24 August 2014

சாப்ட்வேர் டேட்டிங் காதல் எல்லாம் இப்படித்தான் புட்டுக்குமோ ?

      ''உனக்கு அறிவு இருக்கா?காதலனை நம்பி அவன் பெயரை பச்சைக் குத்திகிட்டியே ...இப்போ விட்டுட்டுப் போயிட்டானே ,என்னடி  செய்யப் போறே ?''
    ''அதே பெயருள்ள வரனைப் பாருங்க ,கல்யாணம் கட்டிக்கிறேன் !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

''என்  புருஷனை மாதிரி ஒரு அல்பத்தை பார்த்ததே இல்லை...செருப்பு அறுந்துப் போச்சுன்னு சொன்னா ,நாலு நாள் பொறுத்துக்கோன்னு சொல்றார்டி !''
''ஏனாம் ,ஒண்ணாம் தேதி வரணுமாமா ?''
''இல்லே ,கல்யாணத்துக்கு போற இடத்திலே பார்த்துக்கலாமாம் !''

சாப்ட்வேர் வேலைக்கு சம்பளம் அதிகம் ,இதனால் தானே?

வியர்க்க வியர்க்க ஹார்ட்வேர் வேலை செய்பவனை விட ...
ஏசியில் உட்கார்ந்து சாப்ட்வேர் வேலை செய்பவனுக்கு சம்பளம் அதிகம் !
காரணம் என்னவென்றால் ...
தேக வேலைக்கு லட்சம் பேர்என்றால்
மூளை வேலைக்கு சிலபேர்கள்தான்  FIT !  

22 comments:

 1. மைக் டெஸ்டிங் ...ஒன் டூ ...திரிஷா ?

  ReplyDelete
  Replies
  1. மைக் சத்தம் கேட்டு முதலில் வருகை தந்த ஸ்ரீ ராம் ஜி அவர்களுக்கு முதல் வணக்கம் !

   Delete
 2. 1. ஹா ஹா ஹா என்ன ஒரு சுலபமான தீர்வு!

  2. ஹா ஹா ஹா

  3. ம்ம்ம்ம்... என்ன சொல்ல!

  ReplyDelete
  Replies
  1. 1.படிச்ச புள்ள .ஈசியா தீர்வு கண்டிடுச்சு !

   2.நாம எதுக்கும் செருப்பைக் கழட்டாம இருக்கிறது நல்லது !

   3.மூளையினால் வேலை செய்பவனே உலகை ஆளுறான்னு சொல்லலாமே ?
   நன்றி

   Delete
  2. ஹலோ பாஸ் அந்த பொண்ணு ஏன் உங்க செருப்பை எடுக்கபோகுது:) அண்ணி செருப்பு மேல ஒரு கண்ணை வையுங்க :)

   Delete
  3. ஓசின்னா எனக்கு ஒண்ணு ,என் பெண்டாட்டிக்கு ஒண்ணு அலையுற ஆளாச்சே அவர் ?
   நன்றி !

   Delete
 3. பகவான்ஜி உங்களின் திறமையைக் கண்டு வியக்கிறேன்.
  ஊடகங்களின் நகைச்சுவைப் பஞ்சம் உங்களைப் போன்றவர்களால் தீர்ந்தால் தான் உண்டு!
  ரசித்துச் சிரித்தேன்!
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பிரிண்டட் ஊடகங்களில் பிரசுரமாவதில் பல மாதம் தாமதம் ஆவதால் .பதியுலகமே போதும்னு இருக்கிறேன் !
   நன்றி

   Delete
 4. Replies
  1. உங்க ஆசீர்வாதத்தில் புள்ளே நல்லா வரும் அய்யா !
   நன்றி

   Delete
 5. 1 கம்ப்யூட்டர் காதல் இப்படித்தான் போல! 2. மகா சிக்கன புருஷனா இருக்காரே! 3. உண்மைதான்!

  ReplyDelete
  Replies
  1. 1 கம்ப்யூட்டர் சாம்பிராணி மாதிரி கரைஞ்சிடும்போல இருக்கே !
   2.ஆமாமா ,மாமா ரொம்ப சிக்கனம்தான் !
   3.புத்தியுள்ள மனிதர் எல்லாம் வெற்றி காண்பதில்லைங்கிறது இவர்கள் விசயத்தில் not fit !

   Delete
 6. 01. இனிமேல் பொண்ணு பார்க்க போனால் ? பச்சை குத்தியிருக்கானு பார்க்கணும் போலயே...
  02. சிக்கனவாதியா,,, இருப்பாரோ...
  03. ஆனால் ? ரெண்டுபேருமே, சாப்ட்டாத்தான் வேலை செய்யமுடியும்.

  குறிப்பு – இனிய நண்பர் பகவான்ஜி அவர்களுக்கு... நாம இரண்டு பேருக்குமே சிந்தனை ஒரேமாதிரி இருக்கிறது என்றே நினைக்கிறேன் சாப்ட்வேர் பந்தப்பட்ட ஒரு நகைச்சுவை பதிவு தயார் செய்து வைத்துள்ளேன்... தாங்கள் அதனைக்குறித்து ஒரு பதிவு இட்டுள்ளீர்கள்

  ReplyDelete
  Replies
  1. 1.பச்சைப் பொய் சொல்லுவாங்க உங்களுக்காகவே குத்திக்கிட்டதுன்னு !
   2.இது சிக்கனம் இல்லை ,தரித்திரம் !
   3.அது மட்டுமில்லே ,சாப்பிடுறதுக்காக வேலை செய்யுறாங்க !
   உங்க பதிவையும் போடுங்க கில்லர்ஜி ,நம்ம சிந்தனை அலையை அளந்து பார்த்துடுவோம் !
   நன்றி

   Delete
 7. 1.அட!
  2.அய்யயோ
  3.ஆமாம்ல
  தம 4:))

  ReplyDelete
  Replies
  1. 1 அட என்பதற்கு ,இப்படியும் ஒரு ரூட்டா என்றுதானே அர்த்தம் ?
   2.அய்யகோ ........நெஞ்சு பொறுக்குதில்லையே ?
   3.மூளையைக் கசக்கி பிழிஞ்சு வேலை செய்றனாலே சனி யன்று சனிக் காய்ச்சல் வந்துடுதோ ?
   நன்றி !

   Delete
 8. Replies
  1. நேற்று தமிழ் வாத்தியாரை வம்புக்கு இழுத்ததில் உங்களுக்கு கோபம் ஒண்ணும் இல்லையே ?
   நன்றி !

   Delete
 9. அந்த பொண்ணு பொழக்கத் தெரிஞ்ச பொண்ணு.....ஜி....காதலன் விட்டுட்டுப் போயிட்டாஅனு மூலைல உக்காந்து அழாம...

  நல்ல புருஷன் காரன்.....ஹாஹாஹா..

  உண்மதானுங்க...ஜி!

  ReplyDelete
  Replies
  1. அதானே ,இவன் போன இன்னொரு இளிச்சவாயன் சிக்காமலா போய்விடுவான் ?
   இதுக்காகவே இவரும் செருப்பு வாங்காம இருப்பார் போலிருக்கே !
   உடல் உழைப்பு செய்பவர்களைப் பார்த்தால் பாவமாய்தான் இருக்கிறது !
   நன்றி

   Delete
 10. இவரு விட்டுட்டுப் போனா அவரு
  நல்லாய் இருக்கே
  செருப்பு அறுந்துப் போச்சா
  மூளை வேலைக்கு சிலபேரா
  எல்லோருக்கும் மூளை வேலை செய்யுதே
  நல்லாய் இருக்கே

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் மூளை வேலை செய்யும் ,வேகம்தாம் போதாது !
   நன்றி

   Delete