21 September 2014

'சின்ன்ன 'மாப்பிள்ளை(யும்) ஆகத் துடிக்கும் 'பெரிய்ய்ய 'மாப்பிள்ளை !'

                
                  ''என் புருஷன் மேலே ஒரு கண்ணாவே இருன்னு சொல்றீங்களே ,ஏன்ப்பா?''
               ''மூத்த மாப்பிள்ளை உங்களுக்கே செஞ்சுகிட்டே இருந்தா ,வரப் போற சின்ன மாப்பிள்ளைக்கு என்ன செய்வேன்னு கேட்டதுக்கு ..'அதுக்கு அவசியமே இருக்காது மாமா 'ன்னு சொல்றாரே !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே பொருத்தம் !
"என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே பொருத்தமா   இருக்காங்களா ,எதிலே?"
"புருசன்களை திட்டுவதில் தான் !" 

எல்லா நாக்கும் விரும்பும் ஒரே சுவை எதுவும் உண்டா ?

சிங்கம் சைவம் சாப்பிட்டதா  சரித்திரம் இல்லை ...
யானை அசைவம் சாப்பிட்டதா பூகோளமும் இல்லை ...
ஆனா ,மனுஷன் எதைத்தான் சாப்பிடுவாங்கிறதுக்கு கணக்கே இல்லை !

22 comments:

 1. நம்மாளுகளுக்கு
  சாப்பிடுறதுக்கு கணக்கே கிடையாது
  புருசன்களை திட்டுவதில்
  மாமியார் மருமகள் ஒற்றுமையா
  பெரிய மாப்பிள்ளையின் எண்ணம்
  அப்படிப் போகுதே
  சிறந்த பதிவு
  சிந்திக்கவைக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. ஈசலைக் கூட வாழவிடாமல் சாப்பிட்டு விடுகிறானே நம்மாள்)))))))
   இது ஒற்றுமை ஒங்கட்டும்னு சொல்லமுடியுமா )))))))))
   இவர்தான்'பெரியய்ய'மாப்பிள்ளையாம் )))))))
   நன்றி

   Delete
 2. மருமகன் கிருத்திருவம் புடிச்ச ஆள் போலவே:))
  கரக்டா சொன்னிங்க பாஸ்:))
  நாக்கு படுத்தும் பாடு!!
  thama 2

  ReplyDelete
  Replies
  1. அதென்ன கிருத்திருவம் ,விளக்கம் பிளீஸ்)))))))
   தாலி கட்டிகிட்டதுக்கு இந்த உரிமையும் இல்லேன்னா அதென்ன தாம்பத்தியம் ))))))
   அரையடி நாக்குக்கு என்னென்ன தேவைப் படுது))))))
   நன்றி

   Delete
  2. அகராதி அல்லது லொள்ளு!! எங்க ஊர்ல இப்படி சொல்லோவோம்:))

   Delete
  3. உங்க ஊர்க்காரங்களும் கிருத்திருவம் பிடித்த ஆளுங்களா இருப்பாங்க போலிருக்கே !

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. This comment reply has been removed by the author.))))))))

   Delete
 4. 1.. ஹா..ஹா... ஆஹா.... சதித் திட்டம்!

  2. ஹா..ஹா.. அவிங்கவங்க புருசனைத்தானே...!

  3. ஹா..ஹா... அது சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. 1.நீங்கள் சதி என்றதும் .இதே எண்ணத்தில் 'ஆசை 'படத்தில் பிரகாஷ் ராஜ் செய்யும் சதிதான் நினைவுக்கு வருகிறது ))))
   2.அடுத்தவங்க புருசனையா திட்ட முடியும் ))))
   3.பூச்சியை மட்டுமா சாப்பிடுறான்,ஒரு இலையைக் கூட விட்டு வச்ச மாதிரி தெரியலே )))
   நன்றி

   Delete
 5. Replies
  1. பத்து நாளா என் தளத்திற்கு வராததால் ,வாத்தியார் உங்களுக்கு ஆப்சென்ட் மார்க் போட்டு வச்சுருக்கேன் !))))
   இன்றும் தாமதமாய் வந்தாலும் நன்றி !

   Delete
 6. 01. யானைவரும் பின்னே மணியோசை வரும்முன்னே மாப்பிள்ளை சிம்பாலிக்கா சொல்றாறோ...

  02. இனிமே திட்டும்போது மட்டும் லாங்குவேஜ் மாத்தணும் அப்பத்தான் மாற்றம் வரும்னு நினைக்கிறேன்.

  03.அதே மனுஷனை யானை அடிச்சுப்போட்டா சிங்கம் சாப்பிட்டுரும்.

  ReplyDelete
  Replies
  1. 1.இருந்தாலும் மாப்பிள்ளைக்கு இம்புட்டு ஆசை இருக்கக்கூடாது ,ஒண்ணுக்கு ஒண்ணு ஓசியா தர்றதுக்கு இதென்ன கத்தரிக்காயா ?))))))
   2.இதுக்காக ஹிந்தியா கத்துக்கிற முடியும் ?))))))
   3.இன்னும் கொஞ்ச நாள்லே அடிச்சுச் சாப்பிட ஊருக்குள்ளே சிங்கமும் வர ஆரம்பிச்சிடும் )))))))))
   நன்றி


   Delete
 7. மூத்த மாப்பிள்ளையே எல்லாத்தையும் வாரி வளச்சு போட்டா.....மத்த மாப்பிள்ளக கூட்டிட்டு ஓடுறதுதானே நடக்கும் ........ஜீ

  ReplyDelete
  Replies
  1. மத்த மாப்பிளங்க யாரைக் கூட்டிட்டு ஓடுவாங்க ,மூத்த மனைவியையா ))))
   நன்றி

   Delete
 8. ஆக மொத்தத்தில் ஜீ நீங்க எப்ப எப்படியெல்லாம் யோசிப்பீர்கள் என்று
  வைகுண்டத்தில் இருப்பவர்களுக்கும் தெரியாது நான் சொல்வது சரிதானே ?.:))

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப சரி ...Mind reader என்று யாராவது ஒரு சாமியார் 'புருடா' விடுவார் ,அவரால் கூட யார் மனதில் யார் ...தப்பு தப்பு ...யார் மனதில் என்ன என்பதைக் கண்டு பிடிக்க முடியாதுதான் ))))))
   நன்றி

   Delete
 9. கடைசி ரொம்பவே ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. கடைசியில் நீங்க ரசிக்கும் படியா இதையாவது சொல்ல முடிந்ததற்கு எனக்கும் மகிழ்ச்சி !
   நன்றி

   Delete
 10. பெரிய மாப்பிள்ளை சூப்பரோ சூப்பர்.

  அம்பிளைங்க நிலமை ரொம்ப பாவம் தான்.

  ஆமா, பன்ச் டயலாக் எல்லாம் எப்பத்திலிருந்து எழுத ஆரம்பிச்சுட்டீங்க?

  ReplyDelete
  Replies
  1. இப்பத்தானே அப்பா சொல்லி இருக்கார் ,அவர் வீட்டிலே என்ன பாடு படப் போகிறாரோ ))))
   அதாவது ,நம்ம நிலைமை ?)))))

   அப்பத்தில் ..தப்பு தப்பு ...அப்போதில் இருந்தே எழுதிகிட்டு தானே இருக்கேன் ))))))
   நன்றி

   Delete