20 October 2014

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ?

---------------------------------------------------

இந்த சிம்பிள் பதில் சரிதானே ?

              ''நீங்க எப்படிப்பட்ட வரனை எதிர்ப்பார்க்குறீங்க ?''
            ''அதிக சவரன் கேட்காத வரனைத்தான் !''

 சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

கடவுளும் எவ்வளவுதான்  தாங்குவார் ?

                ''சாமி சிலை நொறுங்கி கிடக்குன்னு என்னை ஏன் கைது பண்றீங்க ?''
              ''என் பாரத்தை உன் மேலே போட்டுட்டேன்னு  நீங்க சொன்னதை நாங்க கேட்டுகிட்டுதானே இருந்தோம் !''

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ?

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா என்ற  நமது பழமொழியை  பொய்ப்பித்து விட்டார்கள் சீனர்கள் ...
தம்பதிகள் இரண்டு வயது மகளை விற்று இருக்கிறார்கள் ...
இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று இருக்கிறார் ...  
வந்த காசில் இவர்கள் வாங்கியது ...
வாழ்க்கைக்கு தேவையான ...
அடிப்படை தேவைகளில் ஒன்றான ...
ஐ போனை தான்  !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

அதுவும் பாதி இதுவும் பாதியா?

             "நீங்க சைவமா ,அசைவமான்னு கேட்டா,யானை பாதி ,சிங்கம் பாதின்னு சொல்றீங்களே ,ஏன் ?"
                 "யானை சைவம்,சிங்கம் அசைவம் சாப்பிடும்,அதனாலேதான் !"22 comments:

 1. அதுவும் பாதி இதுவும் பாதி..அட நல்ல இருக்கே
  தம.1

  ReplyDelete
  Replies
  1. நல்லா இருக்கேன்னு நீங்க சொல்ற நேரத்தில் ,இன்றைய தினமலர் தீபாவளி மலரில் சைவம் பாதி ,அசைவம் பாதி என்ற தலைப்பில் செட்டிநாட்டு சமையல் குறிப்பு வெளியாகியுள்ளது.அதிசயமான ஒற்றுமைதான்!
   நன்றி

   Delete
 2. ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ?
  என்ற பதிவிற்கே 100 புள்ளி இடுவேன்
  சிறந்த பதிவு
  இவ்வாறான சமூகச் சீர்கேடுகளை
  வெளிப்படுத்துங்கள்

  ReplyDelete
  Replies
  1. செல்போன் ,ipod, லேப்டாப் போன்றவைகளின் மீதான மோகத்தால் சமூகச் சீர்கேடுகள் பெருகியுள்ளன என்பது நிதர்சனமான உண்மை !
   நன்றி

   Delete
 3. Replies
  1. கடவுளும் எவ்வளவுதான் தாங்குவார் என்பதையும் ரசித்தீர்களா ?
   நன்றி

   Delete
 4. 1.நல்ல பதில்
  2.அப்படி போடுங்க:)
  3.அதானே!!
  4.அட நம்மள மாதிரி:)
  தம 4

  ReplyDelete
  Replies
  1. 1.இதை விட தெளிவா எப்படி சொல்றது ?
   2.கடவுள் என்ன சுமைதாங்கியா ?
   3.எதை விற்று எதை வாங்குவது என்ற விவஸ்தை இல்லையா ?
   4.இந்த வகை தானே உலகில் பெரும்பான்மை ?
   நன்றி

   Delete
 5. Replies
  1. எந்த ஆள் சூப்பர்:)
   நன்றி

   Delete
 6. 1. டி.ராஜேந்தர் படம் நிறைய பார்ப்பீங்களோ?
  2. வாய் விட்டு கும்பிடுவதற்கே பயமாக இருக்கும் போல...
  3. ஐ-போன் பித்து அநியாயத்துக்கு பிடித்திருக்கிறது தான்.
  4. நான் எல்லாம் யானை ஜாதியாக்கும்....

  ReplyDelete
  Replies
  1. 1.பார்த்ததெல்லாம் அந்த காலம் :)
   2.பலரும் கும்பிடுற மாதிரி ரகசியமா பேசிக் கும்பிட்டுக்க வேண்டியதுதானே )
   3.சம்பாதிப்பவன் வாங்கி விடுகிறான் ,முடியாதவன் திருடுகிறானே )
   4.இப்படியும் பெருமைப் பட்டுக்கலாமா)
   நன்றி

   Delete
 7. வரன்- சவரன் ஆஹா...ஹா...

  ஹா...ஹா...ஹா... போலீஸ்!

  ஹா...! (இது அதிர்ச்சி 'ஹா') ஹடப்பாவிகளா!

  ஹா...ஹா...

  ReplyDelete
  Replies
  1. சவரன் கேட்கா வரனுமுண்டோ)
   கரெக்ட் ,சிரிப்பு போலீஸ் கேஸ் பிடிச்சாச்சு )
   ரொம்பத்தான் அதிர்ச்சி போலிருக்கே ..'ஹ'டப் பாவிங்களாவா)

   யானை சிங்கத்தை அடிச்சு சாப்பிடாது ,யானையை சாதுவான பிராணி எனலாமா )

   நன்றி

   Delete
 8. முதல் ஜோக் டைமிங்காக இருந்தது! கண்ணை விற்று ஓவியம் வாங்குபவர்கள் போல இவர்கள்! போலீசுக்கு எப்படியெல்லாம் கேசு சிக்குது? கடைசி ஜோக் கலக்கல்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரைமிங்காக இருக்கா அல்லது டைமிங்காக இருக்கா )
   நன்றி

   Delete
 9. ஐ ஃபோனுக்காக இப்படியுமா! :(

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. போறப் போக்கைப் பார்த்தால் கொலையே பண்ணுவாங்க போலிருக்கு: )
   நன்றி

   Delete
 10. ஐ போனுக்காக ஐ யையும் வித்திட்டாங்களே..இனி எதற்கு ஐயம்..!!!

  ReplyDelete
  Replies
  1. ஐயமே வேண்டாம் ,தலைமேலே மண்ணுதான் )
   நன்றி

   Delete
 11. //''அதிக சவரன் கேட்காத வரனைத்தான் !''//

  'கத்தை கதையா ‘ரொக்கம்’ கேட்கலாமோ!?

  ReplyDelete
  Replies
  1. அதைக் கேட்க வெட்கப்பட மாட்டார்கள் )
   நன்றி

   Delete