வால்கிளாக்கை சொல்லலை அது கு’’டிக் கு’’டிக் னுசொல்லுமே...

  03. உண்மைதான் பகவான்ஜி தேவகோட்டையில் பணக்கார பெருமாள், ஏழை பெருமாள், எனஇரண்டு கோயில்களும் அருகருகே உள்ளது, இதில் யாரைக்கும்பிட்டால் ? பலன் என்பதை கேட்டு இரண்டு பெருமாளிடமும் கும்பிட்டு இருக்கிறேன் இதுவரை பதில் கிடைக்கவில்லை.

  ReplyDelete
  Replies
  1. 1.அவர் தமிழ்க் காதலன் ஆகையால் காலணிவாங்கி தந்துள்ளார் ,இங்கிலீஷ் காதலனாய் இருந்து இருந்தால் நீங்கள் சொன்னமாதிரி colonyல் வீடு வைத்துக் கொண்டிருப்பாரோ என்னவோ ?
   2.அவர் வெளிநாட்டு சரக்கு அடிக்கிறவர் ,அதனால் குடிக் குடிக் அவர் காதில் விழவில்லை !
   3.என்னை தான் கை விட்டுட்டே,ஏழை சாமியையாவது வாழ வை என்று பணக்கார பெருமாளிடம் வேண்டிப் பாருங்கள் !
   நன்றி

   Delete
 9. மூன்றுமே சூப்பர் ஜோக்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி !

   Delete


 10. //...காலணியைக் கழட்டாம இருந்தாளே,அந்த நன்றிக்காகத்தான் !''//

  தங்கமான பொண்ணு. தங்கக் கொலுசே போடலாம்!

  ReplyDelete
  Replies
  1. சமீபத்தில் தங்கச் சட்டை போட்டு அசத்தினவருக்கு வேண்டுமானால் தங்கக் கொலுசு போடும் வசதி இருக்கலாம் !
   நன்றி

   Delete
 11. Replies
  1. //சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
   தரித்திர நாராயணன்களும் உண்டு !//

   ஜம்மட்டி அடி!

   Delete
  2. நண்பா சம்மட்டியா ? ஜம்மட்டியா ? ஏன் கேட்டேன்னா ? அடிகூட ஜம்முனா ? இருக்கும் அதனால் குசம்பிட்டேன் SORRY குழம்பிட்டேன்.

   Delete
  3. நம்பி ஜி ,மனுசனில்தான் ஏழைப் பணக்காரன் என்றால் கடவுளிலுமா ?யாரிடம் முறை இடுவது ?
   நன்றி

   Delete
  4. கில்லர்ஜி,அழகான ஜமுனா கையாலே அடிவாங்கினா கூட ஜம்முன்னு இருக்காதே !
   நன்றி

   Delete
 12. காலணியைக் கழட்டாம இருந்தாளே...
  சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. மனது என்னாகுமோ என்று அடித்துக் கொண்டிருக்க ,காதலி காலணியை கழட்டாட அந்த நிமிடம் தான் வாழ்க்கையில் மறக்க முடியாத நிமிடம் இல்லையா ?
   நன்றி

   Delete