30 September 2014

சமந்தா மாதிரி சமோஸாவும் ,நல்ல பெயர்தானே ?

----------------------------------------------------------------- 
படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லைதானே ?                                           
                  ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
                    ''படிக்கிற காலத்திலே அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்காச்சே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

மோஸா வியாபாரி மகளுக்கு வைத்த பெயர் !

''அவருக்கு செய்ற தொழில் மேல் அதிக  பிரியம்னு ஏன் சொல்றே ?''
''மகளுக்கு 'சமோஸா 'ன்னு பெயர் வைச்சிருக்காரே!''

ஆளைக் கொல்வது கூலிப் படைக்கு மட்டும்தான் சொந்தமா ?

வாக்குப் பதிவின் போது இறந்தவர்களும் வந்து 
ஓட்டுபோடும் 'அதிசயம் 'மட்டும்தான் நடந்துக் கொண்டிருந்தது ...
உயிரோடு இருக்கும் மந்திரிக்கும் MLAக்கும் 
இறப்பு சான்றிதழ் கொடுத்து ...
அதிசய சாதனை படைத்துள்ளது மதுரை மாநகராட்சி !
கூலிப் படைக்கு மட்டும்தான் ஆளைக்
கொல்லும்'உரிமை 'இருக்கா ?

எங்களுக்கும் உண்டென்று சொல்கிறார்களோ ?

555 என்பது வெளிநாட்டு சிகரெட் ஒன்றின் பெயர் ...
555 என்பது சமீபத்தில் வெளியான தமிழ்ப் பட டைட்டில் ஒன்றின் பெயர் ...
555 என்பது நண்பர் வெங்கட் நாகராஜ்அவர்களின் இன்றைய பதிவின் தலைப்பு
   இவைகளைப்பற்றி அல்ல ,இந்த பதிவு !
555 என்பது  2013ம் ஆண்டில் 'ஜோக்காளி'யில் வெளியாகி இருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை தான் !
ஓராண்டு நிறைவு அடைவதற்குள் குட்டி குட்டி பதிவுகளை போட்டு அடைந்து இருக்கும் உயரம் இது !
தினசரி இரண்டு ,மூன்று படிகள் முன்னேறி தமிழ் மண ரேங்க் 64வது இடத்தை அடைய ஊக்கப் படுத்தியவர்களுக்கும் ,
ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] இருப்பவர்களுக்கும் என் நன்றி !
தொடர்ந்து உங்கள் ஆதரவை விரும்பும் ...
ஜோக்காளி.
சென்ற வருடம் 555 பதிவுகள் வெளியான நிலையில் 64வது இடத்தில் இருந்த ஜோக்காளியை    குறுகிய காலத்தில் கடந்த 7.7.14 அன்று முதல் இடத்திற்கு வர உதவிய வலையுலக உறவுகளுக்கு மீண்டும் என் மனமார்ந்த நன்றி !

14 comments:

 1. அன்று
  555 என்றால் என்ன?
  குட்டிக் குட்டிப் பதிவுகளை போட்டு ஜோக்காளி அடைந்து இருக்கும் உயரம் தான்!
  இன்று
  தமிழ்மணம் முதலாமிடம்
  பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தது ,அது இவ்வளவு விரைவில் நிறைவேறியது உங்களைப் போன்றோர் தந்த ஊக்கத்தால் தான் !
   நன்றி

   Delete
 2. நீங்கள் முதலாம் இடத்துக்கு வரவில்லை என்றால் தான் ஆச்சிரியம்.
  மக்களை மகிழ்விக்கும் பணி தொடரட்டும் பகவான்ஜீ.
  தாங்கள் அடைந்த உயரத்திற்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

  ReplyDelete
  Replies
  1. முதலாம் இடத்தைப் பிடிப்பேன் என்று தீர்க்கத் தரிசனமாய் சொன்ன நண்பரகள் இப்போது ஜோக்காளியை மறந்து விட்டார்களே என்ற வருத்தம் எனக்குண்டு !
   நன்றி

   Delete
 3. பூஜ்ஜியத்துக்கு மதிப்பு இல்லைனு சொன்னவங்கள கூப்டுங்க ஜி!

  ஹை சமோஸா நல்ல பெயர்!!! ஜி....யாருக்காவது பரிந்துரைக்கலாம் போல!!!

  தங்களுக்கு வாழ்த்துக்கள் ஜி! ஜோக்காளுக்கு இல்லாத வாழ்த்தா? ஜோக்காளி இன்னும் உயரம் தொடுவார்! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. பூஜ்யத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியமே நடத்துபவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள் ?)))

   அமோகான்னு ஒரு நடிகை வந்தார் ,ஆனால் அமோகமாய் அவர் வரவில்லை என்பது நினைவுக்கு வருதே ))

   பாராட்டுக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி !

   Delete
 4. மூன்று ஜோடி "ஹா' க்களும் 555 தகவலுக்கு வாழ்த்துகளும்!

  ReplyDelete
  Replies
  1. #ஜோக்காளியை தினசரி படித்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டு[?] #இருப்பவர்களில் நீங்கள் முக்கியமானவர் ஆச்சே )))
   நன்றி

   Delete
 5. 01. முட்டைக்கடை வச்சுருக்கானு சொன்னாத்தான் நம்புவாறோ ?
  02. விவேக் சொன்னது, சம்சாவுக்குள்ளே ரொட்டியா ?
  03. சாதனை செய்யிறவன் பூறாம் நம்ம நாட்டுலதான்யா இருக்கான்.
  04. எனக்கிட்டே கூட ஒருத்தன் 555 ரூபாய் கடன் வாங்கினான் தரவேயில்லை.

  இந்த நம்பர் நண்பருக்கு என்றும் நிலைத்திருக்க எமது வாழ்த்துக்களும், ஞானி ஸ்ரீபூவு ஆசிகளும் உண்டாகட்டும்...

  ReplyDelete
  Replies
  1. 1.கூமுட்டை எப்படி முட்டை வியாபாரம் பண்ணுதோன்னு நம்ப மறுப்பார் ))))

   2.கடிக்கும் படியா ஆளும் இருக்கான்னு கமெண்டும் வரலாம் )))

   3.இப்படி சாதனை வேற எவனால் செய்ய முடியும் ))))

   4.54 ரூபாய் சேர்த்து மொய் எழுதியதா நினைச்சு மறந்துடுங்க ))))

   எதையாவது 'உண்டாக்கி 'கொண்டே இருப்பதுதான் ஞானி ஸ்ரீ பூவின் வேலையா )))
   நன்றி!

   Delete
 6. வாத்தியாருக்கு அப்பவே தெரிந்திருக்கு.
  பேஷ் பேஷ் சமோசா ரொம்ப நல்லா இருக்கு.
  555 'டென் தவுனா' க மாற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாத்தியார் தீர்க்கதரிசியாய் இருப்பாரோ ))))
   சமோசா கும்முன்னு இருக்கா ))))
   வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 7. சமோசா - நல்ல பெயர் தான்! :))))

  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. கடந்தாண்டு நீங்க போட்ட 555 பதிவு நினைவுக்கு வருதா ,ஜி ?
   நன்றி

   Delete