16 October 2014

மனைவி ,சயனைட் எது பெட்டர் ?

---------------------------------------------------------
ஆனாலும் இம்புட்டு வாய் ஆகாது !

                                            '' காஸ் சிலிண்டர்  போடுகிறவரோட பெண்டாட்டிக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்னு ஏன் சொல்றே ?''
                    ''பலபேர் வீட்டிலே அடுப்பு எரிய என் வீட்டுக்காரர்தான் காரணம்னு சொல்றாளே ''!

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.....

மனைவி ,சயனைட் எது பெட்டர்  ?

                         ''என்னங்க ,சயனைட்னா என்னான்னு கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான் ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
                  ''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''

NRI க்கள் அந்நிய நாட்டில் சுதந்திர பிரஜைகள் !

அமெரிக்க நரி நாட்டாண்மை செய்தே கிடைக்கு ரெண்டு ஆடுகளை தின்று கொழுத்துப் போய் திரிவது கருத்துக்கணிப்பில் நிரூபணம் ஆகியுள்ளது ...
இருபது நாட்டவர்களின் அறிவுத்திறனை ஆய்வு செய்ததில்  கடைசி  இடம் அமெரிக்கர்களுக்குத் தானாம் !
முதலிடம் வகிப்பவர்கள்  ஜப்பானியர்களாம்...
ஹிரோசிமா ,நாகசாகியில் அணுகுண்டு விழுந்தாலும் அவர்கள் எழுந்து நிற்கிறார்கள் !
குட்டையாய் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சியில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் !
வெளிநாட்டுக்கு அறிவுத் திறனை விற்றுக் காசாக்கும் அடிமைகள் வரிசையில் நமக்கு முதல் இடம் இருக்கக் கூடும் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..
லட்டு போயி களி வந்தது டும் டும்.!
             ''கண்ணா ,லட்டு தின்ன ஆசையா ?படத்து பேரை ,கண்ணா ,களி தின்ன  ஆசையான்னு மாத்திருவாங்களா ?               
               ''ஏன்?
               ''அந்தப்பட  ஹீரோவை கைது  செஞ்சுட்டாங்களே!''

34 comments:

 1. களிதின்ன ஆசையா..நல்ல இருக்கு.

  குட்டையாய் இருந்தாலும் அவர்கள் வளர்ச்சியில் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார்கள் ! // ஆம்

  தம.1

  ReplyDelete
  Replies
  1. வியப்பை அளிக்கிறதுதானே ஜப்பானியர்களின் வளர்ச்சி )
   நன்றி

   Delete
 2. In India no respect for knowledge.Money Matters!
  USA respect their knowledge.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கருத்தைச் சொன்ன நீங்கள் உங்க பெயரையும் சொல்லி இருக்கலாமே )
   நன்றி

   Delete
 3. ''என்னங்க ,சயனைட்னா என்னான்னு கேட்டா 'அதுவும் உன்னே மாதிரிதான் ஆனால் குணத்திலே நேர் எதிர் 'னு சொல்றீங்களே ,எப்படி ?''
  ''அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !'


  ஐயோ பாவம் பொண்டாட்டிய இப்படிச் சொல்லக் கூடாது :)
  வேறு எப்படிச் சொல்லலாம் ?...சயனைட்டும் நீயும் ஒண்ணுதான்
  அப்படிச் சொல்லிப் பாருங்க! (முடிஞ்சுது கத :)))))) )

  ReplyDelete
  Replies
  1. கதையை உங்களைப் போல என்னால் கச்சிதமா முடிக்கத் தெரியலேயே)
   நன்றி

   Delete
 4. பெண்கள் எல்லோரும் தொடப்பக்கட்டை,பூரிக்கட்டை எல்லாம் எடுத்துக்கிட்டு உங்கள் விட்டு வாசல்படியில் நிக்கிறாங்களாமே?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் வந்தாங்க ...உங்களில் கணவனை தினசரி அர்ச்சனை செய்யாதவர் எவரோ ,அவர் முதலில் என் மேல் பூரிக்கட்டையை வீசக்கடவது என்று சொன்னேன் ,வந்த வழியைப் பார்த்து சென்று விட்டார்களே )
   நன்றி

   Delete
  2. துளசிதரன் ஜி ,வந்த பெண்கள் என் கேள்வியிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு ,வாசல்படியைத் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள் ...அதைப் பார்த்து இருந்தால் ,உங்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீரே வந்திருக்கும் !
   நன்றி

   Delete
 5. முதலாவது - சரியாத் தான் சொல்லி இருக்காங்க! :)

  மற்றவையும் ரசித்தேன்.

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ,அவர் புருஷன் பெரிய கொடை வள்ளல் அவர் தயவில் அடுப்பெரிய )
   நானும் உங்கள் +1யை ரசித்தேன் )
   நன்றி

   Delete
 6. ஜப்பானியர் அறிவு மிக்கவர்மட்டுமல்ல உழைப்பாளிகளும் கூட! ம்ம்ம் நம்ம மூளை ...இருக்கு ஆனால் நம்மூரில இல்ல...என் அதுக்கு காரணம் நம்மை ஆளரவங்கதான்.....கல்வித் துறையில ஊழல் இல்லாம இருந்து, ஆராய்ச்சிகள் பல நடத்தப்பட்டால், வேண்டிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டால் எந்த பசங்க நம்மூரை விட்டு போவாங்க.....சொல்லுங்க ஜி!!

  எல்லாமே ரசித்தோம் ஜி!!!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்தை இந்திய அரசு ஏன் சிந்திப்பதில்லை ?ஏன் தக்க வைத்துக் கொள்ளவில்லை ?விரைவில் வல்லரசு ஆகிவிடக் கூடாதென்றா)
   நன்றி

   Delete
 7. வணக்கம்
  இரசித்தேன்... பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. சயனைட் இங்கே விட உங்கட நாட்டில்தானே பிரபலம் ?
   நன்றி

   Delete
 8. NRI நச்.எல்லாமே சூப்பர்ஜி.

  ReplyDelete
  Replies
  1. 'நச்'சுக்கும்,சூப்பருக்கும் எங்கே உங்க த ம ?வச்சுகிட்டே இப்படி இல்லேன்னு சொல்றீங்களே )
   நன்றி

   Delete
 9. Replies
  1. உங்களின் நேற்றைய பதிவும் சூப்பர்தான் கில்லர் ஜி )அதுவும் மைத்துனரை என்னால் மறக்க முடியல )
   நன்றி

   Delete
 10. ஹா...ஹா... ஹா... ஆனா ஒருவகையில உண்மைதானே...

  ஹா...ஹா... ஹா... ச்சீ... பாவம்... அப்படி எல்லாம் சொல்லக் கூடாது!

  ம்ம்ம்ம்... உண்மைதான்.

  ஹா...ஹா... ஹா... அப்படியா? அப்படியா நடந்தது?


  ReplyDelete
  Replies
  1. ஆமா உண்மையைத்தான் சொல்லிட்டா அரிச்சந்திரன் பெண்டாட்டி )

   வாழ்க்கையில் இன்னும் நீங்க அடிபடலே போலிருக்கே )

   உண்மை உணர ஆள்வோருக்கும் தெரியலே )

   கடந்த ஆண்டு அந்தப் பட ரீலீஸ் நேரத்தில் நடந்தது ,மறந்துடுத்தா )

   நன்றி

   Delete
 11. தகவல் சூப்பர்.. எந்த காலத்துல நாட்டாண்மை பண்றவங்க அறிவோட இருந்திருக்காங்க.... சயனைட் ஜோக் சூப்பர்..

  ReplyDelete
  Replies
  1. நம்ம பதினெட்டு பட்டி நாட்டாண்மையையுமா இப்படி சொல்றீங்க )
   நன்றி

   Delete
 12. ஆஹா சூப்பர்..ஆனா மனைவி சயனைடா...இதெல்லாம் அநியாயம் சார்,

  ReplyDelete
  Replies
  1. அதுதான் நேர் எதிர்ன்னு சொல்லிட்டேனே )
   நன்றி

   Delete
 13. ''..'அது உடனே ஆளைக் கொல்லும்,ஆனா நீ அப்படி இல்லையே !''.....Aahaa!......
  Athu sati....in jail kali thaane...!...''..ஏன்?
  ''அந்தப்பட ஹீரோவை கைது செஞ்சுட்டாங்களே!''...
  Good good sitippu thaan....
  Vetha.Langathilakam

  ReplyDelete
  Replies
  1. எவ்வளோ பெரிய வித்தியாசம் )
   அவர் களி தின்றாரோ இல்லையோ ,அவர் படத்தை நாம் கண்டு 'களி 'த்தோமே)
   நன்றி

   Delete
 14. கேஸ் சிலிண்டர் ஜோக் கிளாசிக்! வாழ்த்துக்கள் சார்!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் 'மத தீவிர வியாதி'பதிவு தான் உண்மையில் கிளாசிக்!
   ரசித்து படித்தேன் !
   நன்றி

   Delete
 15. அனுபவம் இல்லாததை கேட்டா...எதைச் சொல்வது...பாகவான் ஸ்சுவிட்டா..பகவான்ஜீயா என்று கேட்டா..உடனே சொல்லிடுவனே...ஜீ

  ReplyDelete
  Replies
  1. மூணு முடிச்சு போட்டு பாருங்க ,நீங்களும் அனுபவஸ்தர் ஆயுடுவீங்க )
   மதுரையில் இருப்பதால் உங்களுக்கு பிடித்த பகவான் (ஸ்டால் ) ஸ்வீட் எனக்கும் பிடிக்குமே )
   நன்றி

   Delete
 16. கண் கெட்ட பிறகு எதற்கு ஜீ அனுபவம்....

  ReplyDelete
  Replies
  1. கண்ணாடி போட்டுக்கிற அனுபவம் கண் கெட்ட பிறகுதானே வரும் )
   நன்றி

   Delete