31 August 2014

பொண்ணு மேல அப்பனுக்கு இம்புட்டு பாசமா ?

            ''பொண்ணு வாக்கப்பட்டு போற இடத்திலே கண் கலங்காம இருக்கணும்னு ரொம்ப எச்சரிக்கையா அவர் இருக்காரா ?''
            ''ஆமா ,டிவி இல்லாத வீட்டு வரன்களை மட்டுமே கொடுங்கன்னு தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

ஒரு லிட்டர் பால் ஒரு ரூபாய் கூடினால் ஒரு டீ ?

''ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா ,அநியாயமா இருக்கே ?''
''டீத் தூள் கிலோ ரூபாய் முன்னூறு ஆச்சே!''
''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''

ஸெல்ப் ஸ்டார்ட்டர் பேட்டரி மக்கர் பண்ணலாம்  என்பதால் கிக்கருமா?

கிக்கர் உள்ள ஸெல்ப் ஸ்டார்ட் டூ வீலர்களை நம்ப முடிய வில்லை ...
அலோபதி மருந்துடன் சித்தா மருந்தையும் 
சேர்த்து சாப்பிடுங்கள் என சொல்லும் சித்தமருத்துவரையும் நம்ப முடியவில்லை ...
நம்பகமான ஒரு வழி உள்ளதையே நம்பத் தோன்றுகிறது!

22 comments:

 1. அனைத்தும் ரசிக்க வைத்தாலும் இரண்டாவது கலக்கல் ஜி...

  ReplyDelete
  Replies
  1. விலைவாசி பத்து பைசா ஏறினால் எட்டணா அளவிற்கு விலையை ஏற்றுவது டீக்கடை உரிமையாளர் மட்டுமல்ல ,எல்லா வியாபாரிகளும் செய்யும் மோசடிதானே ,குமார் ஜி ?
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  தலைவா...

  இரசிக்க வகை்கும் நகைச்சுவைசிறப்பாக உள்ளது.. 1வது நகைச்சுவை சூப்பார்.... வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அப்பன்காரன் இப்படி சொன்னா ,புகுந்த வீட்டில் புகுந்தவுடன் டிவி வாங்கினாதான் கண் கலங்குவதை நிறுத்துவேன்னு பொண்ணு சொல்லப் போகுதே !
   நன்றி

   Delete
 3. டிவி இல்லாத வீட்டு வரனா
  இந்த காலத்திலயா
  ஒரு டீ விலை பதினஞ்சு ரூபாயா
  எப்படிக் குடிக்கிறது
  நம்பகமான ஒரு வழியா
  எனக்குத் தெரியல
  நல்ல ஆய்வு செய்யிறியள்

  ReplyDelete
  Replies
  1. டிவி தொடர் பார்த்து கூட பொண்ணு கண் கலங்கக்கூடாதுன்னு இவர் நினைச்சாலும் நடக்காதுதான் !அப்படித்தானே விலை ஏற்றி கொள்ளை அடிக்கிறார்கள் ?
   ரெண்டையும் வச்சுக்குங்கன்னு சொல்றதை நம்ப முடியுதா ,அதான் !
   நன்றி

   Delete
 4. Replies
  1. விலை கூடினாலும் டீயை ரசித்து குடிக்காமல் நம்மால் இருக்க முடியலையே ?
   நன்றி

   Delete
 5. டீ.வி..இல்லாத வீடா சாத்தியமே இல்லை.......தரகர் ஏமாத்தப் போறார்.

  ReplyDelete
  Replies
  1. அதிலும் தொடர் பார்க்காத வீடா ?
   நன்றி

   Delete
 6. 1. வெங்காயம் வாங்கக் கூடாதுன்னு கண்டிஷன் போடவில்லையா?!!!

  2. ஹா...ஹா...ஹா இவர்களை எல்லாம் சுரஷ் குமார் சொன்ன லட்ச ரூபாய் டீ குடிக்க அனுப்பணும்!

  3. தத்துவம்!

  ReplyDelete
  Replies
  1. 1.வெங்காயத்தை மாப்பிள்ளைதானே உரிக்கப் போகிறார்னு விட்டுட்டார் போலிருக்கு !
   2.அந்த டீயைக் குடிக்க அல்ல ,பார்க்கக்கூட நமக்கு கொடுப்பினை இல்லையே ?
   3. பிரேம் பண்ணி ஹால் ஷோ கேஸில் வச்சுக்கிறேன் !
   நன்றி !

   Delete
 7. 01. அப்படீனாக்கா, இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்குமா ?

  02. கூட ரெண்டு கப் தண்ணீர் செலவாகுமே....

  03. எதுக்கும் பழனி மலையடிவாரத்துல இருக்கிற ஒர்க்ஷாப்பா பாருங்களேன்...

  ReplyDelete
  Replies
  1. 1.டிவி சீரியலைப் பார்த்து அழுதா என்ன ,சிரிச்சா என்னா?காலாகாலத்தில் கல்யாணத்தை முடிக்கிறதை விட்டுட்டு நிபந்தனை போட்டால் ஒத்து வராதுதான் !
   2.விலை ஏறுவதுடன் இது வேறயா ?
   3,அந்த 5 தலைமுறை வைத்தியரையா?
   நன்றி

   Delete
 8. ''..ஆமா ,டிவி இல்லாத வீட்டு வரன்களை மட்டுமே கொடுங்கன்னு தரகர்கிட்டே சொல்லி இருக்காரே ''.... என்ன குசும்பு!......யார் இருக்கா இப்படி!.......ha!..ha!....
  ''அதுசரி ,ஒரு டீயிலே ஒரு கிலோவா போடப் போறே ?''........ha!..ha!...
  ....nanru....nanru....
  Vetha.Langathilakam...


  ReplyDelete
  Replies
  1. டிவி இல்லா வீடுமில்லை ,அதில் சீரியல் பார்க்காத பொண்ணுமில்லை என்பதுதானே உண்மை ?
   நன்றி

   Delete
 9. டிவி இல்லாத வீட்டுனு அதுக்கு வேற அழுதுட போகுது பாஸ்:))

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் அப்படித்தான் பட்டது .அதான் ,சகோ .ரூபனுக்கு கொடுத்த மறுமொழியில் கூறினேன் !
   நன்றி

   Delete
 10. அப்பா டி வி இல்லாத வீடுனு சொல்றாரு...அனா பொண்ணு? டிவி உள்ள வீட்டப் பாத்து ஓடிடுச்சுனா?

  ஹாஹாஹா...

  டாக்டர்களை நம்ப முடியலையே!

  ReplyDelete
  Replies
  1. திருமணம் தாமதமானால் அந்த சிக்கலைக் கொண்டு வரலாம் !

   யாரைத்தான் நம்புவதோ ?
   நன்றி

   Delete
 11. சிரித்துச் சிரித்துக் கண்கலங்க வைத்துவிட்டீர்களே ஜி!
  அருமையான நகைச்சுவையுணர்வுதான் உங்களுடையது!
  பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நல்ல வேளை,சிரித்து சிரித்து சிறையிலிட்டாய்னு பாடாம போனீங்களே !
   நன்றி

   Delete