31 October 2014

கனவில் நயன்தாரா வர என்ன வழின்னு கேட்காமல் விட்டாரே !

               ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
               ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
              ''ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''
சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்..

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு ?

                                            ''என்னைப் பார்க்கிறவங்க,குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா பேசுறாங்க ,அதனாலே ....''

            ''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''

                                

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !

அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..
மகாத்மா காந்தி நல்லவர்தான் ,நாட்டுக்காக பாடுபட்டவர்தான் ...
வெள்ளையருக்கு எதிராகவும் ,முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும்தான் பதினெட்டு முறை உண்ணாவிரதம் இருந்தார் ...
ஒருமுறைக் கூட இந்துக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததில்லை ...
நான் ஒரு இந்து ,ஆனால் காந்தி இந்துவாக ஒருபோதும் நடந்துக் கொள்ளவில்லை ...
முகமத் கரம்சந்த் காந்தி என்றே அவரை சொல்வேன் ...
இது ...மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் கருத்து !
அதே நேரத்தில் ...ஒரு உண்மை இந்து மறைந்தார் என கருத்தை சொன்னார் முகமது அலி ஜின்னா !
தாலிபான்களின் துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் தப்பிய மலாலா 'நான் மலாலா 'என புத்தகம் எழுதியுள்ளார் ...
அதை பாகிஸ்தானில் விற்கவிடாமல் தடைசெய்த தாலிபான்கள் ...
மலாலா எங்களிடம் சிக்குவார் ,கொல்லுவோம் என்று கொக்கரித்து இருக்கிறார்கள் !
அன்றும் ,இன்றும் ...
எந்த ம[ட ]தத் தீவிரவாதிகள்  ஆனாலும் மனிதம் மறந்துதான்  செயல்படுகிறார்கள் !

சென்ற 2012 ம் வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்.

மலை முழுங்கி அவர்தானா ?
             ''கொஞ்ச நாளைக்கு  பிறகு இப்போதான் ஊருக்கு வர்றேன் ,யானை மலை ஸ்டாப்பிலே இறக்கி விடச் சொன்னா ,கண்மாய்க் கரையில் இறக்கி விடுறீயே ,நியாயமா கண்டக்டர் ?''
              ''உங்க நியாயத்தை அங்கிருந்த மலையை  உடைச்ச குவாரி காண்ட்ராக்டர்கிட்டே போய்க் கேளுங்க ,இப்போ வண்டியை விட்டு இறங்குங்க !''


34 comments:

 1. சிரிப்பு வெடிதான் சார்.

  ReplyDelete
  Replies
  1. என்னைப் போன்றே பால பாரதியின் இசையை ரசிக்கும் நீங்கள் என் பதிவையும் ரசித்ததற்கு நன்றி !

   Delete
 2. பகல் கனவில நயன்தாராவா?
  விடிஞ்ச பிறகு குடிக்கப் போறாரா?
  மனிதம் மறந்து தான் செயல்படுகிறார்களா?
  இது நியாயமா கண்டக்டர்?
  என்றெல்லாம் சிந்திக்கிறாங்களா?
  பதிவு நல்லாய் இருக்கே!

  ReplyDelete
  Replies
  1. ஐந்து கேள்விகுறி போட்டு ஒரு ஆச்சரியக் குறி போட்டு ரசித்ததற்கு நன்றி :)

   Delete
 3. கடைசி ஜோக் தெரியலையே....

  ReplyDelete
  Replies
  1. பாமினி ஃபாண்டில் அது இருந்ததால் தெரியவில்லை என நினைக்கிறேன் ,இப்போது சரி செய்து விட்டேன் ,தெரியுதா ஸ்பை :)
   நன்றி

   Delete
 4. நல்லத் தீர்மானம்
  மிகவும் ரசித்தேன்
  இறுதி ஜோக் மட்டும் சரியாகப் பதிவாகவில்லை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. இந்த தீர்மானத்தை தெளிவாய் இருக்கும்போது எடுத்து இருப்பாரோ :)
   நன்றி

   Delete
 5. அனைத்தும் அருமை.
  கடைசி விஷயம் வேதனை.

  ReplyDelete
  Replies
  1. குவாரிகளை ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ,நல்ல மனிதர் சகாயத்தை ஆராய விடாமல் தடுப்பது வேதனைதான் !
   நன்றி

   Delete
 6. Jee Neenga Een Story Ezhutakoodatu ?
  Super

  ReplyDelete
  Replies
  1. உங்களின் எதிர்ப்பார்ப்புக்கு நன்றி !என் 'சிரி'கதைகளில் ஒன்றைப் படித்து கமெண்ட் போடுங்களேன் ,கில்லர் ஜி :)
   நன்றி

   Delete
 7. நயன்தார கனவில் வருவதற்கு சிறப்பு பூஜை ஒன்று செய்தால்.... கனவில் என்ன ? நேரிலே வரவழைக்கலாம்.ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவு செய்யனும் என்று எங்கத் தெரு ஜோசியர் ஒருவர் சொன்னார்....ஜீ

  ReplyDelete
  Replies
  1. ஜோசியர் சொல்லைக் கேட்டு சிறப்பு பூஜை செய்தால் ஜெயிலுக்குத்தான் போக வேண்டி இருக்கும் ...வேற நல்ல ஐடியா சொல்லுங்க :)
   நன்றி

   Delete
 8. பழமொழியையே மாற்றியமைத்த முதற் குடிகாரன் நான் உங்களைச்
  சொல்லவில்லை :)))))))))))

  ReplyDelete
  Replies
  1. நானும் என்னை நினைக்கலே :)
   நன்றி

   Delete
 9. டாக்டருக்கு வந்த சோதனை!

  ReplyDelete
  Replies
  1. இப்போ ராத்திரியில் கனவு காண நினைப்பவர் ,அப்புறம் அந்த கனவுக்கு என்ன பலன்னுஎன்றுகூட கேட்பார் போலிருக்கே :)
   நன்றி

   Delete
 10. பரவாயில்லை, டாக்டர் கிட்ட ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணுங்கன்னு சொல்லி முடிச்சிட்டாரு. கனவுல வேற யாராவது வரனுன்னு கேக்கலை.

  ReplyDelete
  Replies
  1. வேறு யாரு வந்தா நல்லாயிருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ? சும்மா தைரியமா சொல்லுங்க ,சொக்கன் ஜி :)
   நன்றி

   Delete
 11. முதல் ரெண்டும் சரவெடி! மத தீவிரவாதம் வேரறுக்க வேண்டிய ஒன்று! இப்படி மலையையே முழுங்கிறவங்க இருந்தா பாவம் நம்மாளு என்ன செய்யமுடியும்! பாவம்தான்!

  ReplyDelete
  Replies
  1. உண்மையிலேயே ,மலை இருந்த இடத்தில் கண்மாயே உருவாக்கியவர்கள் இன்னும் ஒரு தண்டனையும் பெறாமல் அமோகமாய் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள் ?
   நன்றி

   Delete
 12. அருமையாகச்சொன்னீர்கள்....

  ReplyDelete
  Replies
  1. மலை முழுங்கிகளைப் பற்றித்தானே :)
   நன்றி

   Delete
 13. அருமையாக சொன்னீர்கள்

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் சொல்லியிருப்பதால் நானும் சொல்லி விடுகிறேன் ....பழனியில் பக்தர்கள் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள் ,நம்ம மலை முழுங்கியிடம் சொன்னால் பழனி மலையையே மொட்டை அடித்து விடுவாரே ;)
   நன்றி

   Delete
 14. மலைவிழுங்கி ....
  ஜோக் இருந்தாலும் வலித்தது

  ReplyDelete
  Replies
  1. போன ஞாயிறு பதிவர் சந்திப்பில் மதுரை வரும் போது அழகான யானை மலையை பார்த்து இருப்பீர்கள் .அபூர்வமாய் ஒரே கல்லாலான அந்த மலையை சில வருடங்களுக்கு முன் குடைந்து சிற்பக்கலை நகரம் உருவாக்கப் போவதாக சொன்னார்கள் ,நல்ல வேளை,மக்களின் போராட்டத்தால் அந்த திட்டம் கைவிடப் பட்டது .அபூர்வக் கல் மலை தப்பித்தது :)
   நன்றி

   Delete
 15. Replies
  1. #மலைவிழுங்கி ....
   ஜோக் இருந்தாலும் வலித்தது#
   உங்களுக்கு அது வலித்தது ...
   உங்களின் த.ம ஒன்பது எனக்கு இனிக்கிறதே :)
   நன்றி

   Delete
 16. அது தானே பகலில் கனவு வராவிடில் இரவில் வரப்பண்ணனும்!..

  சரி விடிந்ததன் பிறுகு குடிப்பது சரிதான்.....

  ஆமாம் இப்போது வண்டியை விட்டு இறங்குங்க....
  நல்ல நகைச்சுவைகள் ரசித்தேன்....
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. இதுகூட பண்ணத் தெரியலைன்னா அவர் என்ன டாகடர் :)

   அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது ரொம்பச் சரிதான் :)

   இறங்கலைன்னா ,கண்மாயில் தள்ளிவிட்டு போய்விடுவார் போலிருக்கே :)

   நன்றி

   Delete
 17. மலைமுழுங்கி... - இங்கே ஒருவருக்கு இந்தப் பெயர் வைத்திருந்தோம்! :)))

  விடிந்தபின் குடிப்போம் - அது சரி!

  த.ம. +1

  ReplyDelete
  Replies
  1. நிஜமான மலைமுழுங்கிகள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் இன்னும் நடமாடிக் கொண்டிருக்கிறார்களே :)
   குடிக்கிறவன் விடிஞ்சாலும் குடிப்பான் ,விடியாவிட்டாலும் குடிப்பான் ;)
   நன்றி

   Delete