18 September 2014

கட்டிக்கிட்டவளிடம் பல் வலின்னு சொன்னது தப்புதான் !

                   ''பல் வலிக்குதுன்னு சொன்னா ,மல்லிகா டாக்டரைப் பாருங்கன்னு   ஏன் சொல்றே ?''
                  '' பொண்ணுன்னா  பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தன்னை மறந்து உண்மை பேசிய டாக்டர் !

            ''டாக்டர் ,நாளைக்கு எனக்கு அறுபதாவது பிறந்த நாள்னு சொன்னதும் ,எனக்கு பண்ணவிருந்த ஆபரேசனை ஏன் தள்ளி வச்சிட்டீங்க ?''
           ''நல்லநாளும் அதுவுமா ...உங்களோட ,உங்க  பேரன் பேத்திங்களோட  சந்தோசம் கெட்டு விடக் கூடாதுன்னுதான் !''

எங்காவது ஹோட்டல் திராவிடா இருக்கிறதா ?

பேரூந்து பயணத்தின் போது...
சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...
முன்பு ஆரிய பவன் ,இப்போ ஹோட்டல் ஆர்யா !
நடத்துவதும்,சமைப்பதும்,உண்பதும் நம் தமிழன்தான் ...
ஆனால் இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?

32 comments:

 1. கணவனைப் பற்றி எவ்வளவு சரியாக புரிந்து வைத்திருக்கிறார் அந்த மனைவி. இப்படி ஒரு மனைவி கிடைக்க கொடுத்து வைத்திருக்கணும்.(உங்க ஆதங்கத்தை நல்லாவே வெளிப்படுத்தியிருக்கீங்க!!!)

  பரவாயில்லையே டாக்டர் உண்மையை பேசிட்டாரே!!

  ஆர்ய மோகம் - எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க பகவான்ஜீ

  ReplyDelete
  Replies
  1. 1.நான்தான் தங்கமாச்சே ,எனக்கேது ஆ தங்கம் ?))))))))

   2.டாக்டர் மனசிலேயும் கொஞ்சம் ஈரமிருக்கே ))))))

   3. கமல் மோகம் ,ரஜினி மோகம் மாதிரி சிலருக்கு ஆர்ய மோகம் இருக்கும் போலிருக்கே ))))))

   நன்றி

   Delete
 2. Replies
  1. இப்படி சும்மா சிரிச்சா எப்படி ,ஏதாவது சொல்லிட்டு சிரிங்க !))))
   நன்றி

   Delete
 3. 01. அப்படீனா கண்வலினு சொன்னா கண்ணாம்பாளை பார்க்கச் சொல்வாங்களோ ?

  02.டாக்டரு உளருவாயனோ ?

  03.ஆரியர் காலத்துல தொடங்குனதாச்சே...

  ReplyDelete
  Replies
  1. 1. பார்க்கச் சொன்னா பரவாயில்லை ,கண்டவங்களையும் பார்த்துகிட்டு இருந்தீங்களே...கண் வலி வராம என்ன செய்யும்னு குத்திக் காட்டாமஇருந்த சரிதான் !))

   2.நல்லதைச் சொன்னா இப்படி ஒரு பட்டமா ?)))))

   3.அப்படி தொடங்கி இருந்தாலும் ஒரு நியாயம் இருக்கு )))))

   நன்றி

   Delete
 4. *சாலையோரம் 'ஆர்யா' உணவகங்களுக்கு பஞ்சமில்லை ...*

  ஐயங்கார் பேக்கரிகளுக்கு மட்டும் பஞ்சமா என்ன?!

  ReplyDelete
  Replies
  1. அதுதானே ,முட்டை சேர்க்கிற பேக்கரி ஐட்டத்திற்க்கும் ,ஐயங்காருக்கும் என்ன சம்பந்தம் ?))))
   நன்றி

   Delete
 5. *'' பொண்ணுன்னா பல்லைக் காட்டிட்டு நிற்கிறது உங்க வழக்கமாச்சே !''*

  நல்ல வேளை, ஜொள்ளு விடறது அந்த அம்மாவுக்குத் தெரியாது போல.

  ReplyDelete
  Replies
  1. பல்லைக் காட்டுறதுக்கும்,ஜொள்ளு விடுறதுக்கும் ஆறு வித்தியாசமா இருக்கு ?))
   நன்றி

   Delete
 6. மூன்றாவது யோசிக்க வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. யோசிங்க ,யோசிச்சுகிட்டே இருங்க ,நான் ஆர்யாவிலே சாப்பிட்டு வந்துடறேன் )))))
   நன்றி

   Delete
  2. பொண்ணுன்னா பல்லைக் காட்டிட்டு நிற்கிறது--பெரும்பாலான ஆம்படைகளின் பரமபரை வழக்கமாச்சே........

   Delete
  3. பரம்பரை வழக்கம்னு சொன்னால் போதுமா ,எத்தனை தலைமுறை வழக்கம்னு சொல்ல வேண்டாமா ?))))))))
   நன்றி

   Delete
 7. ஹா...ஹா...ஹா...

  ஹா...ஹா..ஹா.. (இன்னுமா டாக்டர் ஜோக்?)

  ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் ஜோக்தான் முக்காலமும் பொருந்தக் கூடியதா இருக்கே !
   நன்றி

   Delete
 8. மூன்றுமே அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இங்கே மூன்றுதான் அருமை ,இன்று நீங்கள் போட்டிருக்கும் ஜோக்குகள் அருமையோ அருமை !
   நன்றி

   Delete
 9. எல்லாமே ஹாஹா ரகம்...ஒருவேளை ஆர்யா ரசிகர்களாக இருக்கலாமோ? "ஆர்யா" நடிகரை என்னவென்று சொல்லுவது?

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணுமே சொல்லவேண்டாம் ,ஆர்யா ,அது யாருய்யா என்று கேட்கும் நிலையில்தான் அவர் இருக்கிறார் ?)
   நன்றி

   Delete
 10. டாக்டர் ஜோக் ரெண்டுமே சூப்பர் பாஸ்:))
  சிரிகவிதையில் நம் தமிழ் சூழல் தான் சிரிப்பா சிரிக்குது:(
  தம8

  ReplyDelete
  Replies
  1. திராவிட நாட்டிலேயே தமிழ் சூழலுக்கு பொருந்துற மாதிரி ஹோட்டல் திராவிடா இல்லை என்றால் வேறெங்கே போய் தேடுவது ?))))
   நன்றி

   Delete
 11. திண்ட ஆரிய ருசியால்...இந்த ஆர்ய மோகம் போகவில்லை என்று நிணைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆரிய பவன்லே சாப்பிட்டது முந்தைய தலைமுறையாச்சே,இன்னுமா அந்த ருசி நாக்கிலே இருக்கு ?)))
   நன்றி

   Delete
 12. இன்னமும் ஏன் போகவில்லை இந்த 'ஆர்ய'மோகம்?
  உண்மையில்
  இதுவோர் தமிழ்பற்றைச் சுட்டிநிற்கும் கேள்வி!
  ஆனால்,
  நம்மாளுகள் எண்ணத்தில் மாற்றத்தைக் காணோம!

  ReplyDelete
  Replies
  1. பெரியாராலேயே இவர்களைத் திருத்த முடியவில்லை ...ஹும்((((
   நன்றி

   Delete
 13. முதல் இரண்டும் சிரிக்க வைத்தது...
  மூன்றவது அருமையோ அருமை...

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் இதைப் பற்றி யோசித்து இருப்பீர்கள் போலிருக்கே ,அருமையோ அருமை சொல்வதைப் பார்த்தால் ?
   நன்றி

   Delete
 14. Replies
  1. உங்கள் இரசனைக்கு என் நன்றி !

   Delete
 15. முடியல்லப்பா சாமி ஒரு முடிவோடு தான் அலைகின்றீர்களோ ?..:))))))
  வயிறு வலிக்குது சிரிப்பை அடக்க முடியாமல் .வாழ்த்துக்கள் ஜீ

  ReplyDelete
  Replies
  1. கையிலே திருவோடுடன் அலைவதைவிட,ஒரு முடிவோடு அலைவதில் தவறில்லையே ? )))))))
   வாழ்த்துக்கும் நன்றி !

   Delete