Thursday, 21 August 2014

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

-------------------------------------------------------------------------------

இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு!


             ''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''

              ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க வைறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும்  நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க வைறாங்களே !"


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா ?

''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி  இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்ன்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !



நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் !

கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
அது அடைய வேண்டிய உயரத்தை 
வெங்காயம் தொட்டுவிட்டதாலா ?

34 comments:

  1. சிறந்த நகைச்சுவைப் பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. "வைறாங்களே" என்ற சொல்லை
    நானறியேன் ஐயா - அதன்
    மெய்யான பொருளேது?

    ReplyDelete
    Replies
    1. வைதல் என்பது மதுரைக்கே உரிய வட்டாரச் சொல் .திட்டுதல் ,ஏசுதல் என்று அர்த்தம் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. அந்த நடிகையுடன் நடத்துனரையும் ரசித்தீர்கள் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  4. அது எப்படி நடிகையை மட்டும் பைலட் சீட்ல உட்காரவைக்கலாம்?
    நல்ல நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஒரு ஆசைக் கோளாறுதான் !
      நன்றி

      Delete
  5. // ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க வைறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும் நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க வைறாங்களே !"//

    விசிலே அடிக்கலேன்னா டிரைவர் வைறாரு. பாவம் கண்டக்டர்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாதிரியா விசில் அடித்தாலும் பொண்ணுங்க வைறாங்க ,என்னதான் பண்ணுவார் ?
      நன்றி

      Delete
  6. 01. இதுக்குத்தான் படிக்கணும்கிறது நல்லா படிச்சிருந்தால் கண் டாக்டர் வேலைக்கு போயிருக்கலாம்.
    02. நடிகை உட்கார்ந்தது பைலட் சீட்லயா ? பைலட்டோட சீட்லயா ?
    03. உறித்துப்பார்த்தால் ? வெங்காயத்தில் ஒன்றுமிருக்காது ஆனா ? அதுக்கு வந்த வாழ்வு..

    ReplyDelete
    Replies
    1. 1.எல்லோரும் கண் டாக்டரானா கண்டக்டர் வேலை யார் பார்க்கிறது ?
      2.அவர் மனைவி எங்கே உட்கார நினைக்கிறாங்களோ அந்த சீட்டில் !
      3.ஒன்றுமில்லாததை ஏன் உரிச்சுப் பார்க்க நினைக்கிறீங்க ?
      நன்றி

      Delete
  7. ஹா... ஹா... ரெண்டாவது நகைச்சுவை சூப்பர்...

    ReplyDelete
    Replies
    1. அதானே ,மனைவியை அல்லவா முதலில் அங்கே உட்கார வைத்திருக்கணும்?
      நன்றி

      Delete
  8. கட்டிய கணவனை கொல்லுவதற்கும் இல்லாத உரிமையா....??

    ReplyDelete
    Replies
    1. கள்ளப் புருஷனுடன் சேர்ந்துக் கொண்டு அதையும் செய்கிறார்களே !
      நன்றி

      Delete
  9. Replies
    1. உங்களின் மௌனச் சிரிப்புக்கு நன்றி !

      Delete
  10. ஹாஹாஹா....மூன்றுமே அருமை!

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக நீங்க ஹா ஹா ஹா என்று சிரிப்பதும் அருமை !
      நன்றி

      Delete
  11. கண்டக்டர் பாடு திண்டாட்டம்தான்! பைலட்டின் கொண்டாட்டத்துக்கு சரியா ஆப்பு வெச்சிருக்காங்க அவங்க சம்சாரம்! வெங்காயம் கூட தக்காளியும் சேர்ந்து விண்ணில் பறக்குது! மூன்றுமே சூப்பர்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷம் தக்காளியும் வெங்காயத்திற்கு சவால் விடும் வகையில் விலை உயர்ந்தது,கொடுமையிலும் கொடுமை !
      நன்றி

      Delete
  12. உங்கள் தளத்தில் நகைச்சுவை துணுக்குகள் அருமையாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தளத்தில் தொழில் நுட்ப பதிவுகள் இருப்பதைப் போலத்தானே ?
      நன்றி

      Delete
  13. அதானே...... மனைவிக்கு இல்லாத உரிமையா!

    ReplyDelete
    Replies
    1. அத்தானே கதி என்று கிடப்பவளுக்கு உரிமை கொடுத்துதானே ஆகணும்?
      நன்றி

      Delete
  14. Replies
    1. வைறாங்க மாதிரி இது உங்க வட்டாரச் சொல்லா ?
      ன ண் ரி..தப்பு தப்பு ...நன்றி !

      Delete
  15. பஸ், ஏரோப்ளேன் , ராக்கெட் செம காம்பினேசன் பாஸ்! ஓட்டிகள் பாடு படு திண்டாட்டமா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. அருமையான கண்டுபிடிப்போட கமெண்ட் போட்டு கிளப்பிட்டீங்க ,நன்றி !

      Delete
  16. வணக்கம்
    இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  17. இரண்டும் ஒன்றுதானே! வண்டியை உரிய இடத்தில் நிறுத்தலாமே!

    ReplyDelete
    Replies
    1. பயணிகள் நிற்கக்கூட இடமில்லை உரிய இடத்தில் நிறுத்தி தான் என்ன பிரயோசனம் ?
      நன்றி

      Delete