24 October 2014

கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

----------------------------------------------------------------------
இந்த ஆபீஸில் டேர்ன் டூட்டின்னா கஷ்டம் !
                 ''ஆபீஸில் எல்லோரும் தூங்கி வழியிறாங்க ,நீங்க மட்டும் ஏன்  தூங்கலே?''
                 ''இன்னைக்கு எனக்கு 'டேர்ன்  'டூட்டியாச்சே !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்....

அவர் கோபத்திலும் நியாயம் இருக்கே !

           ''கடன்காரங்ககிட்டே இருந்து அசலும் ,வட்டியும் 'கறந்து 'வாங்க முடியலேன்னு பாங்கை இழுத்து பூட்டிட்டு போயிடுவீங்களா ?''
           ''ஏன் இப்படி கேக்குறீங்க ?''
           ''நான் மாட்டு லோன் கேட்டா ,பால் கறக்கத் தெரியுமான்னு கேக்குறீங்களே !''


கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யபடாமல்  ,தெருக்களில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...
அவ்வாறு ஏதேனும் திருட்டு ஏற்பட்டால் தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள் !
                       இப்படி வாசகங்களை கொண்ட போஸ்டர்களை...
சேலத்தில் உள்ள ஒரு ஏரியா வீடுகளில் ஒட்டியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால் ...
மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றாது ...
நெற்றியில் அடித்துக் கொள்ளத் தோன்றும் ...
ஆமாம் ,அந்த ஏரியா காவல் நிலையத்தின் சார்பில்அந்த போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது !
அடுத்ததாக ...
உங்கள் வீட்டை கொள்ளையில் இருந்து ...
உங்கள் கற்பை  கயவர்களிடம் இருந்து ...
உங்கள் உயிரை எதிரிகளிடம் இருந்து ...
பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு ,அதையும் மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் ...
காவல் நிலையத்தை அணுக வேண்டாம் !
            இப்படி வாசகங்களைக் கொண்ட போஸ்டரை எதிர்ப்பார்க்கலாம் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

ஏன் படம் தயாரிக்கக் கூடாதா?

" மடாதிபதியை  சுற்றி ஏன் நடிகைகள் கூட்டம் ? "

" படாதிபதியாக போறாரோ  என்னவோ ? "

20 comments:

 1. வலையுலக உறவுகளே ,வரும் ஞாயிறு மதுரைக்கு வரத் தயாராகி விட்டீர்கள்தானே ?பதிவர்கள் நம் தீபாவளியை கொண்டாட வாங்க !வாங்க !

  ReplyDelete
  Replies
  1. முக்கிய பணியாய் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதால் என்னால் மதுரை வர இயலவில்லை.

   விழா சிறப்பாக நடந்து சாதனைகள் நிகழ்த்த என் வாழ்த்துகள்.

   Delete
  2. வாழ்த்துக்கு நன்றி !

   Delete
 2. அப்போ காவல்நிலையத்தை கலைத்துவிடலாம்..எதுவும் நடக்காது..

  ReplyDelete
  Replies
  1. இதைக் கொள்ளைக்காரர்களிடம் தான் கேட்கணும் )
   நன்றி

   Delete
 3. " படாதிபதியாக போறாரோ என்னவோ ? "

  இதுவும் நடக்கலாம்!

  ReplyDelete
  Replies
  1. யார் யார் படத் தயாரிப்பின் பின்னணியில் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை )
   நன்றி

   Delete
 4. வணக்கம்
  தலைவா.

  இரசிக்கவைக்கும் நகைச்சுவை பகிர்வுக்கு நன்றி... நீண்ட நாட்கள் வரவில்லை... வேலையின் நிமிர்த்தம்.. இனி வருகை தொடரும்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. அநேகமாய் தீபாவளி கவிதைப் போட்டி முடிவை வெளியிடும் வேலையில் மும்முரமாய் ஈடு பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன் !
   உங்கள் வரவை எதிர்ப்பார்க்கிறேன்.
   நன்றி

   Delete
 5. ஹாஹஹாஹ!

  பால்கார ராமராஜன் போலும்! செண்பகமே செண்பகமே!

  மடாதிபதி, படாதிபதி! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. மறக்க முடியாத நல்ல பாடல் அது )
   நன்றி

   Delete
 6. கண்ணிய முள்ள காவலர்கள்!!

  ReplyDelete
  Replies
  1. பயிரில் சில களைகள் இருக்கத்தானே செய்கிறது !
   நன்றி

   Delete
 7. வேலியே பயிரை மேய்ந்தால்
  நாடு எப்படி உருப்படும்?

  ReplyDelete
  Replies
  1. விசாரணைக் கைதி ஒருவன் நீதிபதி மேல் மனிதகழிவை வீசிய கொடுமை ,சமீபத்தில்அரங்கேறி யுள்ளதே !
   நன்றி

   Delete
 8. Replies
  1. நன்றி !
   தாங்களும் மதுரைக்கு வருவீர்கள் என எதிர்பார்த்தேன் ,கடந்த முறை சென்னையில் சந்தித்தது நினைவிலேயே இருக்கிறது !

   Delete
 9. சிறப்பான ஜோக்ஸ்! சில அசகவுர்யமான சூழலினால் மதுரைக்கு வர இயலவில்லை! ஒரு ஆண்டாக காத்திருந்தும் எனக்கு இந்த முறை சந்தர்ப்பம் சரியில்லாமல் போய்விட்டது! நன்றி!

  ReplyDelete
 10. ரசித்தேன் பகவான் ஜி்.

  காவல் நிலையம்.....(

  ReplyDelete
  Replies
  1. இன்று நடைபெறும் பதிவர் சந்திப்பின் நேரடி அலையையும் பார்த்து ரசியுங்கள் மேடம் !
   நன்றி

   Delete