2 October 2014

'சின்ன வீடும் ' பெரிய வீட்டிலே இருக்க முடியுமா ?

  ---------------------------------------------------------------------

   

அஹிம்சைவாதி பிறந்த நாளில் ஆயுதத்தை வணங்கலாமா ?        

                

                   ''முதலாளி ,வருசா வருஷம் சிறப்பா கொண்டாடுற ஆயுத பூஜையை இன்னைக்கு மட்டும் ஏன் வேண்டாம்னு சொல்றீங்க ?''

               ''இன்னைக்கு காந்திஜி பிறந்த நாளுமாச்சே ,'ஆயுத 'பூஜையை எப்படி எப்படி கொண்டாட முடியும் ?''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

 

'சின்ன வீடும் ' பெரிய வீட்டுலே இருக்க முடியுமா ?

                                ''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு    வாங்கலாம்னு  என் 
வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''
                    ''அதுக்கென்ன இப்போ ?''
                      ''இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு யோசிக்கிறாரே ?'''குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா ?

 பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய  தெய்வம் 'கூட நிற்காமல் ...
 அவரை ஜெயிலில் தள்ளி இருக்கிறது ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார் !
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் பீல் பண்ணுவதாக தெரியவில்லை !

28 comments:

 1. 01. உண்மையிலேயே சிக்கலான விசயம் நண்பரே... சிந்திக்க வச்சிட்டேள்

  02. நல்லவேளை த்ரீ பெட்ரூம் வீடு வாங்க சொல்லலை.

  03. இதுவும் ஐயா குன்காவோட கைங்கர்யம்தான்

  ReplyDelete
  Replies
  1. 1.அஹிம்சையும் ,ஆயுதமும் சேர்ந்த அபூர்வ நாள் இன்று )

   2.அவர் வசதிக்கு இரண்டே போதும்னு நினைக்கிறாரே ))

   3.'குன்கா'க்கள் இருப்பதால் தான் இந்த ஜனநாயகத்தின் மேல் முற்றிலும் நம்பிக்கை இழக்காமல் இருக்க முடிகிறது,சரிதானே கில்லர் ஜி ? ))

   நன்றி

   Delete
 2. அஹிம்சைவாதி பிறந்த நாளில் ஆயுதத்தை வணங்கலாமா?
  'சின்ன வீடும் ' பெரிய வீட்டுலே இருக்க முடியுமா?
  'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா?
  இப்படியான வெற்றுக் கேள்விகளுக்குப் பின்னாலே
  சற்றுச் சிந்திக்க வைக்கிற நகைச்சுவை இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. மூன்று கேள்விகளும் எளிமையான கேள்விகள் தானே ,சற்றுதானே சிந்திக்க வைத்தது ))
   நன்றி

   Delete
 3. 1. அட... இப்படி ஒரு கோணம் இருக்கா... சரிதானே?

  2. அடப்பாவி... இது கூட ஐடியாதான்! :)))

  3. இது சூப்பர். அவிங்கள்ளாம் எப்பவுமே ஃபீல் பண்ண மாட்டாய்ங்க! ஒன்லி அப்பீல்!

  ReplyDelete
  Replies
  1. 1.இன்று கர்மவீரர் காமராஜர் நினைவு தினமும் கூட..இன்னும் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் இன்னொரு கோணமும் தெரியக் கூடும் )))

   2.புது வீட்டிற்கு போகும்போதே இப்படி ஒரு சோதனையா ))))

   3. அப்பீல் பண்ணாலும் தோல்விதான் )))
   நன்றி

   Delete
 4. Replies
  1. ஆயுதபாணியாய் இருந்தால் காந்திஜிக்கு பிடிக்காதுதானே ?)
   நன்றி

   Delete
 5. யாதும் ஊரே யாவரும் கேளீர்... அன்பே எங்கள் உலகத் தத்துவம்... (2) நண்பர் உண்டு பகைவர் இல்லை... நன்மை உண்டு தீமை இல்லை... (2) இனிஜுகா சம் கம் மதுரையா...! Around the World... Friendship welcomes you...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/10/Tamil-Writers-Festival-2014-4.html

  ReplyDelete
  Replies
  1. மதுரை பதிவர் திருவிழா சம்பந்தமான உங்களின் அருமையான பதிவு படித்தேன் ,ரசித்தேன் !
   நன்றி

   Delete
 6. 1. நல்ல கேள்வி.

  2. “இரண்டு ரூமுக்கும் ஒரே....”ன்னு மனைவி கேட்கவில்லை. ரொம்பவும் அப்பாவியோ?!

  3.யாதவ் மட்டுமா?

  ReplyDelete
  Replies
  1. 1.நச்சுன்னு பதிலும் கூட ))

   2.இவர் இப்படி என்றால் அவர் அப்படி நினைத்தாலும் தவறில்லை )))

   3.முதலில் அவர் ,இனிமேல் யார் யாரோ ))
   நன்றி

   Delete
 7. வணக்கம்
  இரசித்தேன் ...த.ம 6வது
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நானும் ரசித்தேன் த ம ஆறை)
   நன்றி

   Delete
 8. அட! ஆமாம் இல்ல, சரியான கேள்வியை தான் கேட்டிருக்கீங்க!!!

  ரெண்டு பெட்ரூமை கட்டி, கடைசில வரவேற்பறையில தான் தூங்க போகிறார் பாருங்க!!!

  ReplyDelete
  Replies
  1. காந்தி ஜெயந்தி என்று ஆயுதம் தொடாமல் வேலைப் பார்க்காமல் இருக்க முடியுமா ,வேலைப் பார்க்காமல் சம்பளம் கிடைக்குமா ,சம்பளம் இல்லாமல் சோறு கிடைக்குமா )

   போர்டிகோவுக்கு தள்ளாமல் போனால் சரிதான் )
   நன்றி

   Delete
 9. முதல் மிகவும் ந்ல்ல ஒரு கேள்வி! சரிதான் இல்ல?!!!!

  ஹாஹாஹாஹ்

  ஃபீல்? நெவர்! அப்பீட்டுதான்....

  ReplyDelete
  Replies
  1. காந்தியவாதின்னா இவர்தானா )

   அப்பீட்டு ஆனாலும் ஜெயிலுக்கு ரீபிட்டுதான் )
   நன்றி

   Delete
 10. என்னங்க..ஜீ.. நாட்டு நடப்பு தெரியாம......சின்ன வீடும் இப்போ பெரிய விட்டோடதானே பரப்பர அக்காரத்துல இருக்கு......

  ReplyDelete
  Replies
  1. இன்னுமா ,அங்கேயுமா )
   நன்றி

   Delete
 11. நல்ல கேள்வி.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு நீங்க போட்டிருப்பது நல்ல கமெண்ட்)
   நன்றி

   Delete
 12. நல்ல அகிம்சைவாதி! வில்லங்கமான ஆளா இருக்காரே! மூனாவது கேள்வி சரிதான்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நல்ல அகிம்சைவாதியால் இன்று கிடைக்க வேண்டிய பொரி,பழம்கிடைக்காமப் போச்சே )
   வீடு கிரஹப்பிரவேஷம் அன்னைக்கே இவருக்கு கல்தா )
   மூன்றாவது..பீல் பண்ணத் தெரிந்தால் அரசியல்வாதியா இருக்க மாட்டாரே )
   நன்றி

   Delete
 13. அகிம்சை தானே காந்தியின் ஆயுதம்! ஒருவகையில் சரிதானே

  ReplyDelete
  Replies
  1. காந்தியின் ஆயுதம் நிரம்ப வலிமையானது தான் )
   நன்றி

   Delete
 14. Replies
  1. நீங்க ரொம்ப நல்லவங்க மகேஷ் ஜி ,சின்ன வீடுன்னு சொன்னா கூட உங்களுக்கு பிடிக்காது போலிருக்கே )
   நன்றி

   Delete