20 August 2014

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !

---------------------------------------------------------------------------------

ஜூஸிலும் ரெண்டு வகையா ?

''சாத்துக் குடி ஜூஸ் கேட்டா ,தண்ணிச்சாற்றை 

கொண்டுவர்றீயே,நியாயமா ?''

''தனிச் சாறு நூறு ரூபாயாகும் ,கொண்டுவரவா ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !


''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா உங்க உடம்பிலே என்ன நோய் இருக்குன்னு ன்னு கண்டுபிடிக்க முடியலே ?''

''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !

லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
அவரவர் கையிலேதான் இருக்கிறது !

30 comments:

 1. 'என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம்!'
  சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. மனித சமூகத்தில் விதவிதமான நோய்கள் வந்து கொண்டே இருக்கிறதே ,சமீபத்தில் ,எபோலா !
   நன்றி

   Delete
 2. ஹா...ஹா...ஹா... ஆனால் ஒருமுறை அப்படியும் தண்ணீர் கலக்காமல் குடித்துப் பார்க்கணும்!

  ஹா...ஹா... ஹா... காலம் செய்த கோலமடி... கடவுள் செய்த குற்றமடி!

  நல்ல தத்துவம்.

  ReplyDelete
  Replies
  1. சில விசயங்களில் ஒரிஜினல் அவ்வளவாய் ரசிக்கும் படி இருக்காதே ?உதாரணமாய் தங்கம் ,நடிகை ..etc
   அதுசரி ,பிள்ளைப் பேற்றைக் கொடுப்பது கடவுள்தானே ?
   முன்னேற எண்ணம் உள்ளவர்கள் கடைப் பிடிக்கும் தத்துவம் !
   நன்றி

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி அய்யா !

   Delete
 4. வணக்கம்
  தலைவா..
  பல தடவை இரசித்துப்படித்தேன் பகிர்வுக்கு நன்றி
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஒரே தடவை படித்ததில் ஒரு வேளை புரிய வில்லையோ ?
   நன்றி

   Delete
 5. வணக்கம்
  த.ம 3வது வாக்கு
  என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வடிந்து உருகும் தாயுள்ளம்:

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாக்குக்கு நன்றி !

   Delete

 6. கடைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு கற்பனை பொங்கி விடுகிறது.

  சாத்துக்குடி ஜூஸ் என்று கேட்பதற்குள்ளாகவே ஐஸ் போட்டா ஐஸ் போடாமலா என்று வேறு கேட்கிறார்கள். டாட்டாவாக இருந்தாலும் பிர்லாவாக இருந்தாலும் கடைசியில் உலகுக்கு டாட்டா சொல்லும்போது கையில் ஒன்றுமில்லை.
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. எந்தக் கடைக்குள் நுழைந்ததும் என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் ,குடும்பத்தில் குழப்பம் வந்திடக் கூடாதில்லே ?

   உலகத்திற்கு டாட்டா சொல்லும்போது ஒன்றும் கொண்டு போகாமல் இருக்கலாம் ,ரேஷன்அரிசியை வாங்க வேண்டுமென்றாலும் சம்பாதித்து தானே ஆகணும் ?
   நன்றி

   Delete
 7. //சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும்
  அவரவர் கையிலேதான் இருக்கிறது !//

  தன்னம்பிக்கை தரும் அருமையான கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நம்ம கையிலே என்ன இருக்குன்னு யாரும் சொல்லக் கூடாதில்லே?
   நன்றி

   Delete
 8. இரண்டு சிரிப்புத் துணுக்குகளுமே புன்னகைக்க வைத்தன.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் புன்னகைக்கு என் நன்றி !

   Delete
 9. ஹாஹாஹா........சாத்துக் குடி ஜூஸ் தண்ணீர் கலக்காமல், வெறும் ஐஸ் மட்டும் போட்டு என்றால் நிறைய ஐஸ் போட்டு தண்ணியாக்கிடுவாங்க....ஜூஸ் மட்டும் எடுத்து ஃப்ரிட்ஜுல வைச்சு தர்ர கடைகள்ல....விலை சற்று கூடுதல்தான் ஜி.....

  2. ஹாஹாஹா....அப்படித்தானேங்க ஜி இப்ப... எல்லாருக்குமே...ஆயிப் போச்சு

  3 தத்துவம்?!!

  ReplyDelete
  Replies
  1. 1.தனிச் சாறு ,தண்ணிச் சாறு விலை என்றே எழுதிப் போடலாமே ?
   2.எபொலோ என்ற பெயரைக் கேட்டாலே ,ஜாக்கிரதை என்று மனது தபேலா அடிக்கிறதே !
   3.அம்பானி இதிலும் மிஸ்ஸிங் ஆகிட்டாரோ ?
   நன்றி

   Delete
 10. ரொம்ப கவலைபடாதீங்க பாஸ்! வெகு விரைவில் தண்ணீர் சேர்க்க நூறு ரூபாய்னு வரப்போகுது(தண்ணீர் தட்டுபாட்டை சொல்றேன்:)

  ReplyDelete
  Replies
  1. அது சரி ,தண்ணியிலேயே எசன்ஸ் கலந்து கூட ஜூஸ் என்று விற்பார்கள் !
   நன்றி

   Delete
 11. Replies
  1. வர வேண்டிய நேரத்திற்கு சரியாக வந்து விடுகிறீர்கள் நன்றி !

   Delete
 12. ஹாஹாஹா! மூன்றுமே கலக்கல் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் 'கதம்பச் சோறும் 'கலக்கல்தான் சுரேஷ் ஜி !
   நன்றி

   Delete
 13. 01. அப்படீனாக்கா ஜூஸ் எவ்வளவு ?
  02. அப்படீனாக்கா டாக்டரு வீட்டை கட்டிருவாரு, நோயாளி வீட்டை வித்துடுவாரு.
  03. தன்னம்பிக்கை தந்தது கவிதை அருமை பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. 1 நாலு பழவிலை ஒரு ஜூசுக்கு !
   2.வீட்டை மட்டுமா கட்டுவார் ,மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவ மனையையே கட்டி விடுவார் !
   3.அம்பானி ஆக நினைச்சாதான் அரை வவுத்துக் கஞ்சிக்காவது சம்பாதிக்க முடியும் ,அப்படித்தானே ?
   நன்றி

   Delete
 14. Replies
  1. ஆசை நூறு வகை ,நோய்கள் ஆயிரம் வகைன்னு சொல்லலாமா ஜி ?
   நன்றி !

   Delete