22 August 2014

மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!

--------------------------------------------------------------------------------------
மாமியார் மேல் இம்புட்டு பாசமா ?

''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
''பேரப்பிள்ளையே கண்ணாரப் பார்த்தா போதும் ,நிம்மதியா கண்ணை மூடிடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பாவம் மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருக்கார்!
''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த  நான்  ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லைன்னு சொல்றேன்  அதை நீங்க ஏன்  ஏத்துக்க  மறுக்கிறீங்க ? '' 
''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''


தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் !

கையைக் காட்டினால் நிற்கும்  மினி பஸ் மாதிரி 
1௦௦ கிமீ வேகத்தில் செல்கின்ற  ரயிலும் நிற்கும் என 
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து 
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !

30 comments:

 1. சிரிச்சி சிரிச்சு ......

  ReplyDelete
  Replies
  1. வயிறு வலி வந்தாலும் பரவாயில்லை ,நீங்கதான் டாகடராச்சே !
   நன்றி

   Delete
 2. 1. ஆ... என்னா வில்லத்தனம்! வந்ததுமே இஸ்டார்ட் பண்ணிப்புட்டாய்ங்களா...

  2. பாவம் அந்த மாப்பிள்ளை!

  3. ம்ம்ம்... அது என்னவோ உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. 1.தாலி கழுத்தில் ஏறியதுமே ஆரம்பிச்சாச்சே !
   2.இரட்டை ஆயுள் தண்டனை என்றால் இருபத்தெட்டு ஆண்டுகளாமே ?
   3 .இதில் பெருமையாய் வேறு சொல்லிக்கொள்வார்கள் ,எங்கள் தலைவர் தண்டவாளத்திலேயே தலையைக் கொடுத்தவர் என்று !
   நன்றி

   Delete
 3. மாமியாருக்காக பிள்ளை பெக்கனுமா?

  ReplyDelete
  Replies
  1. அப்படியாவது சென்று சேர மாட்டார்களா என்று ஆராயத்தான் !
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  தலைவா.

  குடும்பம் என்றால் இப்படித்தானா... பல தடவை சிரித்தேன் பகிர்வுக்கு நன்றி
  த.ம3வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் இல்லையென்றால் வாழ்க்கை ருசிக்காதே ?
   நன்றி

   Delete
 5. 01. பேரன் பிறந்ததும் பேத்தியை பார்க்கனும்னு சொன்னா ?
  02. சாதாரண பொண்டாட்டிகளே மரணதண்டணை கொடுக்கும்போது,,, நீதிபதி மகள்னா அப்படித்தான்.
  03. உண்மைதானா பகவான்ஜி இதுவரை எவனும் சாகலையே....

  ReplyDelete
  Replies
  1. 1.நிச்சயமா அப்படியும் சொல்வார் ,ஏற்கனவே மகனிடம் ,உனக்கொரு கண்ணாலத்தைப் பண்ணி வச்சுட்டு நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்னு பொய் சொன்னவங்க தான் !
   2.இரட்டை மரணதண்டனையா ?
   3.அறிவிக்காமல் தண்ட வாளத்தில் தலையை வைக்கச் சொல்லுங்கள் ,பார்ப்போம் !
   நன்றி

   Delete
 6. கடி ஜோக்கு சூப்பர் :))))))))) வாழ்த்துக்கள் ஜி

  ReplyDelete
  Replies
  1. கடி வாங்கின உங்களுக்கு நானில்லே வாழ்த்து சொல்லணும் ?
   நன்றி

   Delete
 7. அடபாவமே! இப்படியா பொருள்!

  ReplyDelete
  Replies
  1. மருமகள்கள் அகராதியே வேற ஆச்சே !
   நன்றி

   Delete
 8. பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர் - இன்றே இணைந்து விடுங்கள் மேலும் விவரங்களுக்கு

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி !

   Delete
 9. பணம் அள்ளிக் கொடுக்கும் கேஸ் பீடர் - இன்றே இணைந்து விடுங்கள் மேலும் விவரங்களுக்கு http://tamilheadmaster.blogspot.in/2014/08/blog-post_22.html

  ReplyDelete
  Replies
  1. ஓ...வலி இல்லாமல் இப்படியும் சம்பாதிக்க வழி இருக்கா ?
   நன்றி

   Delete
 10. மாமியார் மேல அவ்ளோ பாசமா?
  மனைவி என்ன அவ்ளோ மோசமா?
  thama 6

  ReplyDelete
  Replies
  1. மழலை வேணுமென நினைப்பது வேஷமா?...இதையும் சேர்த்துக்குங்க !
   நன்றி

   Delete
 11. Replies
  1. அதிகாலையில் ,தாங்கள் என் தளத்தில் இன்றைய பதிவைக் காணாமல் ஏமாந்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் .என் சிறிய தவறால் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேன் !
   நன்றி

   Delete
 12. என்னா ஒரு வில்லத்தனம்! : ))))

  மூன்றுமே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வில்லித்தனம் என்றல்லவா சொல்லவேண்டும் ?
   நன்றி !

   Delete
 13. Replies
  1. அன்பு வலிப்போக்கன் ,என் தளத்தில் என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை ,உங்கள் கமெண்ட் இப்படி வந்துள்ளதே ?பிறர் தளத்தில் நான் த ம வாக்கு போட்டாலும் போக மாட்டேன் என்கிறதே ! எனக்கும் உங்கள் வாக்கு விழுந்த மாதிரி தெரியலையே !
   நன்றி

   Delete
 14. சின்னன் சிறுசுகள் கொஞ்ச நாள் சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே!!!ஜி!

  2,3 ரசித்தோம்!!!

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக ஒரு பெருசை பலி கொடுக்க நினைக்கலாமா ?
   நன்றி

   Delete
 15. ரொம்ப ’பாச’க்கார மருமகள்தான்! ஹாஹா!

  ReplyDelete
  Replies
  1. ரோஷக்கார மாமியார்னா பேரனைப் பார்த்ததும் கண்ணை மூடுவாங்களா ?
   நன்றி

   Delete