16 September 2014

நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதா 'வாய் ? +விருது வாங்கலையோ விருது !

---------------------------------------------------------------------------------
விருது வாங்கலையோ விருது !

நம் சக பதிவாளரான மைதிலி டீச்சருக்கு என் மேல் என்ன கோபமோ தெரியவில்லை ....
THE VERSATILE BLOGGER AWARD யை அவர் தன்
http://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html
வலைத்தள பதிவின் மூலம் எனக்கு வழங்கியுள்ளார் ....
விருது வாங்கிக் கொண்ட கையோடுதினசரி பதிவு போடுவதில் இருந்து நான் ஓய்வு பெற்று விடுவேன் என்று அவர் நினைத்து ...
இந்த விருதை வழங்கி இருக்கமாட்டார் என்று நம்புகிறேன் .....
நானும் இந்த விருதை குறைந்தது ஐந்து 
பதிவர்களுக்காவது வழங்க வேண்டி இருப்பதால் ....
இந்த விருதை இதுவரையிலும் பெறாத பதிவர்கள் யாராவதுஇருந்தால் ....
தங்களின் தகுதியைக் குறிப்பிட்டு ...
ஜோக்காளியிடம் விண்ணப்பம் அனுப்பி ...
விருதைப் பெற்று மகிழலாம்....
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி .....
                                                          
                                               

              சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

பணம்... திருமணத்திற்கு முன்பும்,பின்பும் !

''கல்யாணத்திற்கு முன்னாலே சட்டை ,பேண்ட்டுக்கு பாக்கெட் வைக்க சொல்வீங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறீங்க ?''
''பணம் பாக்கெட்டில் இருந்து  ஜாக்கெட்டுக்கு மாறிடுச்சே !''

நீச்சல் உடை நாயகியே ,இங்கே 'சீதா 'வாய் ?

கொள்கை முடிவு எடுப்பதில் ...
நம்மூர் நடிகைகள் அரசியல்வாதிகளை 
விஞ்சி விடுவார்கள் போலிருக்கிறது ...
கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே கிளாமராய் நடிப்பார்களாம் !
இங்கே சதையை வைத்துதானே கதையே எழுதுகிறார்கள் ...
பிறகேன் இந்த கொள்கை விளக்கம் ?

31 comments:

 1. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பகவான்ஜி.

  01. பேண்டுக்கு ஜிப்பு வைக்க வேண்டாம்னு சொல்லாமல் இருந்தால் சரிதான்.

  02. கிளாமர்லதானே கதையே எழுதுறாங்க....

  ReplyDelete
  Replies
  1. இதை விருதைப் பெற்ற உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

   1.லேடிஸ் ஜீன்ஸ் பேன்ட்டில் ஜீப்பும் இல்லை .இதை விட முக்கியம் பாக்கெட்டே இல்லையாமே )))))

   2.கிளாமருக்குதானே ஹீரோயினே ?))))
   நன்றி

   Delete
 2. தமிழ்மணத்தில் முதலிடம் பெற்றுள்ள தாங்கள் THE VERSATILE BLOGGER AWARD பெற்றதற்கு வாழ்த்துக்கள்!


  ReplyDelete
  Replies
  1. மேற்படி விருது பெற்ற தங்களுக்கும் என் வாழ்த்துகள் !
   நன்றி

   Delete
 3. விருதுக்கு வாழ்த்துகள்.

  ஹா...ஹா...ஹா....என்ன சோகம், என்ன சோகம்!

  யாரும் விதிவிலக்கில்லை!

  ReplyDelete
  Replies
  1. விருது பெற்ற தங்களுக்கும் என் வாழ்த்துகள்!

   செலவு பண்ணும் போதுதானே சோகம் தெரிகிறது )))))

   வந்ததே சம்பாதிக்கத்தானே ...அப்புறமென்ன கட்டுப்பாடு ?))))
   நன்றி

   Delete
 4. விருது க்கு வாழ்த்துக்கள் ... விண்ணப்பம் விசயம் கூட புன்னகைக்க வைத்தது. :)

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி !விண்ணப்பங்கள் ஐவர் குழு பரிசீலனையில் உள்ளது நாளை முதல் விருது பெறுவோர் பட்டியல் தொடரும் துரை ஜி !))))

   Delete
 5. வணக்கம்
  தலைவா
  விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் இந்த விருதினைப் பெற்றதுக்கு வாழ்த்துகள்!
   நன்றி

   Delete
 6. விருதுக்கு வாழ்த்துக்கள்!!! ஜோக்காளிக்கு இல்லாததா!!! நன்றாகச் சொன்னீர்கள் ஜி. நாங்களும் விருது பகிர நினைக்க பலருக்கு ஏற்கனவே கிடைத்தது தெரிந்தது...நீங்கள் உட்பட.....எனவே தாங்கள் அறிவித்திருப்பது சரிதான்...ஹஹஹ்

  ஹாஹ்ஹஹ்ஹஹ்......மதுரை மீனாட்சி ஆட்சினு சொல்லுங்க....ஃபைனான்சியர்னு சொல்லுங்க....

  அதே!


  ReplyDelete
  Replies
  1. தாங்களும் இந்த விருதினைப் பெற்றதுக்கு வாழ்த்துகள்!
   விருது வழங்கப் படுவதற்கு தகுதியான நிபந்தனைகள் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன் .நமக்குள் நாமே கொடுத்துக் கொள்வதால் ,சின்ன சந்தோஷம் கிடைக்கிறது !அனுபவிப்போமே !

   இந்த மீனாட்சி ஆட்சி மதுரையில் மட்டுமல்ல உலகமெங்கும் என்றே சொல்லலாம் )

   சில ஹீரோயின்கள் கதை கேட்டுதான் நடிப்பேன் என்று சொல்வதெல்லாம் டூப்பு தானே ?))))))))

   நன்றி

   Delete
 7. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள் ணா !!


  அரசியல்ல மட்டுமில்ல , சினிமாவுலயும் இதெல்லாம் சாதாரணம்பபா !!

  ReplyDelete
  Replies
  1. விரைவில் இந்த விருது உங்களுக்கும் கிடைத்து விடும் !

   உண்மைதான் ,அரசியல்வாதி ,நடிகர் ,நடிகைகள் பேச்சை நாமும் சாதாரணமாய் எடுத்துக்கணும் )))))
   நன்றி

   Delete
  2. ம் !!! நன்றிங்ணே !!! :-)

   Delete
 8. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !

   Delete
 9. மேலும் பல விருதுகளைப் பெற வேண்டும்..
  விருது பெற்ற தங்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் இவ்விருதினைப் பெற்றதுக்கு வாழ்த்துகள்!
   நன்றி

   Delete
 10. என்ன பாஸ் இப்படி சொல்லீடிங்க :((
  விருது விண்ணப்பம் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. வேறொன்றுமில்லை ,விருது வாங்கிய நடிகையை திரைஉலகம் ஒதுக்கிவிடும் என்பதைப் போல ,எனக்கும் ஒரு பயம் !)))))கோபம் என்பதெல்லாம் just fun,take it easy!
   கடைத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கலாம் என்றால் ,இதுவரையிலும் யாரும் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை ...என்ன கொடுமைடா சரவணா ?))))
   நன்றி


   Delete
 11. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பகவான் ஜி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 12. எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாய் என் வாழ்த்துக்கள். வாழ்க! வளர்க!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்திலேயே எனக்கு இருந்த வலிகள் எல்லாம் பறந்து போச்சு ,வலிப் போக்கன்))))))
   நன்றி

   Delete
 13. விருது பெற்றமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் இதே விருதை தாங்களும் பெற்றதற்கு வாழ்த்துகள்!
   நன்றி !

   Delete
 14. THE VERSATILE BLOGGER AWARD
  வாழ்த்துகள்.
  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. தாங்களும் இதே விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்!
   நன்றி

   Delete
 15. விருது கொடுக்கலாமென வந்து பார்த்தேன்.
  தங்களுக்கு ஏற்கெனவே கிடைத்து விட்டதுஇ
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க விருது கொடுத்த மகிழ்ச்சியை இப்பவே அடைந்து விட்டேன் .தாங்களும் இவ்விருதை மீண்டும் பெற்றதற்கு வாழ்த்துகள்!

   Delete