17 September 2014

மனைவி சேலைப் பார்க்கும் நேரத்தில் ......!

   மனைவி சேலைப் பார்க்கும் நேரத்தில் ......!                  
                  
            ''இரண்டு சினிமா தியேட்டர் உள்ள மாலில்தான் எனக்கு  சேலை எடுக்கப் போகணும்னு பிடிவாதமா சொல்றீங்களே ,ஏன் ?''
                ''போன தடவை நான் ஒரு படம் பார்த்துட்டு வந்த பிறகும் கூட நீ ஒரு  புடவையைக்கூட  செலக்ட் பண்ணலையே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

USல் வேலை செய்தால் லீவு உடனே கிடைக்குமா ?

''கொள்ளி வைக்க வேண்டிய ஒரே பையன் ,லீவு கிடைச்சு வர மார்ச் மாதம் ஆகும்ன்னா ...அதுவரைக்கும் அப்பன் பாடியை எங்கே வைக்கிறது ?''
''மார்ச் 'சுவரியிலேதான் !''

டொனேசன் கொடுத்துப் படிப்பதும் மூலதனம்தான் !

பல் சொத்தையை சிமெண்ட் பூசி அடைக்கலாமென
நமக்கு புரியும்படி சொல்லி ...
அதற்கு ஐநூறு ரூபாய் செலவாகும் 
எனக் கூறும் மருத்துவரிடம் ...
இதுக்கு ஒரு டீஸ்பூன் அளவு சிமெண்ட் கூட தேவைப் படாதேயென சொல்லமுடியாது ...
ஐநூறை அவர் கேட்கவில்லை ,அவர்மூலமாய் 
நன்கொடை வசூல் பண்ணும் 
மருத்துவக் கல்லூரி நிறுவனர் கேட்கிறார் !

22 comments:

 1. Replies
  1. அம்மாவுக்கு சேலைப் பார்க்க விருப்பம் ,அய்யாவுக்கு சினிமா பார்க்க விருப்பம் ,இதில் யாரைக் குற்றம் சொல்ல ?
   நன்றி !

   Delete
 2. வணக்கம்
  இரசிக்கவைக்கும் நகைச்சுவை....அருமை.. வாழ்த்துக்கள் த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மூன்று நகைச்சுவைக்கு த ம மூன்று போட்டு ரசிக்க வைத்ததற்கு நன்றி !

   Delete
 3. 01. சில மனைவிமார்கள் இந்த விசயத்தில் இப்படித்தான் இருக்கிறார்கள்.
  02. நல்லவேனை லீவு டிசம்பர்ல கொடுக்கலை இல்லைனா பாடியை டிஸ்மிஸ் செய்ய சொல்லியிருப்பார்கள்
  03. நல்லவேனை பெயிண்டிங் செலவை கேட்கலை.

  ReplyDelete
  Replies
  1. 1,அவர்கள் திருந்த மாட்டார்கள் ,கணவன்மார்கள் திருத்திக் கொள்வதே நல்லது )))))

   2 எப்ப வந்தாலும் தோண்டி எடுத்து சடங்குகளைச் செய்யலாமோ )))))

   3அது ஒண்ணுதான் பாக்கி )))))
   நன்றி

   Delete
 4. முதல் இரண்டும் அருமை . கடைசியாக கூறிய கருத்து சூப்பர்ப் ணா !!!

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ன்னா அருமையை விட ஒரு படி கூடுதல் ,அப்படித்தானே திருமுருகன் ஜி ?
   நன்றி

   Delete
 5. 1. நல்லவேளை, ரெண்டு சினிமா டயத்துல முடிச்சுடறாங்களே... பாராட்டணும் அவிங்களை!

  2. ஹா...ஹா...ஹா.. (இதுக்கு சிரிக்கக் கூடாதோ)

  3. ஆதிமூலம் அவர்தானா? இன்னுமா வசூல் பண்ணி முடியலை?

  ReplyDelete
  Replies
  1. பாராட்டலாம் ,இன்னும் ரெண்டு சினிமா பார்க்கும் நேரத்தில் மேட்சிங் பிளவுஸ் துணியையும் எடுத்து விட்டால் ))))))))

   சிரிக்கலாம் ,மூக்கை பொத்திக் கொண்டு )))))))

   டோல்கேட்டுக்கு செலவு ஒரு மடங்கு என்றால் ஆயிரம் மடங்கு வசூல் செய்வது போலத்தான் ,இந்த வசூலும் )))))
   நன்றி

   Delete
 6. வித்தியாசமா சிந்திக்கிறீங்க! ரெண்டு ஜோக்கும் சூப்பர்! மூணாவது கருத்தும் உண்மை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. சிந்தனைக்கு ஏது எல்லை ,கண்ணில் படும் அத்தனையும் ஏதோவொன்றை சொல்கிறதே )))))
   நன்றி

   Delete
 7. சிந்திக்கவைத்து சிரிக்கவைக்கும் ஆக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சத்தியமாச் சொல்றேன் ,சிந்திக்க வைக்கணும் என்ற கெட்ட எண்ணம் எல்லாம் எனக்கு இல்லவே இல்லை )))))
   நன்றி

   Delete
 8. அது எப்படி என்னை விட்டுட்டு சினிமாக்கு போவீங்கன்னு சண்டைக்கு வந்தாலும் வரலாம்! :)

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. அப்படின்னா ,சட்டை பேண்ட் எடுக்கிற நேரத்தில் ,அடிக்கடி உங்கள் தளத்தில் வர்ற குறும் படத்தைப் பார்க்கச் சொல்லி விட வேண்டியதுதான் )))
   நன்றி

   Delete
 9. /மனைவி சேலைப் பார்க்கும் நேரத்தில் ......! /

  படம் போரடித்தாலும் தூங்கிவிட்டு வரலாம்!

  நல்ல யோசனை பகவான்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தூங்குறதா இருந்தா முன் கூட்டியே இரண்டு ஷோ டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாமோ ?))
   நன்றி

   Delete
 10. ஒரே கல்லில் ரெண்டு சேலை..சாரி...மாங்காய்.............

  ReplyDelete
  Replies
  1. திருட்டு மாங்காய் என்றால் வேற வழியில்லை , கல்லைத் தான் எறிய வேண்டியிருக்கும் ))))))
   நன்றி

   Delete
 11. நாள் கணக்கில சேலை பார்க்கும் பெண்களா?
  அப்பனுக்குக் கொள்ளி வைக்க கூலியாளைத் தேடவா?

  ReplyDelete
  Replies
  1. அதுதானே ,கொள்ளி வைக்கவும் வரலேன்னா அவன் என்ன பிள்ளை ?))))
   நன்றி

   Delete