12 October 2014

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?

------------------------------------------------------------

ஓசியில் திங்க அலையுறாங்களோ  ?
         ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
              ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

அந்த நர்ஸ், 2013 மிஸ் சென்னை ? 

           ''அழுது வடிஞ்சுகிட்டு இருந்த ஆஸ்பத்திரியிலே, புது போர்டு வைச்சதும் ஆண்கள் கூட்டம் அலை மோதுதே ,எப்படி ?''
             ''மிஸ் சென்னை பட்டம் வென்ற அழகி நர்ஸாய் பணிபுரியும் பெருமை படைத்தது இந்த மருத்துவமனைன்னு விளம்பரம் பண்ணி இருக்காங்களே !''

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொண்டால் ...?

நம்ம ஊர் லாரி,பஸ்களின் பின்னால் ...
பத்து மீட்டர் இடைவெளிவிட்டு வரவும் என்றெழுதி இருப்பதைப்  போல  ...
சீனாவில் வெண்சோ நகரிலுள்ள இரு பாலர் பள்ளி ,கடைபிடிக்க  வேண்டிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது ...
மாணவர் மாணவி இடையே எப்போதும் அரை மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது கூட பரவாயில்லை ...
ஹான்க்சோ நகரில் உள்ள பள்ளி அறிவிப்பை படித்தால் அழுவதா  சிரிப்பதாவென்று புரியவில்லை !
மாணவனுக்கும் மாணவனுக்கும் .மாணவிக்கும் மாணவிக்கும் இடையே இடைவெளி இருக்க வேண்டுமாம் !
தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

தின'சிரி' ஜோக் !

இப்படியும் ஒரு பிள்ளை!


             "மனைவிக்காக தாஜ் மஹால் கட்டிய  ஷாஜகானை , அவர் மகன் சிறை யில்  அடைத்து வைத்து இருந்தாராம்  ..இதுலே  இருந்து என்ன தெரியுது ?"
               "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது நல்ல அப்பனாவும் இருக்கணும்னு  தெரியுது!" 


30 comments:

 1. Replies
  1. வண்ணத்துப் பூச்சியாய் பறந்து வந்து முதலில் கருத்துரைத்ததற்க்கு நன்றி !

   Delete
 2. மனம் விட்டு சிரித்தேன். த.ம 1

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ரசனைக்கு நன்றி !

   Delete
 3. Replies
  1. எதை ?நல்ல அப்பனாவும் இருக்கணும்னு சொன்னதைத்தானே ?)
   நன்றி

   Delete
 4. பாவம் பாஸ் அந்த பொண்ணு:((
  அப்பா எப்படி இருக்கனும் இப்போ தெரியுது:)

  ReplyDelete
  Replies
  1. இப்படி அல்வா கொடுக்கிற கூட்டம் இருக்கும்வரை அந்த பொண்ணு பாவம்தான் )

   அப்பனுக்கு ஒரு பெண்டாட்டின்னா பிள்ளைக்கும் மதிக்கத்தோணும்)
   நன்றி

   Delete
 5. உங்க பேரை தெரிஞ்சுக்க ஆசை இல்லையா பாஸ்!! விடைகள் போட்டுவிட்டேன். வந்து பாருங்க!

  ReplyDelete
  Replies
  1. பார்க்காமல் இருப்பேனா ?இதோ அங்கே போட்ட கமெண்ட்#நான் இங்கிலீசில் ரொம்ப வீக் ஜோக்காளிக்கு Merry-Andrew என்று சொல்லி இருப்பது கூட எந்த வகையில் பொருத்தம் என்று எனத் தெரியாமல் டௌட்தாமஸைப் போல யோசிக்கிறேன் )#
   இதுக்கு விளக்கம் நீங்க தர்றீங்களா ,இல்லை ,ஜோக்காளி என்ற விடையைக் கண்டுபிடித்த துளசிதரன் ஜி யிடம் கேட்டுக்கட்டுமா ?
   நன்றி

   Delete
 6. ஹாஹாஹஹ்......பொண்ணுங்க பவம் ஜி!

  நல்ல வியாபார டெக்னிக்....ஆமாம் இப்பல்லா ஆஸ்பத்திரிகளும் வியாபார நிலையங்களா ஆகிடுச்சுல்ல....

  சீனா.....ஹாஹா வியப்புதான்......ஆனா....அது ஒரு வேளை வேறு காரணமாக இருக்குமோ....ஓரினச் சேர்க்கைக்கும் பயந்து....?!!!

  கடைசி மிகச் சரியே!  ReplyDelete
  Replies
  1. பெண் பாவம் பொல்லாதது என்பதை பொண்ணு பார்க்க வர்றவங்க புரிஞ்சிகிட்டா சரி )

   மருத்துவ சேவை என்பது போயே போச்சு )

   ஓரினக் கூத்து அங்கேயம் உண்டு என்பது வெளி உலகத்திற்கு தெரிய வந்திருச்சே )

   ஏழு பெண்டாட்டி ,எழுபது பிள்ளைன்னா எப்படி நல்ல அப்பனா இருக்கமுடியும் )

   நன்றி

   Delete
 7. வணக்கம்
  ஆகா...ஆகா... அருமையான நகைச்சுவை.... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தலைக்கீழாய் பொறந்து இப்படி ஏன் தலைக்கீழாய் அலைகிறார்கள் என்று புரியவில்லை என்பதை ரசித்தீர்களா ?
   நன்றி

   Delete
 8. Replies
  1. வாத்தியார் உங்களுக்கு தெரிந்து இருக்குமென நினைக்கிறேன்...பாரதியார் மதுரை சேதுபதி பள்ளியில் பணி புரிந்தார் .இன்றும் அந்த பள்ளி போர்டில் 'மகாகவி பாரதியார் பணியாற்றிய பெருமை உடைத்து 'என்று எழுதி இருப்பதைப் பார்க்க முடிகிறது !
   அதை படித்த பாதிப்புதான் மிஸ் சென்னை பதிவு )
   நன்றி

   Delete
 9. Replies
  1. ஜோக் சூப்பர்தான் ,சிலர் ஓசியில் திங்க அலையுறது நல்லாவா இருக்கு )
   நன்றி

   Delete
 10. என்னங்க புண்ணியம், மிஸ் சென்னை யை சிஸ்டர்னு கூப்பிட்டு ஆக வேண்டுமே !!!.

  ReplyDelete
  Replies
  1. இப்படி அழைக்கவும் உங்களுக்கு கஷ்டமா )
   நன்றி

   Delete
 11. Replies
  1. அனைத்துமேவா அய்யா ?
   நன்றி

   Delete
 12. Replies
  1. புன் சிரிப்புக்கு நன்றி

   Delete
 13. நல்ல ஐடியாவா இருக்கே...

  மிஸ் சென்னைப் பட்டம் வென்றவர் நர்ஸ் வேலைக்கு வருவாளா? சேவையா?

  Fire பிரச்னை வந்துடுமோன்னு பயமோ!

  நல்ல மனிதனா இருந்தால் எல்லாமே அதில் அடங்கிடுமே....!!!

  மொத்தத்தில் ஹா...ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. பொண்ணும் நல்லா இருக்காது ,சாப்பிடவும் நல்லா இருக்காது அந்த வீட்டிலே என்று கூட சொல்லும் நரம்பில்லாத நாக்கு )

   மிஸ் சென்னை நாலு பேரை சொல்லுங்க பார்ப்போம் )

   அதிலென்ன டௌட்)
   எல்லாமே அதில் அடக்கம்தான் )
   நன்றி

   Delete
 14. சார், நர்ஸ் ஜோக் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. மருத்துவமே வியாபாரம் ஆகிப் போச்சு ,ஆஸ்பத்திரிக்கு மிஸ் ,வோர்ல்ட் கூட விளம்பரம் செய்யக்கூடும் )
   நன்றி

   Delete
 15. உண்மை, ஒரு சிலர் இந்த பெண் பார்க்கும் படலத்தை ஒரு பொழுதுபோக்காகவே வைத்திருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. பாவம் ,இவர்களின் பொழுது போக்கிற்கு பெண்ணைப் பெற்றவர்கள் தான் கிடைத்தார்களா ?
   நன்றி

   Delete