30 September 2014

சமந்தா மாதிரி சமோஸாவும் ,நல்ல பெயர்தானே ?

----------------------------------------------------------------- 
படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?                                           
                  ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
                    ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மோஸா வியாபாரி மகளுக்கு வைத்த பெயர் !

''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பிரியம்னு ஏன் சொல்றே ?''
''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''

ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?

வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?

எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?

555 என்பது வெளிநாட்டு சிகரெட் ஒன்றின் பெயர் ...
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
   இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது  2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.
சென்ற வருடம் 555 பதிவுகள் வெளியான நிலையில் 64வது இடத்தில் இருந்த ஜோக்காளியை    குறுகிய காலத்தில் கடந்த 7.7.14 அன்று முதல் இடத்திற்கு வர உதவிய வலையுலக உறவுகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி !

29 September 2014

பூவின் மணம் பூவையருக்கும் உண்டா ?

---------------------------------------------------------------------------
 சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
             ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?

            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேக்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''


பூவின் மணம் பூவையருக்கும் உண்டா ?

உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே 
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

28 September 2014

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !


-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
  புரியுது ,ஆனா புரியலே !              
                 
            ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
              ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....
இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா ?
''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
''அழகான ஒரு பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியாது !

இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

27 September 2014

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?

 -----------------------------------------------------------------------------

  செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தள்ளிப் போகுமா ?                 
                      
                   ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
                  ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?
                     ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
                     ''இதெல்லாம் என்னங்கபிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பாரத்தா அசந்துடுவீங்க !''

குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடும் ?

பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் 
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதையும்  உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை  இப்போது   MP!

26 September 2014

மனைவி எழுத்தாள கணவனை இப்படி அவமானப் படுத்தலாமா ?

                   ''பாத்திரக் கடைக்கு மனைவியோட  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயரை வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், ,நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு  பிரயோசனம் இல்லையேன்னு  குத்திக் காட்டுறாளே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
கல்யாண மொய் மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே!
            ''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு  வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு முப்பது வாழ்த்து தந்தி வந்தது ...நான் இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''

டயாபெடிக்சுக்கு உணவு பழக்க வழக்கம் !

'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிட வேண்டும் !'

25 September 2014

ச ன் னி லியோனும் குழந்தையும் ஒண்ணு ?

 ---------------------------------------------------------------------------------------------------------------                 
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் போலிருக்கு !                  

                   '' உங்க சலூன்ல வாடிக்கையாளர்களுக்கு  இன்சூரன்ஸ்  வசதியா ?''
            ''ஆமா ,ஹேர் கட்டிங் செய்யும்போது காது அறுந்தாலும்  எங்க செலவிலேயே பிளாஸ்டிக் சர்ஜரி  செய்து ஒட்ட வச்சுருவோம் !''
   

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


ஜோடி தேடும் தலைவர் !


''செருப்பு வந்து விழுந்தும் கூட தலைவர் அலட்டிக்காமல் பேசிக்கிட்டே இருக்காரே ,ஏன் ?''

''இன்னொரு செருப்பும் வரட்டும்ன்னுதான் !''

சன்னி லியோனும் ,உண்மையில் குழந்தை போல்தான் !

அமெரிக்காவை கதி கலக்கிக் கொண்டிருந்த 
ஒசாமா பின் லேடனையே...
கவர்ச்சியால் கதி கலக்கிய சன்னி லியோன்
'குழந்தை 'மாதிரி என்று பறைசாற்றி இருக்கிறார்  
உடன் நடித்த நம்மூர் நடிகர் ஒருவர் !
உண்மைதான் ...
பச்சைக் குழந்தைகள் பிறந்த மேனியுடன் இருக்க வெட்கப் படுவதில்லை !


24 September 2014

மனைவி இப்படி கட்டிப் பிடிக்கும்படி கணவன் நடந்துக்கலாமா?

----------------------------------------------------------------------------
  50/50 தான் தேறும் போலிருக்கு !            

             ''நர்ஸ் ,நோயாளிங்களை படுக்கவைக்க CCU வார்டில் இடமிருக்கா ,இன்னிக்கு நாலு மேஜர் ஆப்பரேசன் இருக்கே !''
            ''தேவையான அளவுக்கு ரெண்டு பெட் இருக்கு டாகடர் ''
''மீதி ரெண்டு பேருக்கு ?''
''மார்ச்சுவரியில் இடம் இருக்கே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...


ஷக்க லக்க 'பேபியை லவ் பண்ணத் தோணலே !


''ஷக்க லக்க பேபின்னு பாடி, ஒரு பிகரை லவ் 

பண்ணியே ,அதை ஏன் கை கழுவிட்டே ?''


''அது என் அம்மாவோட சக்களத்தி பேபின்னு என் 


அப்பா ரகசியமா சொல்லிட்டாரே !''கட்டிக்கிட்டவ இப்படி கட்டிப் பிடிக்கும் படியாவா நடந்துக்கிறது ?

மனைவிமார்கள் ...
கணவனின் கொடுமை தாங்க முடியாமல் 
கெரசினை ஊற்றிக் கொண்டு தற்கொலை 
செய்துக் கொண்டதெல்லாம் அந்தக் காலம் !
இப்பொழுது எல்லாம் ...
எரியும் உடம்புடன் கணவனை கட்டிப் பிடித்து
கொடுமைக்கு முடிவு கட்டி விடுகிறார்கள் !

23 September 2014

பைக் பில்லியன் காதலி இப்படி செய்யலாமா ?

                                ''  உன் கூட  பைக் பில்லியனில் ,  ஒட்டி  உட்கார்ந்துட்டு  திரிஞ்ச பொண்ணை  இப்போ காணலியே ?''
                    ''உண்மையிலேயே முதுகிலே குத்திட்டு இன்னொருத்தன் கூட ஓடிப் போயிட்டாளே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பாவம் ,தாய்ப் பாசம் என்ன செய்யுமோ ?

''என்னங்க, ஓடிப்போன நம்ம பொண்ணு புது  தாலிக்கயிறும் கழுத்துமா வாசல்லே  வந்து நிக்கிறா !''
''உள்ளே வந்தா  தூக்கு  கயிறும் கழுத்துமாதான் என்னை பார்க்க முடியும்னு சொல்லி அனுப்பிடு !''


ஓட்டுனர் வண்டியை மட்டும் ஓட்டவில்லை !

பிரேக் போட்டால் வண்டி நிற்கிறதோ ,போய் நிற்கிறதோ  ...
எதிரே பேய் நிற்பதாகவே நினைக்கிறார்கள் ஓட்டுனர்கள் !
எனவேதான் கறுப்புக்கயிறு ,வேப்பிலைக் கொத்து ,எலுமிச்சம்பழம் வண்டிகளில் தொங்குகிறது !


22 September 2014

இப்பவுமா துணை வருவாள் துணைவி ?

------------------------------------------------------------------------------
நொந்து நூடுல்ஸ் ஆனவர், ,நூடுல்ஸ் ஸ்டால் போடலாமே !

''புத்தகத் திருவிழாவில் ,அந்த பதிப்பாளர் போட்ட புத்தகம் விற்கலைன்னு எப்படி சொல்றே ?''
''அடுத்த வருடம் புத்தக ஸ்டாலுக்கு பதில் டெல்லி அப்பள ஸ்டால் போடப் போறேன்னு சொல்றாரே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

இப்பவுமா  துணை வருவாள் துணைவி  ?
''உங்க வீ ட்டுக்காரருக்கு வர்ற சனிக் கிழமை ஆபரேஷன் பண்ணலாம்னா , ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''
''சனி பிணம் தனியாக போகாதுன்னு சொல்றாங்களே ,டாக்டர் !''

குற்றவாளியைவிட மோசமானவன் தப்பிக்க விடுபவன் !

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ...
ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது 
இது நீதித் துறையின் அடிப்படை அம்சம் !
காவல் துறையில் உள்ள கறுப்பாடுகள் இதை சுயநலத்திற்காக வேறுவிதமாக புரிந்து கொண்டு செயல் படுவார்களோ ?
ஆயிரம் குற்றவாளிகள் மாட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள் ...
மாட்டிக் கொண்ட ஒரு குற்றவாளியை தப்பிக்க வைத்தால் என்ன குடிமுழுகியா போய்விடும் என நினைத்து  ...
கிரிமினல்களையும் ,பயங்கரவாதிகளையும்  தப்ப விடுகிறார்களோ !

21 September 2014

'சின்ன்ன 'மாப்பிள்ளை(யும்) ஆகத் துடிக்கும் 'பெரிய்ய்ய 'மாப்பிள்ளை !'

                
                  ''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''
               ''மூத்த மாப்பிள்ளை உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் !
"என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
"புருசன்களை திட்டுவதில் தான் !" 

எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?

சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

20 September 2014

காசியில் கணவர் விட்டது !

--------------------------------------------------------------------------  
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பது பொய்யா ?               

                ''கோபுரத்தையே உற்று பார்த்துக் கிட்டிருக்காம  ,கோவிலுக்குள்ளே சீக்கிரம் போயிட்டு வாங்கன்னு வீட்டுக்காரரிடம் ஏண்டி சொல்லி அனுப்புறே?''
                     ''கோபுரத்தில் உள்ள கண்ட சிலைங்களை  பார்த்துட்டு   மூடு மாறி ,வீட்டுக்கு வந்து விடுகிறாரே !''
  சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

காசியில் விருப்பப்பட்டு விடவில்லை !
             ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு
வரணும்னு சொல்வாங்க ,உன் புருஷன் எதை
விட்டார்டி?''
             ''அவர் எங்கே விட்டார் ?விட மனசில்லை என்றாலும் ,ஆற்று வெள்ளம் அவர் பல் செட்டை அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

காது வழியா உள்நுழையும் சொல் ,இனிமே ....!

காது கேட்காதவர்களுக்கும்...
பல் வழியே அதிர்வலைகளை  ஏற்படுத்தி 
கேட்க வைக்கும் முடியுமென்று ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்துள்ளாராம் தமிழகத்தை சேர்ந்தவர் !
பல்லு போனா சொல்லு போகுங்கிற பழமொழி ...
பல்லு வழியா சொல்லு போகும்னு மாறி விடுமோ ?


19 September 2014

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

------------------------------------------------------------------------------
தலைவலிதான் போச்சே ,அப்புறமும்
                  ''நேற்றுபூரா ஒற்றைத்தலைவலி ,   வலி வலது பக்கமா ,இடது பக்கமான்னு  ஞாபகம் வர மாட்டேங்குது  ,டாக்டர்  !''
           ''ரொம்பவும் யோசிக்காதீங்க  , இரட்டைத்  தலைவலி வந்திடப்போவுது !'' 
 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

அப்பா சொன்னதும் அம்மா போட்டுகிட்டதும் !

"அப்பா ,நீங்க வாங்க வேண்டாம்னு சொன்ன வைரத் தோடு அம்மா காதுலே மின்னுதே ,எப்படி ?"
"நான் சொல்ற எதைத்தான் 
உங்கஅம்மா காதுலபோட்டுகிட்டா ?"

எங்கே இன்னொரு புத்தன் ?

எந்த மரத்தடியில் புத்தன் ஞானம் அடைந்தாரோ 
அந்த போதி மரம் கூட பட்டுப் போயிருக்கும் ...
அடையாறு ஆலமரத்திற்கு வயது 
நானூற்று ஐம்பது ஆனபின்பும் ...
அந்த மரத்தடியில் யாரும் ஞானம் அடைந்ததாய் தெரியவில்லை !

18 September 2014

கட்டிக்கிட்டவளிடம் பல் வலின்னு சொன்னது தப்புதான் !

                   ''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு   ஏன் சொல்றே ?''
                  '' பொண்ணுன்னா  பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !

            ''டாக்டர் ,நாளைக்கு எனக்கு அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் ,எனக்கு பண்ணவிருந்த ஆபரேசனை ஏன் தள்ளி வச்சிட்டீங்க ?''
           ''நல்லநாளும் அதுவுமா ...உங்களோட ,உங்க  பேரன் பேத்திங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?

பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

17 September 2014

மனைவி சேலைப் பார்க்கும் நேரத்தில் ......!

   மனைவி சேலைப் பார்க்கும் நேரத்தில் ......!                  
                  
            ''இரண்டு சினிமா தியேட்டர் உள்ள மாலில்தான் எனக்கு  சேலை எடுக்கப் போகணும்னு பிடிவாதமா சொல்றீங்களே ,ஏன் ?''
                ''போன தடவை நான் ஒரு படம் பார்த்துட்டு வந்த பிறகும் கூட நீ ஒரு  புடவையைக்கூட  செலக்ட் பண்ணலையே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

USல் வேலை செய்தால் லீவு உடனே கிடைக்குமா ?

''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர மார்ச் மாதம் ஆகும்ன்னா ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
''மார்ச் 'சுவரியிலேதான் !''

டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் !

பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும் 
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய் 
நன்கொடை வசூல் பண்ணும் 
மருத்துவக் கல்லூரி நிறுவனர் கேட்கிறார் !