4 September 2014

மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !

            ''எலிப் பொறியில் வைத்த எதுக்குமே சிக்காத எலி ,அந்த ஹோட்டல் மசால் வடைக்கு மட்டும் மாட்டும்னு எப்படி உறுதியாய் சொல்றே ?''
               ''காதலிக்கும் போது நீங்க வாங்கித்தந்த அந்த ஹோட்டல் மசால் வடையைத் தின்னுட்டு ,நானே மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே !''


சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
வீடியோ கால் செல்லில் தெரிந்த அழகு முகத்தை ...!
''செல்லுலே பார்க்கும் போது அம்சமா இருக்கீங்கன்னு சொன்னேன் ,அதுக்கு  தலைவர் 'வைடா போனை''ன்னு ஏன் சொன்னார்னு தெரியலே !''
''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுக்கிட்டாரோ என்னவோ ?''

கணவனிடம் இவ்வளவு முன் ஜாக்கிரதை தேவையா ?

நான் கைக்குத்தல் அரிசியை தின்று வளர்ந்தவன் என்பதை ...
ஒருபேச்சுக்குக்கூடசொல்லமுடியவில்லை என்னவளிடம் ...
'அதுக்காக உங்க கை நீட்டலையும் ,குத்தல்பேச்சையும் சகிச்சுக்க மாட்டேன் 'என்கிறாள் !

24 comments:

 1. 01. அந்தக்கடையில ரெண்டுவடை வாங்கி கூரியர்ல அனுப்பி வைங்க பகவான்ஜி.

  02. கைப்பேசியிலனு தமிழ்ல பேசியிருக்கலாம்.

  03. அப்படிப் பார்த்தால் ? இவருக்கு வயசு 50 ஐ தாண்டியிருக்குமே.... இன்னுமா பிரட்சினை ?

  ReplyDelete
  Replies
  1. ரெண்டு வடையா ,உங்களுக்கு எதுக்கு ?

   வீடியோ கால் பிரபலம் ஆகாத காரணம் இப்படிப்பட்ட கிண்டல் காரணமா ?

   ஐம்பதிலும் ஆசை வரும் ,இவங்களுக்குள்ளே இன்னும் மோதலே முடியலையே !
   நன்றி

   Delete
 2. வணக்கம்
  தலைவா..

  முதலாவது நகைச்சுவை மிக அருமையாக உள்ளது அனுபவம் பேசுது போல.. தலைவா.... அந்த கடை முகவரியை சொன்னால் நல்லம் . பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அந்த ஹோட்டல் என் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறது ,பதிவர் சந்திப்புக்கு மதுரைக்கு வந்தா காட்டுறேன் !
   நன்றி

   Delete
 3. மசால் வடையும் மாட்டிக்கிட்டு முழிப்பதுவும்
  செல்லில் தெரிந்ததும் செல்லுலே இருந்ததும்
  கைக்குத்தலும் கைநீட்டலும் என மூன்றும்
  நன்றே மின்னும் நகைச்சுவை என்பேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்க கருத்துரையும் கவிதைப் போல மின்னுதே !
   நன்றி

   Delete
 4. ஹஹாஹாஅ.....சூப்பர் ஜி! மூன்றுமே!!

  ஜி இன்னும் ஒரு மூன்று நாட்களுக்கு வலைப் பக்கம் வர னேரமின்மை காரணமாக இருவருமே வருவது சிறிது சிரமாமக இருக்கலாம்....திங்கள் கிழமையிலிருந்து திரும்பவும் வந்து விடுவோம்...ஜி...மன்னிக்கவும் ஜி!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த குறும்பட வில்லன் ஆச்சே ,அசத்துங்க !சூட்டிங்கில் பிசியாக இருப்பீர்கள் என நினைக்கிறேன் ..வாழ்த்துக்கள் !
   நன்றி

   Delete
 5. காதலிக்கு நாக்கு நீளம், மனைவிக்கு வாய் நீளம், தலைவர்க்குதான் புத்தி கம்மியா இருக்கு பாஸ்:)
  thama2

  ReplyDelete
  Replies
  1. நீளம் அதிகமானதால் மாட்டிகிட்டு முழிக்கிறாங்களோ ?))))))))

   அரசியல்வாதிக்கு இந்த அளவிற்கு புத்தி இருக்கேன்னு சந்தோசப் படணும் )))))
   நன்றி

   Delete
 6. ஆஹா மசால் வடை மஹாத்மியம்! :))))

  மற்ற இரண்டும் நன்று.

  ReplyDelete
  Replies
  1. உங்க ப்ரூட் சாலேட் தாமதமாவதால் ,அதுவரை மசால் வடையை கொறிச்சுகிட்டு இருக்கேன் ))))
   நன்றி

   Delete
 7. கடைக்கு நல்ல விளம்பரம் பண்ணியாச்சு போல !. தம.5

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் தெரிஞ்சுப் போச்சா ,எந்த கடைன்னு ?
   நன்றி

   Delete
 8. மசால் வடைக்கு அம்புட்ட்டு ஈர்ர்ர்ப்பு பூ இருக்குதாக்கும்...

  ReplyDelete
  Replies
  1. நீங்க அந்த மசால் வடையை ருசித்துப் பார்த்ததில்லை போலிருக்கே !
   நன்றி!

   Delete
 9. மனைவிக்கு ஞாபகம் ரொம்ப அதிகம் தான். பாவம் அந்த கணவன்,

  அரசியல்வாதி - சரியாகத்தான் நிரூபிச்சிருக்கார்

  இதுவே அந்த கைக்குத்தல் அரிசியை மனைவி சாப்பிட்டு வளர்ந்திருந்தால்???

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக இப்படியா முடிச்சுப் போட்டு குத்திக் காண்பிக்கறது ?

   அவரை விட்டு எங்கே போகும் அவர் புத்தி ?

   மனைவி கையினால் அவர் குத்து வாங்குவதைப் பார்த்தால் நீங்கள் சொல்வதுதான் உண்மை போலிருக்கு !
   நன்றி

   Delete
 10. மறக்காத..மசால் வடை
  செல்லில் சொல்
  குத்தல் பேச்சும் கைகுத்தும்....

  நகைச்சுவை சுவைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. காதலி மனைவி ஆனதும் இப்படி கேட்பான்னு தெரிஞ்சு இருந்தா மசால் வடையே வாங்கித் தந்து இருக்கமாட்டார் !
   நன்றி

   Delete
 11. Replies
  1. மசால் வடையை விரும்பி நீங்க போட்ட வாக்குக்கு நன்றி !

   Delete
 12. ஹஹஹா.. அரசியல்வாதி ஜோக் செம்ம

  ReplyDelete
  Replies
  1. அவரின் அழகு முகத்தை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி !

   Delete