27 September 2014

முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?

 -----------------------------------------------------------------------------

  செவ்வாய் தோஷம் இருந்தால் திருமணம் தள்ளிப் போகுமா ?                 
                      
                   ''நாலு வருசமா என் பொண்ணுக்கு வரன் ஒண்ணுமே அமையலே ,என்ன செய்யலாம் ?''
                  ''ஜவ்வாய் தோஷம் இருக்குதான்னு பாருங்க !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
முதல் இரவையும் ஸ்பை கேமராவில் எடுப்பாங்களா ?
                     ''என் மகன் கல்யாணத்திற்கு  AtoZ எல்லா வேலைகளையும் காண்ராக்ட்எடுத்து பிரமாதமா பண்ணி கொடுத்தீங்க ,ரொம்ப  நன்றிங்க !''
                     ''இதெல்லாம் என்னங்கபிரமாதம் ?முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கோம் ,பாரத்தா அசந்துடுவீங்க !''

குத்துப்பாட்டு நடிகையால் ரூபாயின் மதிப்பு கூடும் ?

பொருளாதார மேதை என்றறியப் பட்டவராலும் 
ரூபாயின் மதிப்பு குறைவதையும் ,
வளர்ச்சி விகிதத்தை  இரட்டை இலக்கத்திற்கு 
கொண்டுவர முடியவில்லை என்பதையும்  உணர்ந்து ...
தீர்வு தேடிய மக்கள்  ...
 'இடை'த்தேர்தலில் ஒரு VIPக்கு வாக்குகளை 'குத்து ,குத்து 'ன்னு குத்தி 'எம்பி 'ஆக்கி மக்கள் அவைக்கு  அனுப்பி உள்ளார்கள் ...
இடுப்பை காட்டி இடையை ஆட்டி ,எம்பி எம்பி குதித்து 
குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை  இப்போது   MP!

28 comments:

 1. 01. ஜவ்வாய் இழுத்தால் காரணம் செவ்வாய் தோஷமா ?

  02. அந்த காண்ட்ராக்ட் கம்பெனி அட்ரஸ் கொடுக்க முடியுமா ? பகவான்ஜி

  03. குத்தப்பாட்டுக்கு எம்மி, எம்பி ஆடுனவங்க MP யாமட்டுமா ? ஆனாங்க...

  ReplyDelete
  Replies
  1. 1.நம்ம மங்கள்யான் கூட செவ்வாய்க் கிரகத்தை படம் பிடித்து அனுப்பத் தொடங்கிய பிறகும் ,செவ்வாய் தோஷம் என்பதையெல்லாம் நம்ப முடியுமா ))))

   2.தருகிறேன் ,எவ்வளவு கமிஷன் தருவீர்கள் ))))))))

   3.அதுக்கு மேலே என்ன ஆனாங்கன்னு சொன்னா தெரிஞ்சுக்கிறேன் ))))))
   நன்றி

   Delete
  2. 03 இப்ப, தெரிஞ்சுகிட்டீங்களா ?

   Delete
  3. அப்டேட்டா தெரிஞ்சிகிட்டேன் ))))

   Delete
 2. ஜவ்வாய் தோஷம் இல்லீங்க
  லவ்வாய் தோஷம் இருக்கலாம்
  முதல் இரவையும் வீடியோ எடுத்திருக்கா
  இடுப்பை காட்டி இடையை ஆட்டி
  எம்பி எம்பி குதித்து
  குத்துப் பாட்டுக்கு ஆடிய நடிகை
  இப்போது MP! ஆயிட்டாவா
  இன்றைய பதிவில்
  மாறுபட்ட கருப்பொருளைத் தேடியிருக்கிறிள்
  நல்லாயிருக்கு!

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்ற loveவாய் தோஷம் இருக்கக் கூடுமென்றே தோணுதே )))
   நன்றி

   Delete
 3. Replies
  1. எது அருமை ,இப்படி ஸ்பை கேமராவில் படம் பிடிப்பதா )))))
   நன்றி

   Delete
 4. இன்றைய 27.09.2014 வலைச்சர அறிமுத்திற்க்கு வாழ்த்துக்கள் பகவான்ஜி

  ReplyDelete
  Replies
  1. தகவல் தந்ததற்கு மிக்க நன்றி !

   Delete
 5. ஜவ்வாய் தோஷம்...
  ஸ்பை கேமரா...
  எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது ஜி...
  எம்பி எம்பிக் குதித்த நடிகை எம.பி, ஆன கதை.... ஹா.... ஹா... சூப்பர்...

  வலைச்சர அறிமுகமா... வாழ்த்துக்கள் ஜி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி குமார் ஜி !

   Delete
 6. ஜவ்வாய் தோஷம் ரசித்தேன்! எம்பி குதிச்சவங்க எம்பி ஆகிட்டாங்களா? விளங்கிரும்! வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்தவரு அதைக்கூட விடலியா? ஹாஹாஹா! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் ஜாக்கிரதையாய் தான் காண்ட்ராக்ட் விடணும் போலிருக்கே ))))
   நன்றி

   Delete
 7. ஜி! ஹப்பா உங்கள் தளம் திருடு போயுடுச்சோனு நினைச்சோம்!! அதான் ஏதோ ஐடி எல்லாம் திருடிட்டாங்கனு பரபரப்பா பேச்சு வந்துச்சே அதனாலதான்......இதுவரை வரவே இல்லைங்க....இப்பதான் வந்துச்சு...

  ஜவ்வாய்!!!! ஹாஹஹ்ஹாஹ்

  அடப்பாவி! இப்படியுமா!!!!?????

  ஹாஹாஹாஹா.....

  ReplyDelete
  Replies
  1. திடீர் திடீர் என்று கூகுள் ஆண்டவர் சோதித்துக் கொண்டே இருக்கிறார் ...இதோ ,தமிழில் டைப்பிக்க முடியவில்லை .ஒரு மணி நேர போராட்டம் இப்போதான் முடிவுக்கு வந்தது !
   நன்றி

   Delete
 8. ஜி வலைச்சரம் பக்கம் இன்று உங்க டிபார்ட்மென்ட் ஜி.....

  ReplyDelete
  Replies
  1. வலைச் சரத்தில் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி !

   Delete
 9. Replies
  1. நல்ல வேளை,அந்த வீடியோவை நெட்டிலும் போட்டு விடுவேன் என்று சொல்லாமல் விட்டாரே ))))))
   நன்றி

   Delete
 10. வரிகள் சில
  அர்த்தங்கள் பல
  அருமை ...

  ReplyDelete
  Replies
  1. அர்த்தங்கள் பல என்று நீங்கள் சொன்னதில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கே )))
   நன்றி

   Delete
 11. எனக்கு 22 வருசமா கல்யாணம் தள்ளி போய்கிட்டு இருக்கு, எனக்கு செவ்வா தோஷம் இருக்குமோ ?

  என் வயசு 22.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு லேட்டா வந்து கேட்டா எப்படி ?22 வருசத்துக்கு முந்தியே கேட்டிருந்தா உருப்படியா பரிகாரம் சொல்லி இருப்பேனே ))))))
   நன்றி

   Delete
 12. அந்த கான்ட்ராக்டரை நீங்கள் தான் சிபாரிசு செய்தீர்களாமே!!!

  ReplyDelete
  Replies
  1. விட்டால் , நான்தான் அந்த வீ டியோவை முதலில் பார்த்ததாக கூட போட்டு கொடுப்பீர்கள் போலிருக்கே ))))))
   நன்றி

   Delete
 13. ஜவ்வாய் தோஷம்.... :))

  எல்லாத்துக்கும் சேர்த்து காண்ட்ராக்ட்!

  ReplyDelete
  Replies
  1. கல்யாண காண்ட்ராக்ட்டில் சொல்லாததையும் செய்தால் எப்படி )
   நன்றி

   Delete