15 September 2014

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா ?

பாவி மகளே ,இப்படி  உளறிக்கொட்டலாமா ?

                     ''டார்லிங் ,முதலிரவிலே எனக்கே பதட்டமாயிருக்கே,உனக்கு எப்படி ?''
                 'எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !'' 
         


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

காதலி ஒண்ணு,காது மட்டும் ரெண்டா ?

''கண்ணு ,மூக்கு ,வாய் முன்னாடி பார்க்கயிருக்கு...காது மட்டும் ஏன் இரண்டு  பக்கமும்  இருக்கு,டார்லிங் ?''
''சில லூசுங்க இந்த மாதிரி கேட்பதை இந்த காதுலே வாங்கி,அந்த காது வழியா விடத்தான் !''

மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல !

சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு 
வருகை தரும் பயணிகள்  கவனத்திற்கு ...
பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 
மேற்கூரை  மூன்று மாதத்தில் நான்கு முறை 
இடிந்து விழுந்து இருப்பதால் ...
இரும்பு ஹெல்மெட்டுடன் வருகை தருமாறு 
அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் !
விமான பயணத்தில் மட்டுமல்ல 
விமான நிலையத்திலும் கூட ...
உங்கள் பாதுகாப்பு உங்கள் கையில் என்பதை 
பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் !
    (((((குறிப்பு ....இந்த பதிவை எழுதி ஒரு வருடம் முடிந்த பின்பும் கூட சென்ற வாரம் வரை கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறது ))))))

22 comments:

 1. 01............... ..........., ........? . ......... .....,,,, ........... ?

  02. புருஷனை மதிக்கத்தெரிந்தவள்.

  03. இது பலகாலமாக நடக்கிறது நண்பரே... எவனாவது அமெரிக்கன் தலையில விழனும் அவன் பிரட்சினையாக்கி அரசாங்கத்தை ஒரு வழி பண்ணினான் என்றால் தான் நமக்கே விமோச்சனம் பிறக்கும்,

  ReplyDelete
  Replies
  1. 1.தானாட விட்டாலும் சதை ஆடும் என்பார்களே ,அதுதான் இது ))

   2புருஷனை அல்ல காதலனை ))))

   3.இதுக்கும் ஒரு விசாரணைக் கமிஷனை ஏன் போடவில்லை என்று தெரியவில்லை !
   நன்றி

   Delete
 2. முதலாவதிற்கு
  எனக்குப் புதிது உனக்கு பழசு
  என்று பாட வருதே...
  இந்தக் காதுலே வாங்கி,
  அந்த காது வழியா விட்டால்
  சிக்கல் வராதுங்க...
  கூரை பெயர்ந்து விழுவது தொடர்கிறதா
  அப்ப நான்
  மீன்பிடி வள்ளத்தில தான்
  மதுரைக்கு வரமுடியுமோ!

  ReplyDelete
  Replies
  1. இந்த சூழ்நிலைக்கு நன்றாக பொருந்துகிறதே அந்த பாடல் )))))
   மீன் பிடி வள்ளம் மூலம் வர மதுரையில் கடலும் இல்லையே ,நீங்க நேரா சென்னைக்கு போயிடுங்க )))))))
   நன்றி

   Delete
 3. விவகாரமான பதில்!

  இரண்டாவது - கேள்விக்கேற்ற நல்ல பதில்!

  விமான நிலையம் - சோகம்!

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ஏதோ விவகாரம் இருக்குன்னுதானே அர்த்தம் ?
   இந்த பதிலாவது ஒழுங்கா காதில் விழுமா ?))
   அதிலும் தீராத சோகம் !
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  தலைவா...

  இரசிக்கவைக்கும் பதில்கள்.... நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம3வது வாக்கு
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இந்த பதில்கள் சம்பந்தப்பட்டவங்களுக்கு அதிர்ச்சி அளிக்குதே )))))
   நன்றி

   Delete
 5. என்ன? முதலிரவு அறையில் இருந்து விசில் சத்தம் வருது?
  மாப்பிளை தரை டிக்கெட்டில் சினிமா பாக்குற பார்ட்டியாம்...

  ReplyDelete
  Replies
  1. அந்த விசில் சத்தம் விசுவோட காதுக்கு மட்டும் எப்படி கேட்குதுன்னுதான் புரியலே )))
   அது சரி ,இப்படியும் தரைப் பார்ட்டி இருக்குதா ?
   நன்றி

   Delete
 6. முதலாவது என்ன அர்த்தத்தில் சொல்லி இருப்பார் அந்த மனைவி?!!

  இரண்டாவது ஹா..ஹா..ஹா...

  மூன்றாவது வேதனையான உண்மை.

  ReplyDelete
  Replies
  1. தனக்கு எந்த டென்ஷனும்இல்லை என்ற தற்பெருமையில் தான் !)))

   இந்த வேதனையான உண்மை ,ஒரு நாள் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் முன் விழித்துக் கொள்ள வேண்டாமா ?
   நன்றி

   Delete
 7. அந்த கணவனை நினைத்தால் பாவமாக இருக்கிறது! ரெண்டாவது ஜோக் நெத்தியடியா இருக்கு! விமான நிலைய அவலம் மட்டும்ல்ல கேவலமும் கூட! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. முதல் நாளே இளம் மனைவி இப்படி அணு குண்டு போட்டா ,அவர் பாடு கஷ்டம்தான் ))
   நன்றி

   Delete
 8. அடப்பாவி!!!

  ஜி இப்பல்லாம் ரோட்டுல நடக்கறதுக்கே ஹெல்மெட் போடணும் .....

  ReplyDelete
  Replies
  1. அடப் பாவி இல்லே ,அடிப் பாவி )))))))

   கை விடப் பட்ட செயற்கைக் கோள்களின் பாகங்கள் நம் தலையில் வந்து விழும் காலம் வந்து விட்டதா ?
   நன்றி !

   Delete
 9. 1.அய்யோயோ!!!
  2.3.சூப்பர்!!

  ReplyDelete
  Replies
  1. கோழிக் குழம்பு வைப்பதில் நல்ல அனுபவம் உள்ளது என்று சொல்வது போல் 'இது ' 'அனுபவமாகிப் போச்சுன்னு சொன்னால் புருஷன் ayyaiyao தானே சொல்லணும் )))))))
   நன்றி

   Delete
 10. மக்கள் தலையில் விழுவது வரிகள் மட்டுமல்ல ! நச்சோ நச்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் எத்தனை நாளைக்கு விழுமோ தெரியவில்லை !
   நன்றி

   Delete
 11. நாடு வல்லரசாக......இந்த தகுதியே போதும்.......எனக்கு அனுபவமாகிப் போச்சுங்க !''

  ReplyDelete
  Replies
  1. ஒரே பெண் பலபேரை ஏமாற்றிக் கல்யாணம் செய்து செய்திகள் நிறைய வருகிறதே ,நிச்சயம் நாடு வல்லரசு ஆகிவிடும் !
   நன்றி

   Delete