19 October 2014

புருஷனுக்கு ரொம்ப ஆசைதான்!

 -------------------------------------------------------------------------
 போலீஸ்  சார்ஜ்ன்னா  இவருக்கு  தெரியாது போலிருக்கு  !
               ''போலீஸ்காரன் என்கிட்டே எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
             ''நீங்க சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே !''

 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!

                ''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
                ''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டுமேன்னுதான்   !''

மீண்டும் வேண்டாம் , தர்ம[மில்லா]புரி சம்பவம் !

மறுபடியும் ஒரு தர்மபுரி சம்பவம் நடக்க கூடாதுன்னு வேண்டிக்குவோம் ...
ஏன்னா,மனம் உடைந்து விஷம் குடித்து இறந்த ஒரு தந்தைக்கு ...
ஒரு அரசியல்[சாதி ]வாதி மாலை மரியாதை செய்து இருக்கிறார் ...
அவர் தற்கொலைக்கு காரணம் ...
அவர் மகள் கா 'தலித் 'தது பிடிக்கவில்லை என்று கூறப் படுகிறது !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

தோசைன்னா ரொம்ப ஆசைதான்!

"இரண்டு தோசைக் கல்லை ஏன் வாங்குறே ?"
"தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்குன்னுதான் !"

34 comments:

 1. Replies
  1. சாப்பாட்டு ராமன் வாயை அடக்க வேண்டியது அவசியம்தானே )
   நன்றி

   Delete
 2. சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!
  என்ற பதிவைப் படித்ததும்
  "கண்டதை உண்டவர் வண்டியர் ஆவாரே
  கண்டதைப் படித்தவர் பண்டிதர் ஆவாரே" என்பதை
  நினைவில் மீட்க முடிகிறதே!

  ReplyDelete
  Replies
  1. வண்டியர் என்றால் வண்டி இழுப்பவர்களா )
   நன்றி

   Delete
 3. சார்ஜ் பண்ணி உள்ளவச்சு காட்டாத அந்த போலிஸ்கார் ரொம்ப நல்லவர்தான்:)
  படிப்புவாசனை:))))))))))))))))))
  இப்போ சிந்திக்கவும் ஒருபகுதி ஒதுக்கிடுறீங்க:)))
  தம 2

  ReplyDelete
  Replies
  1. அதுதானே அவர் நல்லவர்தான் )
   அது எங்கே தெரியப் போவுதுன்னு சொல்றீங்களா )
   இருந்துட்டு போகட்டுமே )
   நன்றி

   Delete
 4. மகிழ்வு ...
  சாதி வாதி? நச்.
  சார்ஜ் இப்படியும் செய்யலாமோ?

  ஹ ஹா
  நண்பர்களின் முகநூல் தகவல்கள்

  ReplyDelete
  Replies
  1. #நெடுஞ்சாலை ஓரம் உள்ள கிராமத்து மகளிர் சுய உதவிக் குழுக்களை .. அவர்களின் ஊருக்கு அருகே நெடுஞ்சாலையில் மோட்டல்களை திறக்க சொல்வது நல்லது..
   சரியான விலைக்கு பானங்களும் உணவும் கிடைக்குமே பயணிகளுக்கு ..#
   உங்களின் ஆலோசனை நடைமுறைக்கு வந்தால் நல்லது!
   நன்றி .

   Delete
 5. Replies
  1. அடுத்த ஞாயிறு மதுரையில் சந்திப்போம் கில்லர் ஜி !
   நன்றி

   Delete
  2. நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவர் திருவிழாவின் நிகழ்ச்சி நிரல் இன்று வெளியிடப் பட்டுள்ளது .அங்கு சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன் !
   நன்றி

   Delete
 6. Replies
  1. இப்படி கேட்டவன் லார்ஜ் ஏற்றிக் கொண்டிருப்பானோ )
   நன்றி

   Delete
 7. அதெப்படிங்க ஒத்த வரியில சிரிக்க வெச்சுடரீங்க...

  your jokes are always fresh.

  ReplyDelete
  Replies
  1. சுருங்கச் சொல்லி சிரிக்க வைத்தல் சிறப்புன்னு நம்ம தெருவள்ளுவர் சொல்லி இருக்காரே )
   நன்றி

   Delete
 8. அனைத்தும் அருமை தினமும் தவறாமல் தருவது உங்கள் திறமை!

  ReplyDelete
  Replies
  1. உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பால் வளர்கிறது என் திறமை !
   நன்றி

   Delete
 9. சிரிச்சு போட்டாச்சு ஓட்டு 5

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் ,இப்படித்தான் எப்பவும் சிரிச்ச முகத்தோடு ஓட்டுபோடணும் )
   நன்றி

   Delete
  2. Ippadi siricha mugathida ottu potta daltan makkal ippo Aludukittu irukkanka Bagawanjee

   Delete
  3. அழுதுகிட்டு இருப்பவர்களில் நானும் ஒருவனாச்சே ) என் அனுபவத்தைத்தான் சொன்னேன் )
   நன்றி

   Delete
 10. ''...தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்குன்னுதான் !"
  Aaha!...
  தீபாவளி நல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை ,புரோட்டா போடுற பெரிய கல்லாய் வாங்காமல் போனார் )
   நன்றி

   Delete
 11. எல்லா ஜோக்ஸுமே சூப்பர்! அதுவும் படிப்பு வாசனை ரொம்பவே சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. இதை எத்தனை தாய்மார்கள் ஒப்புக்கொண்டு ,பிள்ளைகளுக்கு வாசனையின்றி சமைத்துக் கொடுக்க ஒத்துக்கொள்வார்கள் )
   நன்றி

   Delete
 12. சூப்பர் அனைத்தும்!

  ReplyDelete
 13. ஒரு சந்தேகம்.....எந்த புருஷனுக்கு ஆசை????

  ReplyDelete
  Replies
  1. சொந்த புருசனுக்குத்தான் :)

   Delete
 14. ஜோக்குகள் சொல்லிச் சிரிக்க வைக்கிறீங்க. நல்ல கருத்துகளால் சிந்திக்கவும் வைக்கிறீங்க.

  தொடரட்டும் உங்கள் நற்பணி.

  ReplyDelete
  Replies
  1. சிரிக்கவும் ,சிந்திக்கவும் வைக்கிறதுதான் நற்பணின்னு புரிந்து கொண்டேன் :)
   நன்றி

   Delete
 15. அப்ப உங்க வீட்டுல மூணு தோசைக்கல்லா இருக்கு???

  ReplyDelete
  Replies
  1. பார்த்தா கண்ணுபடும் என்பதற்காக ஹோட்டலில் பயன்படுத்தும் ஒரே கல்லை வாங்கி விட்டேன் )
   நன்றி

   Delete