30 August 2014

இவர் மனைவி வணங்கப்பட வேண்டியவர் !

------------------------------------------------------------------------------------------------------------
 மக்கள் நம்பிக்கையை  பயன்படுத்திக் கொண்டு ......... 

''எங்கேயும் தண்ணியில்லேங்கிறதை  பயன்படுத்திக்கிட்டு புதுசா பார்சல் சர்வீஸ்  பிசினஸா.என்னது ?''
''பிள்ளையார் சிலையை கரைத்து விடணுங்கிறது ஐதீகம் ,நீங்கள் சொல்லும் கடலில் கரைக்க நாங்கள் உதவுகிறோம்னு எழுதிப் போட்டிருக்காங்களே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
------------------------------------------------------------------------------------------------------------
சாப்டா  இருக்கிற பிரியாணியை சாப்பிட்டா  இப்படியும் ஆகுமா ?

''பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
''My crow soft பிரியாணி கடைதான் !''

இப்படி கேட்பவரின்  மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் !

அடுத்தவர் பேச்சைக் கேட்டு கோபப்படுவதிலும் 
அர்த்தம் இருக்கணும் ...
'பத்து ரூபாய் தர்மம் பண்ணுங்க சாமி ,நல்லா இருப்பீங்க 'என்று பிச்சை கேட்பவனிடம் ...
'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம் 
எனக்  கேட்பதில் அர்த்தமே இல்லை !

30 comments:

 1. விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் சகோதரா :))

  ReplyDelete
  Replies
  1. முந்தி முந்தி வினாயகர் ஒருநாள் தாமதமாக வந்தாலும் கூட,இன்று அதிகாலை யிலேயே முந்திக் கொண்டு வந்து வாழ்த்து சொல்லி ,தமிழமணத்தில் இணைத்து வாக்கு அளித்தமைக்கும் மிக்க நன்றி !

   Delete
  2. ஒரு புரட்சிப் பாடல் என் வலையில் காத்திருக்கின்றது ஓடி வந்து
   நன்றிக் கடனைத் தீர்த்து புண்ணியம் பெறுவீர்களாக ஓம்
   விநாயகாய நமக !:)))))

   Delete
  3. அடிக்கடி இப்படி நன்றிக் கடன் செலுத்துற வாய்ப்பைக் கொடுங்க )))))))))
   நன்றி

   Delete
 2. 01. பிள்ளையாராவது நம்ம பிஸினசை வளர்த்து விடுவாருங்கிற நம்பிக்கையா ? இருக்குமோ ?

  02. இந்தக்கடை மதுரையிலேயும் இருக்கா ?

  03. சும்மா இருந்த பிச்சைக்காரங்களை இப்படி உசுப்பேத்தி விட்டுடீங்களே ? பகவான்ஜி....

  ReplyDelete
  Replies
  1. 1.இருக்கும் ,பிள்ளையார் கரையுற மாதிரி பிஸினசும் கரையாமல் இருந்தால் சரிதான் !

   2.உலகம் பூரா இருக்கிற கடை ,மதுரையில் இருக்காதா ?

   3.ஒரு ரூபாயை போட்டா .நீயே வைச்சுக்கன்னு திருப்பித்தர்ற அளவுக்கு வளர்ந்தவங்களை ,நான் உசுப்பேத்தி விட முடியுமா ?
   நன்றி

   Delete
 3. இப்படி கேட்பவரின் மனைவி பூஜிக்கப்பட வேண்டியவள் ! ---- அசத்தல்

  ReplyDelete
  Replies
  1. அகராதியோட வாழ்பவர் வணங்கப் பட வேண்டியவர்தானே ?
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  இரசிக்கவைக்கும் நகைச்சுவை அருமையாக உள்ளது
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்க நாட்டிலே இந்த பிரியாணிக்கடை இருக்கா ,ரூபன் ஜி ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. மை க்ரோ சாப்ட் கடையிலே சாப்பிட்ட அனுபவம் உண்டா ,வாத்தியாரே ?
   நன்றி

   Delete
 6. 1. ஹா...ஹா...ஹா...

  2. ஹா...ஹா...ஹா....ஹா...ஹா...

  3. ஹா...ஹா... எகனைக்கு மொகனையா!

  ReplyDelete
  Replies
  1. மூணுமே எகனைக்கு மொகனைதான் ஸ்ரீ ராம் ஜி !
   நன்றி!

   Delete
 7. ”காக்கா பிரியாணி துன்னா, காக்கா குரல் வராம, உன்னி கிருஷ்ணன் குரலா வரும்” என்று கேட்கும் ரன் பட வசனம் நினைவுக்கு வந்தது!

  மூன்றையும் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. ரன் படத்தை மறந்தாலும் அதில் வரும் இந்த டயலாக்கை என்னாலும் மறக்க முடியலை !
   நன்றி

   Delete
 8. ஒரு புரட்சிப் பாடல் என் வலையில் காத்திருக்கின்றது ஓடி வந்து
  நன்றிக் கடனைத் தீர்த்து புண்ணியம் பெறுவீர்களாக ஓம்
  விநாயகாய நமக !:)))))

  ReplyDelete
  Replies
  1. புண்ணியத்தைப் பெற்றுக்கொண்டேன் !
   நன்றி

   Delete
 9. ''My crow soft பிரியாணி கடை.......ஹா..ஹா..

  ReplyDelete
  Replies
  1. நாட்டிலே காக்கைகள் குறைய காரணம் இதுதான் போலிருக்கே !
   நன்றி

   Delete
 10. நகைச்சுவை அசத்தல்...நன்றாக சிரித்து மகிழ்ந்தேன்

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி

   Delete
 11. மூன்றுமே ஹாஹஹஹஹா...தான் ஜி!

  இரண்டு நாட்களாக தங்கள் தளத்தைக் கிளிக்கினால்.....ஏதோ ஒரு மொழியில் ....நாங்கள் நினைத்தோம்,,,,பகவான் ஜி இப்போது கம்ப்யூட்டர் மொழி கற்பிக்க ஆரம்பித்துவிட்டார் போலும் என்று........இன்றுதான் தங்கள் தளம் ஒழுங்காக வந்தது.....அதுவும் முதலில் அந்தன் மொழியில் வந்து விட்டு பின்னர் ஜோக்காளி விரிந்தார்....

  ReplyDelete
  Replies
  1. அடடா ,இந்தப் பிரச்சினை எனக்குமிருந்ததே ,கூகுள் ஆண்டவர் மனமிறங்கி சரி செய்து விட்டதில் எனக்கும் சந்தோசம் !
   நன்றி

   Delete
 12. ரசிக்க வைத்தது அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு மிக்க நன்றி !

   Delete
 13. Replies
  1. உங்களின் நன்றுக்கு என் நன்றி !

   Delete
 14. ''...'பிரியாணிக் கறி ரொம்ப 'சாப்டா 'இருக்குன்னு சாப்பிட்டுட்டு ,இப்போ வயித்திலே காக்கா கரையிறமாதிரி இருக்கா ..அந்த கடை பெயர் என்ன ?''
  ''My crow soft பிரியாணி கடைதான் !'' ha...ha... முசுப்பாத்தி தான்.!.....(முசுப்பாத்தி என்றால் நம்ம ஊர் நாட்டுப்புற வரி.. யோக்கு அல்லது நல்ல நகைச் சுவை)
  ''...'தர்மம் பண்ணலேன்னா நாசமாப் போயிடுவே'ன்னு தானே அர்த்தம்
  எனக் கேட்பதில் அர்த்தமே இல்லை !...'' ha!..ha!..
  Vetha.Langathilakam.

  ReplyDelete
  Replies
  1. முசுப்பாத்தி என்றால் யோக்கு,யோக்கு என்றால் இதுவும் நல்ல நகைசுவையாய் இருக்கே !
   நன்றி

   Delete