18 October 2014

தாலி கட்டுற நேரத்தில் இப்படி ஒரு சோதனையா ?

            ''ஐயரைப் பார்த்ததும் மேடையில் இருந்து  மாப்பிள்ளை தலைதெறிக்க ஒடுறாரே ,ஏன் ?''
            ''ஏற்கனவே ஐயரோட  பொண்ணைத்தான்  கல்யாணம் செய்துக்கிட்டு  இருந்தாராமே  !'' சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

காதல் இப்படியும் தவிக்க வைக்குமோ ?

                                   ''உனக்கு லவ் லெட்டர் கொடுத்தவர் ப்ராய்லர் கோழிக்கறிக் கடை வச்சிருப்பார் போல இருக்குன்னு ஏன் சொல்றே ?''
                                ''புரட்டாசி மாசம் எப்போ முடியும்னு 
காத்துக்கிடக்கிற ப்ராய்லர் கடைக்காரன் மாதிரி ,உன் பதிலுக்காக தவிச்சுக்கிட்டு இருக்கேன்னு எழுதியிருக்காரே !

இன்று முதல் இந்தியா 'இன்ஸ்டன்ட் 'வல்லரசு !

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 4.7 %மாக குறையுமென்று உலக வங்கி எச்சரிக்கிறது ...
2020ல் இந்தியா  வல்லரசு ஆகுமென்று அய்யா 
அப்துல் கலாம்  மிகவும் தள்ளிப் போடுகிறார் ...
2013யிலேயே வல்லரசு ஆகும் அதிசயம் நடக்கப் போகிறது ...
இன்றே நமக்கு ஆயிரம் டன் தங்கப் புதையல் கிடைக்க இருப்பதாக 'நம்பத் தகுந்த வட்டாரங்களில் 'இருந்து தகவல் வெளியாகி உள்ளது ...
உத்தரப் பிரதேசில் அரசாண்ட மன்னன் ராஜாராம் பக்ஸ்ஜி ,சாமியார் சோபன் சர்க்கார்  கனவில் தோன்றி ஆயிரம் டன் தங்கப்புதையலை  எடுத்து பாதுகாக்குமாறு அருள் வாக்கு கொடுத்துள்ளார் ...
அதன் அடிப்படையில் தொல்பொருள் துறை இன்று அகழ்வுப் பணியை ஆரம்பிக்க உள்ளதாம் !
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
"உன் பொண்டாட்டிகிட்டே ஜாடை மாடையா பாடுறத நிறுத்த சொல்லுடா !"

"என்னம்மா , பாடுனா ?"

"கிழவிக்கு என்மேல் என்னடி கோபம் நெருப்பாய் சுடுகிறதுன்னு பாடுறா !"


30 comments:

 1. இப்படி ஒரு சோதனையா?
  இப்படியும் தவிக்க வைக்குமோ?
  எப்படியும் இந்தியா வல்லரசு ஆகும்!
  பழைய பாட்டில
  மாமி-மருமகள் மோதலா?
  எல்லாம் நன்று!

  ReplyDelete
  Replies
  1. மாப்பிள்ளை எப்படியோ தப்பிச்சுட்டான்,சிக்கி இருந்தா ஐயர் அவன் மேலேயே நெய்யை ஊற்றி ஹோமம் வளர் த்திருப்பாரோ)
   இன்னிக்கு ஐப்பசி பிறந்தாச்சு,தவிப்பும் போயாச்சே )
   இப்படி ஆகிறதுக்கு வல்லரசு ஆகாமலே போகலாம் )
   தீராத மோதல் இன்றும் தொடர்கிறதே )
   நன்றி

   Delete
 2. வல்லரசு? ஆயிரம் டன்னுக்கு ...
  சம்பவம் நினைவில் வந்தது
  பெரிய கூத்தல்லவா அது...
  த. ம ஒன்று


  ஒரு நிகழ்வு ...

  ReplyDelete
  Replies
  1. ஒரு சாமியாரின் கனவை நம்பி காரியத்தில் இறங்கியது ,எவ்வளவு முட்டாள்தனமானது என்று வெளிச்சத்திற்கு வந்ததை எப்படி மறக்க முடியும் )

   உங்களின் ஒரு நிகழ்வை படித்தேன் ....
   நிகில் பவுண்டேசன் நிறுவனர் நண்பர் சோம .நாகலிங்கம் அவர் துணைவியார் மலர்க்கொடி அவர்களும் ,என் நீண்ட கால குடும்ப நண்பர்கள் .அவர்களுடன் இணைந்து நீங்களும் தொண்டு செய்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி நண்பரே !
   நன்றி

   Delete
 3. முதல் காமெடி..
  செம சிரிப்பு..

  ReplyDelete
  Replies
  1. சிறிய இடைவெளிக்குப் பின் வந்து ரசித்து சிரித்தமைக்கு நன்றி சீனி ஜி )
   நன்றி

   Delete
 4. Replies
  1. ப்ராய்லர் கோழிக்கறிக் கடைக் காரர் தவித்ததை ரசித்தீர்களா )
   நன்றி

   Delete
 5. 1. ஹா...ஹா...ஹா... "மாட்டிகிட்டாரடி மயிலக் காள..."

  2. ஹா...ஹா...ஹா...

  3. அதான் ஊத்திடுச்சே.... வல்லரசு ஆகவில்லை. 'கொல்'லென்று சிரிக்குமளவு ஆனது!

  4. ஹா...ஹா...ஹா... ரீமிக்ஸ்!

  ReplyDelete
  Replies
  1. 1.மயிலக் காள இனி வீட்டுக்குள்ளே எப்படி கால் வைக்கப் போறாரோ )

   2.தொழில் பக்தி உள்ள காதலனாய் இருப்பாரோ )

   3.சாமியார் சொல் மிக்க மந்திரமில்லை என்பது தெரிஞ்சு போச்சே )

   4.சில ரீமிக்ஸை கேட்கையில் கோபம் வரத்தானே செய்கிறது )
   நன்றி

   Delete
 6. கிழவிக்கு என் மேல்! - என்னா பாட்டுடே! :)

  இரண்டாவது அதிகம் ரசித்தேன்!

  ReplyDelete
  Replies
  1. கிழவியைக் கண்ட மருமகளுக்கு எப்படி எல்லாம் கற்பனை ஊற்றெடுக்கிறது )
   நன்றி

   Delete
 7. வணக்கம்
  முதலாவது நகைச்சுவை நன்று இரசித்து படித்து சிரித்தேன்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரெண்டாவது தடவையாய் புது மாப்பிள்ளை ஆக இருந்தவர் ஓடிட்டாரே )
   நன்றி

   Delete
 8. 1.அட கொடுமையே!
  2.ஒ! டைமிங் ஜோக்:))
  3.ஹ்ம்ம்ம்:((
  4.நான் மாமியாரை மதிக்கிற மருமகளாக்கும்:)))

  ReplyDelete
  Replies
  1. 1.ஐயருக்கே அல்வா கொடுக்க முடியுமா )
   2.இன்று ஐப்பசி ஒன்று டைமிங் சரிதானே )
   3.இப்படி வல்லரசு ஆவதை ரசிக்க முடியாதுதான் )
   4.மதிக்கிற என்பதில் எழுத்துப் பிழை ஒன்றுமில்லையே ,முத்த எழுத்து மாவா மீயா )
   நன்றி

   Delete
 9. ஹஹஹஹ...

  ஹஹஹஹஹ

  புஸ் பட்டாசு

  இது சூப்பர் மிகவும் ரசித்தோம்!

  ReplyDelete
  Replies
  1. இந்த புஸ் பட்டாசு சென்ற வருடத்தியது .இந்த வருடம் எதுவென்று ஞாபகம் வருதா )
   நன்றி

   Delete
 10. மூன்று ஜோக்ஸும் சூப்பர்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மூன்றுக்கு வாழ்த்து சொன்ன உங்களுக்கு முப்பத்துமுக்கோடி நன்றி )

   Delete
 11. அடடா...அய்யருக்கே..சோதனையா.........??

  ReplyDelete
  Replies
  1. இல்லை ஐயரால் புது மாப்பிள்ளைக்குதான் சோதனை )
   நன்றி

   Delete
 12. Replies
  1. வாவ் எது ,எல்லாமுமா )
   நன்றி

   Delete
 13. முதலிரண்டும் வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் ஜோக்குகள்!

  ReplyDelete
  Replies
  1. மௌனமாய் சிரிக்க வைத்த ஜோக்குகளை ரசித்ததற்கும் நன்றி )

   Delete
 14. புரட்டாசி மாதம் பாதிப்பு இங்கேயுமா?

  ReplyDelete
  Replies
  1. வேற எங்கே ,சொல்லுங்களேன் :)
   நன்றி

   Delete
 15. பாவம் ஐயர்.
  மருமகள் மாமியாரோடு சண்டை போடுவதற்கு புதுசு,புதுசு நீங்களே ஐடியா கொடுக்கிறீங்களே!!!

  ReplyDelete
  Replies
  1. இவர் பாவக்காடு ஐயரோ )
   இல்லேன்னாலும் ரொம்ப ஒற்றுமைதான்)
   நன்றி

   Delete