27 August 2014

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் ?

------------------------------------------------------------------------------------------------------------
பெயர் ராசி சரியில்லாமப் போயிடுச்சே !

               ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
               ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

புதிய காதலரா பழைய கணக்கை முடிப்பாரு ?

              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ''எனக்கு ஐஸ் வாங்கித் தந்த கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''
தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?

18 comments:

 1. 01. கைது பண்ணியவர் பேரு ராஜ ராஜ சோழனோ ?
  02. ஐஸ்காரன் கணக்கு இருக்கட்டும் இவங்க கணக்கு என்னாச்சு ?
  03. சொன்னவரு 90 க்குள்ளே இருக்காரா ? 10 குள்ளே இருக்காரா ?

  ReplyDelete
  Replies
  1. 1 கைது செய்தவர் சிபி (ஐ ) சக்கரவர்த்தி ஆச்சே !
   2.அவ்வளவுதான் ,மூழ்கத் தொடங்கியாச்சு !
   3.இவ்வளவு அறிவுபூர்வமா பேசுவதால் எதில் இருப்பார்ன்னு புரிஞ்சுக்குங்க !
   நன்றி

   Delete
 2. ஆஹா அருமை...

  மூணாவது எதாவது சொல்வது திருப்பிப் பெறுவதும் சகஜம்தானே

  ReplyDelete
  Replies
  1. போலீஸ் மாதிரியா ? அடி அடியென்று அடித்துவிட்டு ,அடப் பாவி நீ இன்னார்ன்னு முதல்லேயே சொல்லி இருக்க வேண்டியது தானே என்பார்களாம்!
   நன்றி

   Delete
 3. இலஞ்சம் வாங்கின மனுநீதிச் சோழன்
  கணக்கை செட்டில் பண்ணாம காதலா
  பத்துச் சதம் என்றால் சும்மாவா
  எல்லாம் சிறந்த பதிவு

  ReplyDelete
  Replies
  1. வெளியே பார்த்தா தாழம்பூவாம் ,உள்ளே பார்த்தா ஈரும் பேனுமாங்கிற மாதிரிஇருக்கே , இலஞ்சம் வாங்கியவர் பெயர் !
   நன்றி

   Delete
 4. ஹாஹாஹாஹாஹ்ஹ்ஹ்

  இந்தியர்கள் முட்டாள்களா?!! ம்ம்ம்ம்ம்....புத்திசாலிகள்....ஆனால் ஏமாளிகள்! ஆள்பவர்களால் ஏமாற்றப்பட்டு, குட்டு வாங்கி குனிஞ்சு குஞ்சிஞ்சே இருந்து பழகிட்டமா....ஸோ முட்டாள்கள்தான்....

  ReplyDelete
  Replies
  1. முட்டாள்கள் ஆக்கப் பட்டிருக்கும் புத்திசாலிகள் அப்படித்தானே ?அப்படி என்றால் லாஜிக் இடிக்குதே !
   நன்றி

   Delete
 5. வணக்கம்
  தலைவா..
  இரசித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. காதலியை கைவிட்டு போனவர் ,ஐஸ் விற்பவரையும் கை கழுவிட்டுப் போவார் ?
   நன்றி !

   Delete
 6. பெயர் ராசி சரியில்லாமப் போயிடுச்சே !........சூடான சிரிப்பு

  ReplyDelete
  Replies
  1. அவர் செய்தது சரிதான் ,லஞ்சம் வாங்குவதற்காக பெயரை மாற்றிக் கொள்ள முடியுமா ?
   நன்றி

   Delete
 7. அட... மனுநீதி சோழன் இப்பதாங்க பிரபலம் ஆகுவார். நான் கூட இவரைப்பற்றி (?) இன்னை எழுதிவிட்டேன்.

  ReplyDelete
  Replies
  1. அது சரிதான் ,இந்தப் பெயரில் இவ்வளவு நல்ல அதிகாரி இருந்தது இப்பத் தானே நமக்கு தெரியுது ?
   நன்றி!

   Delete
 8. 1. வேதனையான சிரிப்பு.

  2. எப்படி எல்லாம் மாட்டறாங்க பாருங்க! ஆமாம், ஐஸ் எல்லாம் கூட கடனுக்குத் தர்றாங்களா!

  3. பிரிட்டிஷ் நாடாளுமன்ற ஜோக்காக இதைப் படித்திருக்கிறேன்!


  ReplyDelete
  Replies
  1. 1 அழுதுக்கொண்டே சிரிச்சீங்களா ?
   2.இனிமேல் கடனுக்கு விற்பதில்லைன்னு முடிவு எடுத்து விட்டாரே !
   3.நம்ம நீதிபதி அப்படித்தானே இந்தக் கருத்தையும் சொல்லி இருக்கார் ?
   நன்றி

   Delete
 9. ''..மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !'' இது நல்ல பகிடி.
  ''..எனக்கு ஐஸ் வாங்கித் தந்த கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !'' அடக் கடவுளே!.....
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. இப்படிப் பாட விநோதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் ?
   நன்றி

   Delete